காலை சிற்றுண்டி என்பது நம் மூன்று வேளை உணவுகளில் முதன்மையானது மற்றும் முக்கியமானது. பொதுவாக பெரும்பாலானோரின் வீடுகளில் இட்லி, தோசை, உப்புமா போன்ற உணவுகளே காலை உணவாக தயாரிக்கப்படுகின்றன. இவைக்கு தொட்டுக்கொள்ள ஒரெ மாதிரியான சட்னி, சாம்பார் சாப்பிட சில நேரம் சலிப்பாக இருக்கும். அப்போது புதுமாதிரியான ஏதேனும் உணவிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அப்படி இட்லி, தோசைக்கு மாற்றாக ஒரு காலை உணவை சாப்பிட விரும்புபவர்கள் செட்டிநாடு கார சட்னி முயற்சிக்கலாம். நிச்சயம் இது உங்களுக்கு பிடித்தமான ஒரு நல்ல சாய்சாக இருக்கும். இட்லி, தோசை என்றாலே அனைவருக்கும் கார சட்னி தான் நியாபகம் வரும். ஏன் கார சட்னி இருந்தால் தான் சிலருக்கு இட்லி மற்றும் தோசையை சாப்பிடவே தோன்றும். அத்தகைய கார சட்னியில் நிறைய வகைகளும் உள்ளது. அதிலும் சிலருக்கு ஸ்பெஷல் சட்னி தான் பிடிக்கும் என்றும் கூறுவார்கள். அப்படி நாம் ஸ்பெஷல் சட்னி என்றவுடன் செட்டிநாடு கார சட்னி தான் நியாபகம் வரும்.
தென்னிந்திய உணவு வகைகளில் செட்டிநாடு உணவு வகை மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. செட்டிநாடு ஸ்டைலில் எதை செய்தாலும் அது செம டேஸ்டாக இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் இவற்றின் சுவையும், ருசியும் தனித்துமானதாக உள்ளது. இந்த அற்புதமான செட்டிநாடு உணவு வகைகளில் காலை வேளையில் செய்யப்படும் உணவுகள் அல்டிமேட் சுவையில் இருக்கும். அதிலும் இட்லி, தோசைகளுக்கு பரிமாறப்படும் சட்னிகளின் ருசியே தனி தான். விதவிதமான சட்னி வகைகள் இருக்கும் போதும் கார சட்னிக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது என்று கூறலாம். முறுகலான தோசை உடன் கொஞ்சம் கார சட்னி வைத்து கொடுத்தால் அவ்வளவு அருமையாக இருக்கும். செட்டிநாடு பகுதிகளில் கிடைக்கக் கூடிய இந்த காரச்சட்னி எளிமையாக நாமும் நம் வீட்டிலேயே செய்து காட்டலாம். கமகமக்கும் செட்டிநாடு கார சாரமான கார சட்னி எப்படி செய்வது? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்த டேஸ்ட்க்காகவே கணக்கில்லாமல் இட்லி, தோசைகளை உள்ளே தள்ளலாம். மேலும் இந்த சட்னியை சப்பாத்தியுடனும் சாப்பிடலாம். அதோடு இந்த சட்னியை செய்வது சுலபம்.
செட்டிநாடு கார சட்னி | Chettinadu Kaara Chutney Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 1 கப் சின்ன வெங்காயம்
- 2 பெரிய வெங்காயம்
- 3 தக்காளி
- 5 வர மிளகாய்
- 2 டீஸ்பூன் காஸ்மீரி மிளகாய் தூள்
- 5 பல் பூண்டு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1 துண்டு வெல்லம்
- புளி எலுமிச்சை அளவு
- உப்பு தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- புளி நெல்லிக்காய் அளவு எடுத்து தண்ணீரில் ஊறவைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி, வெங்காயம், வர மிளகாய், மிளகாய்த்தூள், பூண்டு, உப்பு, சீரகம், புளி சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் செட்டிநாடு ஸ்டைல் கார சட்னி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு, இட்லி தோசை சாதம் என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்!!!