காரசாரமான ருசியில் வறுத்து அரைத்த சிக்கன் கிரேவி இனி இப்படி செய்து பாருங்க! சுவை நாவிலே நிற்கும்!

- Advertisement -

சிக்கன் கிரேவி எப்படி வைத்தாலும் கறியின் சுவையால் அந்த கிரேவிக்குத் தேவையான சுவை கிடைத்துவிடும். இப்படி சுவையே இல்லாமல் செய்தாலே ருசி கிடைக்குமெனில் முறையாக, பக்குவமாக செய்தால் எப்படி இருக்கும்..! அப்படியான சுவைக்கான ரெசிபிதான் இது. சிக்கன் கிரேவி என்றால் கேட்கவே தேவையில்லை அதற்கு என்று ஒரு தனி உணவு பிரியர்கள் கூட்டம் உண்டு. வறுத்து அரைத்து செய்யும் சிக்கன் கிரேவியின் மசாலாக்கள் நாம் வழக்கமாக செய்யும் சிக்கன் கிரேவியில் இருந்து சற்று மாறுபடும். பல வகையான மசாலாப் பொருட்களை ஃபிரஷாக அரைத்து சமையலில் பயன்படுத்துவது இந்த உணவின் தனித்துவம். சிக்கன் கிரேவி என்பது தென்னிந்தியா முழுவதும் உள்ள உணவகங்களில் பிரபலமான உணவாகும். நீங்கள் சிக்கன் வாங்கி எப்பொழுது ஒரே மாதிரியான வகையில் குழம்பு, கிரேவி என வைத்து சாப்பிடுவதற்கு பதில் ஒரு முறை இந்த வறுத்து அரைத்த சிக்கன் கிரேவி செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இது இருக்கும்.

-விளம்பரம்-

இந்த சிக்கன் கிரேவியை அடுத்த முறையும் உங்களை இது போல் வைக்க சொல்லி தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்த ஒரு சிக்கன் ரெசிபியாக மாறிப்போகும். இந்த வறுத்து அரைத்த சிக்கன் கிரேவி சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சாதம், நெய் சாதம், ரொட்டி, தோசை, இட்லி, பூரி, பரோட்டா உடன் நன்றாக இருக்கும். ஆனால் சாதத்தில் போட்டு பிரட்டி சாப்பிடுவதை விட இவை பரோட்டாவுக்கு ஒரு அசத்தலான காம்பினேசன் ஆக இருக்கும். ஒரு முறை பரோட்டாவை இந்த வறுத்து அரைத்த சிக்கன் கிரேவியுடன் சுவைத்தால் போதும் இதனின் சுவை நாக்கிலேயே தங்கிவிடும். இந்த சுவையான வறுத்து அரைத்த சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
5 from 2 votes

வறுத்து அரைத்த சிக்கன் கிரேவி | Chicken Gravy Recipe In Tamil

சிக்கன் கிரேவி எப்படி வைத்தாலும் கறியின் சுவையால் அந்த கிரேவிக்குத் தேவையான சுவை கிடைத்துவிடும். இப்படி சுவையே இல்லாமல் செய்தாலே ருசி கிடைக்குமெனில் முறையாக, பக்குவமாக செய்தால் எப்படி இருக்கும்..! அப்படியான சுவைக்கான ரெசிபிதான் இது. சிக்கன் கிரேவி என்றால் கேட்கவே தேவையில்லை அதற்கு என்று ஒரு தனி உணவு பிரியர்கள் கூட்டம் உண்டு. வறுத்து அரைத்து செய்யும் சிக்கன் கிரேவியின் மசாலாக்கள் நாம் வழக்கமாக செய்யும் சிக்கன் கிரேவியில் இருந்து சற்று மாறுபடும். பல வகையான மசாலாப் பொருட்களை ஃபிரஷாக அரைத்து சமையலில் பயன்படுத்துவது இந்த உணவின் தனித்துவம். நீங்கள் சிக்கன் வாங்கி எப்பொழுது ஒரே மாதிரியான வகையில் குழம்பு, கிரேவி என வைத்து சாப்பிடுவதற்கு பதில் ஒரு முறை இந்த வறுத்து அரைத்த சிக்கன் கிரேவி செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இது இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Chicken Gravy
Yield: 4 People
Calories: 99.93kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1/2 கி சிக்கன்
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • கொத்தமல்லி தழை சிறிதளவு

அரைக்க :

  • 1 1/2 டீஸ்பூன் மல்லி
  • 2 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 துண்டு பட்டை
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு‌ வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு‌ வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • அதன்பிறகு சிக்கன், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து மூடி வைத்து வேக வைக்கவும். சிக்கன் வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான வறுத்து அரைத்த சிக்கன் கிரேவி தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 99.93kcal | Carbohydrates: 13.9g | Protein: 3.49g | Fat: 2.79g | Sodium: 54.8mg | Potassium: 77.95mg | Fiber: 1.26g | Vitamin A: 295IU | Vitamin C: 606mg | Calcium: 24.71mg | Iron: 4.21mg

இதனையும் படியுங்கள் : மொறு மொறுன்னு காரமா சிக்கன் சாப்பிடணும்னு ஆசையா இருந்தா இந்த கிரிஸ்பி மிளகாய் சிக்கன் இப்படி செஞ்சு பாருங்க!