மொறு மொறு ‘சிக்கன் மஞ்சூரியன்’ ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில், கஷ்டப்படாம வீட்டிலேயே செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கணுமா?

- Advertisement -

மஞ்சூரியன் உணவு வகை அப்படிங்கறது எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். மஞ்சூரியன்ல பன்னீர் மஞ்சூரியன், மஸ்ரூம் மஞ்சூரியன், கோபி மஞ்சூரியன்,பிஷ் மஞ்சூரியன், ப்ரான் மஞ்சூரியன் நிறைய வெரைட்டிஸ் கூட இருக்கு. இத்தனை  நிறைய வெரைட்டிஸ் இருக்கு நாம இன்னைக்கு ரொம்பவே சுலபமா இப்போ செய்யப் போறது சிக்கன் மஞ்சூரியன்.

-விளம்பரம்-

எப்படி வீட்டிலேயே சிக்கன் மஞ்சூரியனை சுலபமாக செய்து சாப்பிட போறோம்  இந்த சிக்கன் மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு ரொம்ப சுவையா இருக்கும். இந்த சிக்கன் மஞ்சூரியனை சைனீஸ் ஸ்டைலில் எப்படி வீட்டிலேயே செய்வது அப்படிங்கறது தெரிஞ்சுக்க போறோம். இந்த சிக்கனில் புரதசத்து நிறையவே இருக்குது.

- Advertisement -

நம்ம உணவுல அடிக்கடி புரதச்சத்து உள்ள   சிக்கனை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது  உடலுக்கு அது ரொம்பவே நன்மையை கொடுக்கின்றது. புரதச்சத்து அதிகமாக இருப்பதனால் உடலுக்கு நல்ல வலிமைய கொடுக்கின்றது. மஞ்சூரியன் எப்போதும் சாதத்துக்கு சைடிஷா மட்டும்தான்  சாப்பிட்டு இருக்கோம்.  ஆனா இவைகள் எல்லாம் சிற்றுண்டி போலவும் சாப்பிடலாம். நமக்கு எப்படி சாப்பிட விருப்பம் இருக்கிறதோ அந்த மாதிரி மஞ்சூரியன சாப்பிடலாம். எப்படி சுலபமா சைனீஸ் ஸ்டைல சிக்கன் மஞ்சூரியன் வீட்டிலேயே செய்யலாம் அப்படினு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

Print
5 from 1 vote

சிக்கன் மஞ்சூரியன் | Chicken Manchurian Recipe In Tamil

வீட்டிலேயே சிக்கன் மஞ்சூரியனை சுலபமாக செய்து சாப்பிட போறோம்  இந்தசிக்கன் மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு ரொம்ப சுவையா இருக்கும். இந்த சிக்கன் மஞ்சூரியனை சைனீஸ் ஸ்டைலில் எப்படி வீட்டிலேயே செய்வது அப்படிங்கறது தெரிஞ்சுக்க போறோம். இந்த சிக்கனில் புரதசத்து நிறையவே இருக்குது..  ஆனா இவைகள் எல்லாம் சிற்றுண்டி போலவும் சாப்பிடலாம். நமக்கு எப்படி சாப்பிட விருப்பம் இருக்கிறதோ அந்த மாதிரி மஞ்சூரியன சாப்பிடலாம். எப்படி சுலபமா சைனீஸ் ஸ்டைல சிக்கன் மஞ்சூரியன் வீட்டிலேயே செய்யலாம் அப்படினு தெரிஞ்சிக்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: starters
Cuisine: lunch
Keyword: Chicken Manchurian
Yield: 4
Calories: 91kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 4 ஸ்பூன் சோளமாவு
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 பல் பூண்டு
  • 1 வெங்காயம்
  • 1 ஸ்பூன் தக்காளி சாஸ்
  • 1 ஸ்பூன் சில்லி சாஸ்
  • 1 ஸ்பூன் சோயா சாஸ்
  • 1 ஸ்பூன் வெள்ளை எள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை  சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனில் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசறி ஒரு 20 நிமிடம் மூடி வைக்கவும்.
  • பிறகு கலந்து வைத்துள்ள சிக்கன் கலவையில் 3 1/2 ஸ்பூன் சோள மாவு சேர்த்து அதில் சிறிதளவு மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
  • அனைத்து சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு நன்றாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பூண்டு நன்றாக வதங்கிய பிறகு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • பிறகு ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் சோளமாக சேர்த்து அதில் நீர் விட்டு கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் கலந்து வைத்துள்ள சோளமாவு சேர்த்துக் கொள்ளவும்.சோளமாவு சேர்த்ததால்  திக்காகிவரும் அப்படி திக்கான பிறகு அதில் பொரித்து எடுத்து வைத்துள்ள சிக்கன் பக்கோடாவை போட்டு நன்றாக கலந்து விட்ட வேண்டும்.
  • சிக்கன் நன்றாக கலந்த பிறகு ஒரு ப்ளேட்டில் எடுத்து அதன் மேல் வெள்ளை எள் தூவி பரிமாறினால் சைனீஸ் ஸ்டைல் சிக்கன் மஞ்சூரியன் தயார்

Nutrition

Serving: 200g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Fiber: 4g

இதையும் படியுங்கள் : ருசியான KFC பக்கெட் சிக்கன் சுலபமாக வீட்டிலயே செய்யலாம் வாங்க! இதன் ருசியே தனி தான்!