- Prep
- 5 min
- Cook
- 8 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
இன்னைக்கு நம்ம ருசியான காக்கி நாடா சிக்கன் கிரேவி எப்படி காரசாரமா எப்படி செய்றதுனு தெரிஞ்சிக்க போறோம். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷலான மசாலாக்கள் பயன்படுத்தி செய்வாங்க. அந்த மாதிரி இந்த முறை காக்கிநாடாவில் எப்படி சிக்கன் கிரேவி ரொம்பவே ருசியா பண்ணுவாங்கலோ அது மாதிரி இப்போது நாம பண்ணப்போறோம்.
ரொம்ப ருசியா சாதத்துக்கும் இட்லி, தோசை, டிபன் ஐட்டத்துக்குமே ரொம்பவே சுவையாக இருக்கும். இத சாதத்துக்கும் சேர்த்து சாப்பிடும்போது ரொம்பவே அருமையா இருக்கும். இந்த காக்கி நாடா சிக்கன் கிரேவி ரொம்ப மசாலாக்கள் நிறைய போடாம கம்மியான மசாலாக்களை யூஸ் பண்ணி ரொம்ப டேஸ்ட்டா நம்ம பண்ண போறோம். இந்த ருசியான காக்கிநாடா சிக்கன் வீட்ல இருக்க எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. சிக்கன் ரொம்ப புடிக்கும் இந்த மாதிரி சிக்கன்ல வெரைட்டியான டிஷ் செஞ்சு கொடுத்தாலும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
அதனாலதான் நிறைய நிறைய சிக்கன் உணவுகளை புதுசா சேர்ந்து செய்து கொடுக்கும் பொழுது வீட்ல இருக்குற சிக்கன் பிரியர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி இந்த மாதிரி காக்கி நாடா சிக்கன் செய்து கொடுங்கள் அப்படின்னு சொல்லி கேட்டு தொல்லை பண்ணிட்டே இருக்க போறாங்க. சரி இந்த காக்கிநாடா சிக்கனை எப்படி ருசியா செய்வது என்று தெரிந்துகொள்ள இருக்கோம் வாங்க பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து சிக்கன் சேர்த்துக் கொள்ளவும்.
இந்த சிக்கனோடு பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சிக்கன் வேகுவதற்கு தேவையான தண்ணீரை சேர்த்து வேக வைக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி , பூண்டு தக்காளி, முந்திரி சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் நன்றாக மைய அரைப்பதற்கு நீர் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கலந்து விடவும். மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு அதில் குக்கரில் இருந்து வேகவைத்துள்ள சிக்கனை மட்டும் சேர்த்து நன்றாக கலந்து விடவும். சிக்கன் வேக வைத்த தண்ணீரை தனியாக வைத்துக் கொள்ளவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்ரி, பிரியாணி இலை சேர்த்துக் கொள்ளவும்.
இதில் மிளகாய் தூள், மல்லித்தூள், மிளகு, சீரகம் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் உள்ள சிக்கனை கலந்து விட்டுக் கொண்டு அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை அதில் சேர்த்து நன்றாக இரண்டு நிமிடம் கலந்து விடவும்.
பிறகு சிக்கன் வேக வைத்த தண்ணீரை இதில் கலந்து மூடி போட்டு கொதிக்க விடவும்.சிக்கன் கிரேவியான பிறகு அதில் நெய், கொத்தமல்லி தழை தூவி இறக்கினால்.சுவையான காக்கிநாடா சிக்கன் கிரேவி தயார்.
இந்த காக்கி நாடா சிக்கன் கிரேவி இட்லி, தோசை , பூரி, சப்பாத்தியுடன் அருமையாக இருக்கும்.






