Advertisement
அசைவம்

காரசாரமான செட்டிநாடு சிக்கன் சுக்கா செய்வது எப்படி ?

Advertisement

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை விட வெளிமாநிலங்கள் செய்யபடும் ஒவ்வொரு விதமான சமையலுக்கும் தனி ருசியே இருக்கும். அந்த வகையில் நம் மக்களிடையே பிரபலமான சமையல் என்றால் செட்டிநாடு சமையல் என்று சொல்லலாம் . இந்த செட்டிநாடு சமையலை பயன்படுத்தி செய்யப்படும் பல உணவுகள் பல நபர்களுக்கு பிடித்த உணவாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : அதிக சுவையும் மணமும் தரும் செட்டிநாடு மசாலா எப்படி வீட்டில் செய்வது ?

Advertisement

இதில் அசைவ உணவுகள் தான் பெரும்பாலும் அனைவரும் தேர்வு செய்து சமைத்து சாப்பிடுவார்கள். செட்டிநாடு சமையலை பொறுத்தவரையில் அசைவ உணவுகளையு மணக்க மணக்க அதீத சுவையில் சமைத்து சாப்பிடலாம். ஆம் இன்று சிக்கன் வைத்து செட்டிநாடு சிக்கன் சுக்கா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

செட்டிநாடு சிக்கன் சுக்கா | Chettinad Chicken Sukka Recipe in Tamil

Print Recipe
வெளிமாநிலங்கள் செய்யபடும் ஒவ்வொரு விதமான சமையலுக்கும் தனி ருசியே இருக்கும். அந்த வகையில் நம் மக்களிடையே பிரபலமான சமையல் என்றால் செட்டிநாடு சமையல் என்று சொல்லலாம் . இந்த செட்டிநாடு சமையலை பயன்படுத்தி செய்யப்படும் பல உணவுகள் பல நபர்களுக்கு பிடித்த உணவாக இருக்கும். இதில் அசைவ உணவுகள் தான் பெரும்பாலும் அனைவரும் தேர்வு செய்து சமைத்து சாப்பிடுவார்கள். செட்டிநாடு சமையலை பொறுத்தவரையில் அசைவ உணவுகளையு மணக்க மணக்க அதீத சுவையில் சமைத்து சாப்பிடலாம். ஆம் இன்று சிக்கன் வைத்து செட்டிநாடு சிக்கன் சுக்கா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Fry
Cuisine Indian, TAMIL
Keyword Chicken, சிக்கன்
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 239

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

Ingredients

வறுத்து பொடி அரைக்க

  • 2 tbsp மல்லி
  • 2 tbsp மிளகு
  • 1 tbsp சோம்பு
  • 2 துண்டு பட்டை
  • 4 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • கல் பாசி சிறிது
  • 1 tbsp கசகசா
  • 7 வர மிளகாய்

சிக்கன் ஊற வைக்க

  • 1 KG சிக்கன்
  • வறுத்து அரைத்த மசாலா
  • 2 tbsp இஞ்சு பூண்டு விழுது
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ பழம் எலுமிச்சை சாறு
  • உப்பு தேவையான அளவு

சுக்கா செய்வதற்கு

  • 2 tbsp எண்ணெய்
  • 2 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • மசலாவில் ஊற வைத்த சிக்கன்
  • கொத்தமல்லி சிறிது

Instructions

  • முதலில் நாம் வாங்கி வைத்திருக்கும் சிக்கனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்கு அலசி கொள்ளுங்கள். இதனுடன் மசாலா கலந்து ஊற வைக்க செட்டிநாடு மசாலா பொடி வறுத்து அரைக்க வேண்டும்..
    Advertisement
  • அதற்காக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் மல்லி, இரண்டு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சோம்பு, இரண்டு துண்டு பட்டை, நான்கு கிராம்பு, ஒரு ஏலக்காய் சிறிது கல்பாசி, ஒரு டீஸ்பூன் கசகசா மற்றும் ஏழு வரமிளகாய் சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • நாம் கடாயில் சேர்த்த பொருட்கள் நன்கு வறுபட்டு மணம் வர தொடங்கியதும் நாம் வறுத்த பொருட்களை தனியாக ஒரு தட்டில் சேர்த்து விட்டு நன்றாக குளிர வையுங்கள். பின் வறுத்த அனைத்து பொருட்களும் நன்றாக குளிர்ந்த பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
    Advertisement
  • பின் நாம் அரைத்த செட்டிநாடு மசாலா பொடியை சிக்கனுடன் சேர்த்து அதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் அரை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பின் மசாலா கலந்த சிக்கனை ஒரு அரை மணி நேரங்கள் நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
  • அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் நம் ஊறவைத்த சிக்கனை சேர்த்து ஒரு மூன்று நிமிடங்கள் நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின்பு ஒரு பத்து நிமிடங்கள் கடாயை மூடிவிட்டு சிக்கனை வேக வைத்துக் கொள்ளுங்கள். இடையில் அப்போது அப்போது திறந்து கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
  • செட்டிநாடு சிக்கன் சுக்கா செய்வதற்கு தண்ணீர் சேர்க்க தேவையில்லை சிக்கனில் இருந்து வரும் தண்ணீர் போதுமானதாக இருக்கும். பின்பு பத்து நிமிடம் கழித்து என்னையும் சிக்கனம் தனியாக பிரிந்து வந்தவுடன்.
  • பின் சிறிது கொத்தமல்லி இலையை தூவி சிக்கனை நன்றாக கிளறி விட்டு கொள்ளுங்கள் பின் பறிமாறி கொள்ளுங்கள், அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு சிக்கன் சுக்கா இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 1KG | Calories: 239kcal | Protein: 78g | Fat: 120g | Saturated Fat: 9.8g | Sodium: 203mg | Potassium: 1230mg

English Overview: chettinad chicken sukka is one of the most important dishes in india. chettinad chicken sukka recipe or chettinad chicken sukka seivathu eppadi or chettinad chicken sukka in Tamil are a few important terms to describe this recipe in the tamil language

Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 04 மே 2024!

மேஷம் இன்று அதிகம் சாப்பிடாதீர்கள். பொருளாதாரப் பக்கம் வலுப்பெற வாய்ப்புள்ளது. இன்று வீடு பராமரிப்பு அல்லது மாற்றம் தொடர்பான திட்டங்களை…

2 மணி நேரங்கள் ago

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

12 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

14 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

14 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

15 மணி நேரங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

20 மணி நேரங்கள் ago