Advertisement
ஸ்நாக்ஸ்

மாலை ஸ்நாக்ஸாக ருசியான சிக்கன் மோமோஸ் இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Advertisement

இன்று நாம் மாலை நேரங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு ஸ்நாக்ஸ் உணவு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் பொதுவாக ஸ்னாக்ஸ் என்றால் முறுக்கு, வடை, சீடை, சேவு போன்ற ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடுவோம். ஆனால் இன்று நாம் சிக்கனை பயன்படுத்தி சிக்கன் மோமோஸ் செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் இது போன்ற சிக்கன் மோமோஸ் செய்து கொடுத்தால்

இதையும் படியுங்கள் : காரசாரமான யாழ்பாணம் சிக்கன் ரெசிபி செய்வது எப்படி ?

Advertisement

அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் இன்னும் வேண்டுமென்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் ஏன் பெரியவர்கள் கூட இந்த சிக்கன் மோமோஸை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இந்த மோமோஸ் இருக்கும். அதனால் இன்று இந்த சிக்கன் மோமோஸ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நம் காணலாம் வாருங்கள்.

சிக்கன் மோமோஸ் | Chciken Momos Recipe in Tamil

Print Recipe
பொதுவாக ஸ்னாக்ஸ் என்றால் முறுக்கு, வடை, சீடை, சேவு போன்ற ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடுவோம். ஆனால் இன்று நாம் சிக்கனை பயன்படுத்தி சிக்கன் மோமோஸ் செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் இது போன்ற சிக்கன் மோமோஸ் செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் இன்னும் வேண்டுமென்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் ஏன் பெரியவர்கள் கூட இந்த சிக்கன் மோமோஸை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இந்த மோமோஸ் இருக்கும்.
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword Chicken, சிக்கன்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 6 people
Calories 184

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 1 இட்லி பாத்திரம்

Ingredients

மாவு தயார் செய்ய

  • 1 கப் மைதா மாவு
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் சிறிது

சிக்கன் ஸ்டபிங் செய்ய

  • ¼ KG சிக்கன்
  • 1 tbsp பூண்டு பொடியாக நறுக்கியது
  • 1 துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது
  • 1 கப் முட்டைகோஸ் பொடியாக நறுக்கியது
  • 1 கப் கேரட் பொடியாக நறுக்கியது
  • ½ பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 கொத்து கொத்த மல்லி பொடியாக நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • ½ tbsp மிளகாய் தூள்
  • ½ tbsp மிளகு தூள்
  • 2 tbsp தண்ணீர்

Instructions

  • முதலில் ஒரு பெரிய பவுளில் தேவையான அளவு மைதா மாவு எடுத்துக் கொண்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மென்மையாக பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளுங்கள். பின் பிசைந்த மாவை ஒரு ஈரத்துணியால் மூடி வைத்துவிடவும்.
    Advertisement
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் நம் சுத்தப்படுத்தி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அரைத்த சிக்கனை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியா நறுக்கிய முட்டைகோஸ்,
  • பொடியாக நறுக்கிய கேரட், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய் தூள் மிளகுத்தூள் கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து பிசைந்து பிசைந்து கொள்ளுங்கள்.
  • பின் இதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து மறுபடியும் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். பின்பு பிசைந்து வைத்த மைதா மாவை மேசையில் வைத்து பெரிதாக தேய்த்து விடுங்கள்.
  • மாவை மெலிதாகவும் பெரிய வட்டமாகவும் தேய்த்து கொள்ளுங்கள். பின்பு உங்க வீட்டில் உள்ள வட்ட வடிவ பாத்திரத்தை எடுத்து அந்த மாவின் உள்பகுதியில் பூரிக்கு கட் செய்வது போல் சிறிய வட்ட வடிவமாக கட் செய்து அதற்குள் நாம் கலந்து வைத்திருக்கும் சிக்கனை மாவின் உட்பகுதியில் வைத்து மடித்து விடுங்கள்.
  • பின்பு ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் நன்கு கொதித்ததும் இட்லி தட்டில் எண்ணெய் தடவி நாம் தயார் செய்த மோமோஸை இட்லி தட்டில் வைத்து 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான சிக்கன் மோமோஸ் இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 250gram | Calories: 184kcal | Carbohydrates: 3g | Protein: 8g | Fat: 2g | Saturated Fat: 1.6g | Sodium: 31mg | Potassium: 672mg | Fiber: 1g | Sugar: 0.4g
Advertisement
Prem Kumar

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

6 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

6 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

6 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

7 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

7 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

11 மணி நேரங்கள் ago