ஒரு முறை சில்லி பிரெட் செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்!

- Advertisement -

சமையல் பண்ணனும் அப்படின்னு நினைச்சாலே வர பெரிய பிரச்சனை என்ன அப்படின்னு சொல்லுங்க பார்க்கலாம். சாப்பாட்டுக்கு தயார் பண்றது கூட பிரச்சனை இல்லைங்க என்ன சமைக்கிறது அப்படிங்கறத நம்ம எல்லாருக்கும் இருக்கு பெரிய பிரச்சனை. டெய்லி என்ன குழம்பு வைக்கிறது என்ன டிபன் பண்றது இப்படியே என்ன சமைக்கிறதுன்னே தெரியாமல் உட்கார்ந்து இருக்கிறதுதான் இப்ப இருக்கிற இல்லத்தரசிகளுடன் பெரிய பிரச்சினையாக இருக்கு.

-விளம்பரம்-

பொதுவா வீட்ல இருக்க ஹவுஸ் வைஃப் இருந்தாலும் சரி வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி அவங்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன சமைக்கிறது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும். டிபன்னாலே நமக்கு ஞாபகம் வருவது இட்லி, தோசை சப்பாத்தி பூரி பொங்கல் இதுதான் ஆனா அதுவே சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிச்சு போயிருக்கும். அதனால டிஃபரண்டா சமைச்சு கொடுங்கன்னு வீட்ல இருக்குறவங்களும் கேட்டுக்கிட்டே தான் இருப்பாங்க. ஆனா என்ன செய்றதுன்னு தாய்மார்களுக்கு எரிச்சலா தான் இருக்கும். அதுக்குதா நான் இப்போ பிரெட் வச்சு செய்யக்கூடிய சில்லி பிரெட் எப்படி செய்யறதுன்னு சொல்ல போறேன்.

- Advertisement -

ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய இந்த சில்லி பிரெட் கண்டிப்பா வீட்ல இருக்க எல்லாருக்கும் பிடிக்கும். சில பேருக்கு பிரெட் டோஸ்ட் புடிக்காம இருக்கும் அவங்களுக்கு இந்த சில்லி பிரெட் கொடுத்தீங்கன்னா அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அந்த டேஸ்டான சில்லி பிரெட் எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

Print
3.50 from 2 votes

சில்லி பிரெட் | Chilli bread recipe in tamil

பொதுவா வீட்ல இருக்க ஹவுஸ் வைஃப் இருந்தாலும் சரி வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி அவங்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன சமைக்கிறது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும். டிபன்னாலே நமக்கு ஞாபகம் வருவது இட்லி, தோசை சப்பாத்தி பூரி பொங்கல் இதுதான் ஆனா அதுவே சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிச்சு போயிருக்கும். அதனால டிஃபரண்டா சமைச்சு கொடுங்கன்னு வீட்ல இருக்குறவங்களும் கேட்டுக்கிட்டே தான் இருப்பாங்க. ஆனா என்ன செய்றதுன்னு தாய்மார்களுக்கு எரிச்சலா தான் இருக்கும். அதுக்குதா நான் இப்போ பிரெட் வச்சு செய்யக்கூடிய சில்லி பிரெட் எப்படி செய்யறதுன்னு சொல்ல போறேன்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: bread, Chilli
Cuisine: tamilnadu
Keyword: bread chilli, Bread dosa, palli palayam chikan
Yield: 6 People
Calories: 159kcal
Cost: 50

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 5 பிரெட்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 1 ஸ்பூன் தக்காளி சாஸ்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பிரெட் களை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பிரெட்களை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
  • மறுபடியும் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், நறுக்கிய  வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளியை சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்
  • அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு பொரித்து வைத்துள்ள பிரெட்களை சேர்த்து தக்காளி சாஸ் மற்றும் கொத்தமல்லி தழைகளை சேர்த்து இறக்கினால் சில்லி பிரெட் தயார்.

Nutrition

Calories: 159kcal | Carbohydrates: 75g | Protein: 20g | Fat: 15g