பொதுவா வீட்ல இருக்க ஹவுஸ் வைஃப் இருந்தாலும் சரி வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி அவங்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன சமைக்கிறது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும். டிபன்னாலே நமக்கு ஞாபகம் வருவது இட்லி, தோசை சப்பாத்தி பூரி பொங்கல் இதுதான் ஆனா அதுவே சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிச்சு போயிருக்கும்.
அதனால டிஃபரண்டா சமைச்சு கொடுங்கன்னு வீட்ல இருக்குறவங்களும் கேட்டுக்கிட்டே தான் இருப்பாங்க. ஆனா என்ன செய்றதுன்னு தாய்மார்களுக்கு எரிச்சலா தான் இருக்கும். அதுக்குதா நான் இப்போ இட்லி வச்சு செய்யக்கூடிய சில்லி இட்லி எப்படி செய்யறதுன்னு சொல்ல போறேன். ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய இந்த சில்லி இட்லி கண்டிப்பா வீட்ல இருக்க எல்லாருக்கும் பிடிக்கும். சில பேருக்கு இட்லி புடிக்காம இருக்கும் அவங்களுக்கு இந்த சில்லி இட்லியா கொடுத்தீங்கன்னா அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அந்த டேஸ்டான சில்லி இட்லி எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்
சில்லி இட்லி | Chilli Idly Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 5 இட்லி
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
- 1/2 டீஸ்பூன் உப்பு
- 20 மில்லி தண்ணீர்
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 60 மில்லி எண்ணெய்
- கொத்தமல்லி இலை சிறிதளவு
- 1 டேபிள்ஸ்பூன் தக்காளி சாஸ்
செய்முறை
- முதலில் இட்லி களை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் 40 மில்லி அளவு எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய இட்லிகளை போட்டு பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும்.
- மறுபடியும்அதே கடாயில் இருவது மில்லி அளவு எண்ணெய் ஊற்றி சீரகம் நறுக்கிய பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளியை சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு பொரித்து வைத்துள்ள இட்லிகளை சேர்த்து டொமேட்டோ சாஸ் மற்றும் மல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சில்லி இட்லி தயார்
- எப்பொழுதும் ஒரே மாதிரியாக சமைக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக இந்த சில்லி இட்லியை உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் சமைத்துக் கொடுங்கள் அட்டகாசமாக இருக்கும்
Nutrition
இதையும் படியுங்கள் : காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி இப்படி செய்து கொடுத்து பாருங்க! கூட ரெண்டு இட்லி , தோசை சேர்த்து சாப்பிடுவாங்க!