ஆங்கில மாதத்தில் முதல் மாதமான ஜனவரி மாதம் பிறக்கின்ற போது ஆங்கில புத்தாண்டாக உலகம் முழுவதும் கொண்டாடுவோம் அதேபோல் தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை 1 அன்று சித்திரை திருநாளாக தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த சித்திரை மாதம் ஆனது கடவுளுடன் தொடர்புடைய ஒரே மாதமாகும் அதனால் இந்த சித்திரை 1 அன்று விரதம் இருப்பது மிகவும் சிறந்தது. சித்திரை முதல் நாள் என்று பஞ்சாங்கம் படிப்பதும் மிகவும் சிறந்தது. சித்திரை முதல் நாள் அன்று விரதம் இருப்பது நமக்கு முழு பலன்களைத் தரும்.
சித்திரை திருநாள்
வசந்தகாலத்தில் ஆரம்பமாக சித்திரை திருநாள் கருதப்படுகிறது. சித்திரை ஒன்றாம் தேதியை தமிழ் மக்கள் சித்திரை திருநாளாகவும் கேரள மக்கள் விசுவாகவும் கொண்டாடுவார்கள். ஜோதிட ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் சித்திரைத் திருநாள் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.
2024 தமிழ் புத்தாண்டு
எப்பொழுதும் தமிழ் மாதங்கள் தலைமையாக இருக்கக்கூடிய சூரிய பகவானின் இயக்கத்தை வைத்தே கணக்கிடப்படுகிறது. 12 ராசிகளான மேஷம் முதல் மீதம் வரை சூரிய பகவான் சுற்றும் பயணத்தை முடித்துவிட்டு மறுபடியும் தேசத்தில் தன்னுடைய பயணத்தை தொடர்வார்.60 ஆண்டுகள் கொண்டு தமிழ் ஆண்டுகளில் தற்போது நடைபெற்று வரும் சோபகிருது ஏப்ரல் 13 ம் தேதியோடு முடிவடைந்து ஏப்ரல் 14 ம் தேதி அன்று குரோதி என்றழைக்கப்படும் புதிய வருடம் தொடங்குகிறது.
தமிழ் புத்தாண்டு சிறப்புகள்
சூரிய பகவான் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு நுழைவார் ஏற்கனவே குருபகவான் மேஷ ராசியில் தான் உள்ளார். குரு பகவானோடு சூரிய பகவானும் சேர உள்ளதால் அந்த நாள் மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. ஜோதிட ரீதியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இந்த சூரியன் குரு சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமைகளில் சித்திரை பிறப்பதால் இன்னும் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் முருகப்பெருமானுக்குரிய சஷ்டியும் பெருமானுக்கு உரிய திருவோணமும் சேர்ந்து வருவதால் இந்த வருட தமிழ் புத்தாண்டு மிகவும் சிறப்பான நாளாகும்.
குரோதி வருட பொது பலன்கள்
குரு பகவான் சூரிய பகவான் சேர்க்கையால் இந்த ஆண்டு திருமண தடைகள் இருந்தவர்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் மேலும் நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குரு சூரியன் போன்றவைகளின் சேர்க்கையால் இந்த ஆண்டு இந்த கிரகங்கள் மிகவும் வலிமையாக இருப்பதால் இந்த கிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள் ஜோதிட ரீதியாக தடைபெறும். மேலும் நீண்ட காலமாக கொடிய நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு இந்த ஆண்டு நல்லவைகளை நடக்கும்.
சித்திரை திருநாள் அன்று வழிபாடு செய்ய வேண்டிய நேரங்கள்
ஏப்ரல் 13ஆம் தேதி காலை 5.01 மணிக்கு சஷ்டி திதி தொடங்கி ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 4.47 மணி வரைக்கும் சஷ்டியுடன் வளர்பிறையும் உள்ளது. ஏப்ரல் 13ஆம் தேதி அன்று மாலையே வழிபாடு செய்வதற்கு பூஜை அறையில் மா பலா வாழை மற்றும் பிற பழங்கள் தானியங்கள் நகைகள் பணம் அனைத்தையும் வைத்து அதன் அருகில் கண்ணாடி ஒன்றையும் வைத்துவிட வேண்டும். ஏப்ரல் 14ஆம் தேதி காலை அன்று தூங்கி எழுந்தவுடன் பூஜை அறையில் வைத்துள்ள அனைத்து பொருட்களையும் பார்த்துவிட்டு உடனே கண்ணாடியில் நம் முகத்தையும் பார்க்க வேண்டும். ஏப்ரல் 13 மற்றும் 14 முழுமையாக சஷ்டி இருப்பதால் சஷ்டியையும் தமிழ் புத்தாண்டையும் சேர்த்து வழிபடலாம்.
16 வகையான செல்வத்தை சேர்க்க கூடிய வழிபாடு
தமிழ் புத்தாண்டு அன்று காலை 7:30 மணியிலிருந்து 8:30 மணி வரை தமிழ் புத்தாண்டு வழிபாடு செய்வதற்கு உகந்த நேரம். அந்த நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை அறையில் உள்ள தெய்வங்கள் அனைத்திற்கும் பூ போட்டு குலதெய்வம் சூரிய பகவான் மற்றும் மகாலட்சுமி தேவி மூவரையும் வேண்டிக் கொள்ள வேண்டும். வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்று வணங்க வேண்டும். புதிய ஆண்டில் வரும் பலவிதமான உணர்வுகளை சவால்களை சந்தித்து அதனை எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறட்டும் வீட்டில் அறுசுவை உணவுகளை சமைத்து தெய்வத்திற்கு படைத்து நாமும் உண்ண வேண்டும். இந்த தமிழ் புத்தாண்டு அன்று இந்த வழிபாட்டை செய்த வீட்டில் பண வரவையும் செல்வ வளத்தையும் அதிகரிக்க செய்யுங்கள்.
இதனையும் படியுங்கள் : உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு நீங்க இந்த வழிபாடு செய்யுங்கள் ?