செட்டிநாடு கார சீயம் இப்படி செய்து பாருங்கள் அதுவும் ரெம்ப ஈசியா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போச்சே!

- Advertisement -

செட்டிநாடு ஸ்டைலில் சீயம் ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இதை ஒரு சிலர் மசாலா சீயம் என்றும் சொல்லுவார்கள். மிக மிக சுலபமான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் பச்சரிசியை வைத்து கூட இந்த சீயத்தை செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி பரிமாறினாலும் சூப்பரா இருக்கும்.

-விளம்பரம்-

 இந்த செட்டிநாடு கார சீயத்தை ஒரு முறை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் போதும். மீண்டும் அடுத்த முறை எப்பொழுது செய்வீர்கள் என்று உங்களைத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு அருமையான சுவையில் இருக்கும்.

- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் ஒவ்வொரு விதமாக உணவுகளை பிடித்தமானதாக சாப்பிடுவார்கள்.. ஒரு சில குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஒரு சில குழந்தைகள் நாம் தருவதை ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் குழந்தைகள் என்றாலே கொஞ்சம் மொறு மொறுவென்று ஏதாவது செய்து கொடுத்தால் பிடித்து பொய் சாப்பிடுவார்கள் அவ்வாறு குழந்தைகள் விரும்பி உண்ணும் இந்த செட்டிநாடு ஸ்டைலில் கார சீயம் இந்த முறையில் செய்து கொடுத்து அசத்துங்க. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
5 from 2 votes

செட்டிநாடு கார சீயம் | Chettinadu Kaara Seeyam In Tamil

செட்டிநாடு கார சீயத்தை ஒரு முறை குழந்தைகளுக்குசெய்து கொடுத்தால் போதும். மீண்டும் அடுத்த முறை எப்பொழுது செய்வீர்கள் என்று உங்களைத்தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு அருமையான சுவையில் இருக்கும். குழந்தைகள் ஒவ்வொரு விதமாக உணவுகளை பிடித்தமானதாக சாப்பிடுவார்கள்.. ஒரு சில குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.ஒரு சில குழந்தைகள் நாம் தருவதை ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் குழந்தைகள் என்றாலேகொஞ்சம் மொறு மொறுவென்று ஏதாவது செய்து கொடுத்தால் பிடித்து பொய் சாப்பிடுவார்கள் அவ்வாறுகுழந்தைகள் விரும்பி உண்ணும் இந்த செட்டிநாடு ஸ்டைலில் கார சீயம் இந்த முறையில் செய்துகொடுத்து அசத்துங்க. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Chettinadu Kara Suyyam
Yield: 4
Calories: 72kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 200 கிராம் பச்சரிசி
  • 200 கிராம் உளுந்தம் பருப்பு
  • 2 நறுக்கிய பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 2 கொத்து கருவேப்பிலை
  • சிறிதளவு மல்லித்தழை பொடியாக நறுக்கியது
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொறித்து எடுப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பச்சரிசியையும் உளுந்தையும் ஒன்றாக போட்டு நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். ஊற வைத்த அரிசி உளுந்தையும் ஒன்றாக கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும். வடை மாவு அளவுக்கு பக்குவமாக கட்டியாக இதை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். (தண்ணீர் ஊற்றி அரைக்க கூடாது. தண்ணீர் தெளித்து தான் இந்த மாவை அரைக்க வேண்டும்).
  • மாவு அறைபடும் போது கொஞ்சம் தண்ணீராக அரைபட்டு விட்டால், சீயம் சரியான பக்குவத்தில் வராது. மாவுக்கு தேவையான அளவு உப்பு போட்டு இந்த மாவை அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த மாவு அப்படியே இருக்கட்டும். அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் போட்டு, நன்றாக வதக்குங்கள்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நறுக்கி வைத்த பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, தேங்காய் போட்டு, இந்த வெங்காயத்துக்கு மட்டும் தேவையான அளவு உப்பு தூவி வதங்கிய இந்த மசாலா பொருட்களை அப்படியே அரைத்து வைத்திருக்கும் மாவில் கொட்டி விட வேண்டும். (உங்களுக்கு தேவை என்றால் அந்த தேங்காயை பொடியாக நறுக்கி கூட போடலாம்).
  • சூடாகவே வதக்கிய இந்த கலவையை நீங்கள் மாவில் கொட்டலாம் தவறு கிடையாது. மாவை நன்றாக கலந்து விடுங்கள். அடுப்பில் ஒரு கடாயில் சீயம் பொறிப்பதற்கு தேவையான எண்ணெயை நன்றாக சூடு செய்து விடுங்கள். இப்போது இந்த மாவை அப்படியே உங்கள் கையாலேயே எடுத்து போண்டாவாக எண்ணெய் சட்டியில் விட வேண்டும்.
  • குட்டி குட்டி போண்டாவா விடுங்க. அது அப்படியே புசுபுசுன்னு பொங்கி உப்பி சூப்பரா பெருசு பெருசா நமக்கு கிடைக்கும். மிதமான தீயில் பொன்னிறமாக இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுத்து, கூட தேங்காய் சட்னி வைத்து பரிமாறினால் சுவையான மசாலா சீயம் தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 72kcal | Carbohydrates: 45g | Protein: 4g | Fat: 2g | Saturated Fat: 0.7g | Cholesterol: 0.5mg