சிக்கன் அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு எச்சில் ஊறும். அந்த அளவுக்கு சுவையா இருக்கக்கூடிய சிக்கன நம்ம எப்படி செஞ்சாலும் சூப்பரா இருக்கும்..குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் விரும்பி சாப்பிடற சிக்கன்ல நம்ம விதவிதமா ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம், அதே மாதிரி ஒரு வித்தியாசமான சிக்கன் கிரேவி தான் இப்ப நம்ம செய்ய போறோம். இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு வைத்து சேர்த்து சாப்பிடக்கூடிய ஒரு அருமையான சிக்கன் கிரேவி .
வார இறுதி நாட்கள் வந்தாலே அதனுடன் சோம்பேறித்தனம் வந்துவிடும். இன்று சமைக்காமல் இருக்கலாமா என்று யோசித்தாலும் வயிறும் நாவும் அசைவம் கேட்கும், வெளியே சாப்பிடுவதும் ஆரோக்கியம் இல்லை. எனவே இது போன்ற சமயத்தில் புதிதாககவும், எளிமையாகவும் அதே நேரம் அதீத சுவையில் இருக்கும் இந்த சிக்கன் கிரேவி ரெசிபி உங்களுக்கு கைகொடுக்கும். இந்த வார கடைசி நாட்களில் இந்த சிக்கன் கிரேவி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.இந்த சிக்கன் கிரேவியா ஒரு தடவை சாப்பிட்டாலே அடிக்கடி சாப்பிடணும் அப்படின்னு தோணும் அந்த மாதிரியான ஒரு ஸ்பெஷலான சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க
சிக்கன் கிரேவி | Chicken Gravy Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 டீஸ்பூன் மிளகு
- 1 டீஸ்பூன் சோம்பு
- 4 கிராம்பு
- 3 பட்டை
- 2 ஏலக்காய்
- 1 அன்னாசி பூ
- 1/2 கப் தேங்காய்
- கறிவேப்பிலை சிறிதளவு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் மல்லிதூள்
- 3 சிறிய வெங்காயம் நறுக்கியது
- 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 1/2 கிலோ சிக்கன்
- உப்பு சிறிதளவு
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
செய்முறை
- முதலில் ஒரு கடாயில் மிளகு சோம்பு பட்டை கிராம்பு, ஏலக்காய் அண்ணாச்சி பூ மற்றும் தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும் இறுதியாக கறிவேப்பிலையும் சேர்த்து வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்
- அதனை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் சிறிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்
- வெங்காயம் வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து இஞ்சி பூண்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- பிறகு தக்காளியையும் சேர்த்து நன்றாக வதங்கிய பின்னர் அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து கலந்து கொள்ளவும் அதனுடன் அரை கிலோ சிக்கனையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்
- இப்பொழுது கடாயை மூடி 20 லிருந்து 25 நிமிடங்கள் சிக்கனை வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்றாக வெந்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை ஆஃப் செய்துவிட்டு கொத்தமல்லி இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்
Nutrition
இதையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க வறுத்து அரைச்ச கோழிக்கறி இம்முறையில் செய்து அனைவரையும் அசத்துங்கள்!