ருசியான செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா இப்படி ட்ரை பாருங்க! சும்மா டக்கரான ருசியில் இருக்கும்!!

- Advertisement -

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை விட வெளிமாநிலங்கள் செய்யபடும் ஒவ்வொரு விதமான சமையலுக்கும் தனி ருசியே இருக்கும். அந்த வகையில் நம் மக்களிடையே பிரபலமான சமையல் என்றால் செட்டிநாடு சமையல் என்று சொல்லலாம் .

-விளம்பரம்-

இந்த செட்டிநாடு சமையலை பயன்படுத்தி செய்யப்படும் பல உணவுகள் பல நபர்களுக்கு பிடித்த உணவாக இருக்கும். இதில் அசைவ உணவுகள் தான் பெரும்பாலும் அனைவரும் தேர்வு செய்து சமைத்து சாப்பிடுவார்கள். செட்டிநாடு சமையலை பொறுத்தவரையில் அசைவ உணவுகளையு மணக்க மணக்க அதீத சுவையில் சமைத்து சாப்பிடலாம். அவ்வகையில் இந்த செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா செய்முறை தான் பார்க்க இருக்கிறோம்.

- Advertisement -

சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே சிக்கன் தான் ரொம்பவே பிடிக்கும் பொதுவா சிக்கனை எப்படி செஞ்சாலும் சூப்பரா தான் இருக்கும் ஆனால் அதிலேயே நிறைய வெரைட்டிஸ் பண்ணி சாப்பிடும்போது சிக்கன் இன்னும் சூப்பராவே இருக்கும் அந்த வகையில் இப்போ நம்ம செட்டிநாடு ஸ்பெஷலான செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா செய்ய போறோம்.. இந்த மழைக்காலத்துக்கு ஏத்த மாதிரி மிளகு சேர்த்து செய்றதால இருமல் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு இது ரொம்பவே அருமையான ஒரு ரெசிபி. இந்த அருமையான சுவையான செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா எப்படி செய்யலாம்னு வாங்க பார்க்கலாம்

Print
4 from 4 votes

செட்டிநாடு மிளகு சிக்கன் | Chettinadu Pepper Chicken Masala In Tamil

செட்டிநாடு சமையலை பயன்படுத்தி செய்யப்படும்பல உணவுகள் பல நபர்களுக்கு பிடித்த உணவாக இருக்கும். இதில் அசைவ உணவுகள் தான் பெரும்பாலும்அனைவரும் தேர்வு செய்து சமைத்து சாப்பிடுவார்கள். செட்டிநாடு சமையலை பொறுத்தவரையில்அசைவ உணவுகளையு மணக்க மணக்க அதீத சுவையில் சமைத்து சாப்பிடலாம். அவ்வகையில் இந்த செட்டிநாடுமிளகு சிக்கன் மசாலா செய்முறை தான் பார்க்க இருக்கிறோம். இந்த மழைக்காலத்துக்கு ஏத்த மாதிரி மிளகு சேர்த்து செய்றதால இருமல் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு இது ரொம்பவே அருமையான ஒரு ரெசிபி.இந்த அருமையான சுவையான செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா எப்படி செய்யலாம்னு வாங்க பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Chettinadu Pepper Chicken Masala
Yield: 4
Calories: 381kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 டேபிள் ஸ்பூன் முழு தனியா
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 3 டீஸ்பூன் மிளகு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 கிலோ சிக்கன்
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 3 ஏலக்காய்
  • 4 வெங்காயம்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு கடாயில் முழு தனியா சீரகம் சோம்புமற்றும் காய்ந்த மிளகாய் அனைத்தையும் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்து அதனை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
     
  • பிறகு அதே கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் பட்டை கிராம்பு ஏலக்காய் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்
  • நான்கு நறுக்கிய வெங்காயத்தை இதனுடன் சேர்த்துநன்றாக பொன்னிறம் ஆகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்
  • வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் அதில் எடுத்துவைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும்
  • அதனுடன் நறுக்கிய மூன்று தக்காளியை சேர்த்துநன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி நன்றாக வதங்கியவுடன் அதில் அரை டீஸ்பூன்மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  • ஒரு கிலோ சிக்கனை இந்த வெங்காயம் தக்காளி கலவையுடன்சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் . இப்பொழுது சிக்கனை வேக வைக்க அதில் அரை லிட்டர்அளவு தண்ணீரை கலந்து 15 நிமிடங்கள் கடாயை மூடி வைக்க வேண்டும்
  • சிக்கன் பாதியளவு வெந்தவுடன் அதில் அரைத்துவைத்துள்ள பொடியை ஐந்து டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து மறுபடியும்அதனை மூடி வைத்து பத்து நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும்
  • பத்து நிமிடத்திற்கு பிறகு சிக்கன் முழுமையாகவெந்தவுடன் உப்பு அளவு பார்த்து சேர்த்துக் கொள்ள வேண்டும் . இப்பொழுது காரசாரமான செட்டிநாடு மிளகு சிக்கன்மசாலா தயார் இதனை இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாதத்தோடு சேர்த்து சாப்பிட்டால் சுவைஅருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 381kcal | Carbohydrates: 3g | Protein: 21g | Saturated Fat: 1g | Sodium: 3mg | Potassium: 709mg | Fiber: 12g | Iron: 0.2mg

இதையும் படியுங்கள் : எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை சிக்கன் வாங்கினால் ஆலப்பி சிக்கன் கறி இப்படி செஞ்சி பாருங்க!