Home அசைவம் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிட ருசியான சிக்கன் சமோசா இப்படி ஒரு தரம் சுலபமாக வீட்டிலயே...

அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிட ருசியான சிக்கன் சமோசா இப்படி ஒரு தரம் சுலபமாக வீட்டிலயே செய்து பாருங்கள்!

சமோசா சமோசா ரயில் நிலையங்களிலும்,  பேருந்து நிலையங்களிலும் இந்தக் குரலைக் கேட்டால் வாங்கி உண்ணா ஆட்களே இருக்க மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் மாலை நேர சிற்றுண்டி வகைகளில் சமோசாவிற்கு தனி இடம் உண்டு . முதலில் சைவ உணவில் வந்த சமோசா இப்பொழுது விதவிதமாக அசைவ உணவுகளிலும் கலந்து வர ஆரம்பித்துள்ளது. சமோசாக்களில் உருளைக் கிழங்கு சமோசா, பட்டாணி சமோசா, வெங்காய சமோசா, காலிஃபிளவர் சமோசா , அனைத்து காய்கறிகளும் கலந்த சமோசா என பல ரகம் இருந்தது போக. 

-விளம்பரம்-

இப்பொழுது முட்டை சமோசா,  சிக்கன் சமோசா, மட்டன் சமோசா, மட்டன் கீமா சமோசா என்று அசைவத்திலும் அசத்தி வருகிறது.  சமோசா பிரியர்களுக்கு இது கூடுதல் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. இப்போது சிக்கன் சமோசா சுவையாக சுலபமாக வீட்டில் செய்ய போறோம் . காரணம் சிக்கன்  மேலிருக்கும் விருப்பம் இப்போதெல்லாம் அதிகமாகிவிட்டது. மாலை நேர சிற்றுண்டிகளில் சமோசாவிற்கு தனியாக இடம் உண்டு . அப்படிப்பட்ட சமோசாவை நாம் வீட்டில் செய்து ருசிக்க முயற்சிப்போம்.  சைவ சமசாக்களை விட அசைவ சமோசாக்களின் மவுசு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

வாருங்கள் நாமும் இப்பொழுது சிக்கன் சமோசாவை செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்தி விடலாம். மாலை நேர சிற்றுண்டியாக மழை பெய்யும்நேரங்களில் சிக்கன் சமோசாவை செய்து கொடுத்து அசத்தி விடுங்கள் இதோ சிக்கன் சமோசா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Print
5 from 2 votes

சிக்கன் சமோசா | Chicken Samosa Recipe In Tamil

முட்டை சமோசா,  சிக்கன் சமோசா, மட்டன் சமோசா, மட்டன் கீமா சமோசாஎன்று அசைவத்திலும் அசத்தி வருகிறது.  சமோசாபிரியர்களுக்கு இது கூடுதல் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. இப்போது சிக்கன் சமோசா சுவையாகசுலபமாக வீட்டில் செய்ய போறோம் . காரணம் சிக்கன் மேலிருக்கும் விருப்பம் இப்போதெல்லாம் அதிகமாகிவிட்டது. மாலை நேர சிற்றுண்டிகளில்சமோசாவிற்கு தனியாக இடம் உண்டு . அப்படிப்பட்ட சமோசாவை நாம் வீட்டில் செய்து ருசிக்கமுயற்சிப்போம்.  சைவ சமசாக்களை விட அசைவ சமோசாக்களின்மவுசு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Chicken Samosa
Yield: 4
Calories: 91kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

சமோசா ஷீட் செய்ய:

  • 1/4 கிலோ மைதா மாவு
  • 1 டீஸ்பூன் உப்பு
  • எண்ணெய் சிறிதளவு
  • தண்ணீர் தேவையான அளவு

சிக்கன் மசாலா செய்ய:

  • 4 வெங்காயம்
  • 1/2 கிலோ சிக்கன்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • தண்ணீர் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

பொரிக்க:

  • 1 லிட்டர் எண்ணெய்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் மிதமான சூட்டில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மைதாமாவை அரை மணி நேரம் தனியாக எடுத்து வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
  • அடுப்பில் ஒரு கடாயை  வைத்து சூடாகியதும் தேவையான அளவுஎண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  •  வெங்காயம் சேர்த்து நன்றாக  வதக்கி பின் நறுக்கி வைத்துள்ள சிக்கன் , மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும் . இஞ்சி பூண்டு பேஸ்ட் ,மிளகாய் தூள்,  கரம் மசாலா, தேவையான அளவு உப்புசேர்த்து நன்றாக வதக்கவும்
  • பிறகு சிக்கன் நன்றாக வேகும் அளவிற்கு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு தண்ணீர் வற்றும் வரைநன்றாக மூடி வைத்து கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.
  • இப்பொழுது தனியாக எடுத்து வைத்துள்ள மைதா மாவை பரோட்டாவிற்கு மாவு தேய்ப்பது போல் மெல்லிசாக தேய்த்துக்கொண்டு நீளவாக்கில் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் .
  • வெட்டி வைத்துள்ள துண்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து மீண்டும் மெலிதாக  வட்ட வடிவில் தேய்த்துக் கொள்ள வேண்டும். வட்ட வடிவில் தேய்த்துள்ள சீட்டை இரண்டு பாதியாக கட் செய்து ஒரு பாதியை கையில் சுருள் போல் சுருட்டிகொள்ள வேண்டும்.
     
  • அந்த சமோசா சுருளில் செய்து வைத்த சிக்கன் மசாலாவை வைத்து சமோசா வடிவில் மூடிக்கொள்ள வேண்டும். இதே போல் சமோசாக்களை பொரிப்பதற்கு தயார் செய்து கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு கடாயில் சமோசாக்களை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் சமோசாக்களை அதில் போட்டு பொன்னிறமாக வரும் வரை நன்றாக வறுத்து எடுக்க வேண்டும்.
  • இதோ சுவையான சிக்கன்  சமோசா தயார்..

Nutrition

Serving: 200g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Fiber: 1g

இதையும் படியுங்கள் : இனி சிக்கன் சுக்கா செய்ய நினைத்தால் மதுரை ஸ்டைலில் சிக்கன் சுக்கா இப்படி செஞ்சி பாருங்கள்!