இனி முட்டை குழம்பு வைத்தால் இப்படி செட்டிநாடு ஸ்டைலில் செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

- Advertisement -

பொதுவாக நம் வீட்டில் முட்டை அடை குழம்பு, முட்டை உடைத்து ஊத்திய குழம்பு என்று சாப்பிட்டு இருந்திருப்போம். ஆனால் இந்த முட்டை குழம்பை ஒரு முறை செய்தால் போதும் திரும்ப திரும்ப சாப்பிட வேண்டும் என்று தோன்றும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது போல மிகவும் சுவையாக இருக்கும். விடுமுறை நாளன்று நல்ல சுவையான ஒரு அசைவ ரெசிபியை செய்து சுவைக்க நினைத்தால், செட்டிநாடு முட்டை குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

-விளம்பரம்-

செட்டிநாடு முட்டை கறி என்பது தென்னிந்திய உணவு வகைகளில் இருந்து ஒரு சுவையான மற்றும் சுவையான முட்டை கறி ஆகும். செட்டிநாட்டு உணவுப் பிரியர்கள் இந்த சுவையான முட்டைக் கறியை நிச்சயம் செய்து பார்ப்பார்கள். செட்டிநாடு உணவுமுறை என்பது தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகும், இது செட்டிநாடு பகுதியின் உள்ளூர் மக்களால் பின்பற்றப்படும் பாரம்பரிய சமையல் முறைகளிலிருந்து உருவானது.

- Advertisement -

முட்டையில் பல ஊட்டச்சத்து நன்மைகள் உள்ளன, அவை ஆரோக்கியமான உணவின் சிறந்த அங்கமாக அமைகின்றன. அவற்றில் புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, அவை உங்கள் உடலுக்கு ஆரோக்கியமானவை. இந்த முட்டை குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி சப்பாத்திக்கும் அற்புதமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, சீரக சாதம், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.

Print
5 from 1 vote

செட்டிநாடு முட்டை குழம்பு | Chettinadu egg curry recipe in tamil

பொதுவாக நம் வீட்டில் முட்டை அடை குழம்பு, முட்டை உடைத்து ஊத்திய குழம்பு என்று சாப்பிட்டு இருந்திருப்போம். ஆனால் இந்த முட்டை குழம்பை ஒரு முறை செய்தால் போதும் திரும்ப திரும்ப சாப்பிட வேண்டும் என்று தோன்றும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது போல மிகவும் சுவையாக இருக்கும். விடுமுறை நாளன்று நல்ல சுவையான ஒரு அசைவ ரெசிபியை செய்து சுவைக்க நினைத்தால், செட்டிநாடு முட்டை குழம்பு செய்து சாப்பிடுங்கள். செட்டிநாடு முட்டை கறி என்பது தென்னிந்திய உணவு வகைகளில் இருந்து ஒரு சுவையான மற்றும் சுவையான முட்டை கறி ஆகும். இந்த முட்டை குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி சப்பாத்திக்கும் அற்புதமாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: egg curry
Yield: 4 People
Calories: 67.39kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 4 வேகவைத்த முட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி                      
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு

அரைக்க

  • 2 டீஸ்பூன் மல்லி
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 6 வர மிளகாய்
  • 1/4 கப் தேங்காய் துருவல்

செய்முறை

  • முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், வேக வைத்த முட்டை சேர்த்து இரண்டு நிமிடம் பொரிக்கவும்.
  • பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், குறைவான தீயில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
  • மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.
  • அதனுடன் நறுக்கிய தக்காளி, நாம் அரைத்து வைத்துள்ள மசாலா, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் வேகவைத்து பொரித்த முட்டைகளை சேர்த்துக் கொள்ளவும்.
  • மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்கவைத்து அடுப்பை அணைத்து கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
  • அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு முட்டை குழம்பு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 67.39kcal | Carbohydrates: 0.5g | Protein: 6.64g | Fat: 4.57g | Saturated Fat: 1.6g | Sodium: 168mg | Vitamin A: 270IU | Calcium: 24.72mg | Iron: 0.91mg