- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
கோழி கறி குழம்பு அப்படின்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த கோழி கறி குழம்பு நம்ம ரொம்ப சுவையாக வறுத்து அரைச்ச கோழி கறி குழம்பு பண்ணப்போறோம். இந்த வறுத்து அரைச்ச கோழிக்கறி குழம்பு நல்ல கிரேவியா சாதத்துக்கு சப்பாத்திக்கு இட்லிக்கு தோசைக்கு பூரிக்கு எல்லாத்துக்குமே சேர்த்து சாப்பிடலாம். இந்த சுவையான வறுத்த அரைச்ச கோழிக் கறி குழம்பு எப்படி ஈசியா செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாமா. கோழி கறி அப்படின்னாலே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.
அதுல இந்த மாதிரி கோழிக்கறி கிரேவி மாதிரி செய்யும் போது அது ரொம்பவே நல்லா இருக்கும். கோழிக்கறி பிடிக்காதவங்க அப்படின்னு யாருமே இருக்க மாட்டாங்க.அவங்களுக்காக நம்ம விதவிதமான பல வெரைட்டிகள்ல கோழிக்கறி செய்து கொடுத்திருப்போம். ஆனால் இந்த மாதிரி நம்ம ஊர்களில் செய்கிற வறுத்து அரைச்ச கோழிக்கறி குழம்பு செய்து கொடுத்து பாத்தீங்கன்னா அவங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.
எப்பவும் ஒரே மாதிரியான குழம்பு, வறுவல், 65 இந்த மாதிரி பண்ணிட்டு இருக்க உங்களுக்கு இந்த மாதிரி வறுத்து அரைச்ச மசாலா வச்சு கோழிக்கறி குழம்பு செய்து கொடுக்கும்போது ரொம்பவே ருசியாவும் விரும்பியும் சாப்பிடுவாங்க. அப்புறம் அடிக்கடி இதே மாதிரி வறுத்து அரைச்ச கோழி கறி செய்து கொடுங்க அப்படின்னு உங்களை கேட்டு தொல்லை பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. சரி எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி எப்படி இந்த வறுத்து அரைச்ச கோழி கறி குழம்பு எப்படின்னு பார்க்கலாம் வாங்க.
இதையும் படியுங்கள் : கச்சிதமான காக்கிநாடா சிக்கன் கிரேவி ஒரு தரம் இப்படி காரசாரமான ருசியில் செஞ்சி பாருங்க!
Ingredients
Method
முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்து வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தனியா விதைகள், பட்டை, கிராம்பு, ஏலக்காய் ,கடல்பாசி பிரியாணி இலை சேர்த்து வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.வறுத்து எடுத்து ஆற வைத்த பொருட்கள்ஆறிய பிறகு அவைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் இஞ்சி , பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த வறுத்து அரைத்த கோழிக்கறிக்கு நாம் சேர்த்திருக்கும் காய்ந்த மிளகாய் மட்டும்தான் காரத்திற்கு காரம் தேவைப்பட்டால் நீங்கள் மிளகாய் தூளும் சேர்த்துக் கொள்ளலாம்.
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.பிறகு அதில் கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாக்களை சேர்த்து நன்றாக கலந்து விடவும். பின்பு அதில் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள கோழிக்கறியை சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.
கோழிக்கறி நன்றாக வெந்த பிறகு அதில் இறுதியாக சோம்புத்தூள், மிளகுத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி சூடாக பரிமாறினால் வறுத்து அரைத்த கோழிக்கறி குழம்பு தயார். இது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதத்தோடு சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்






