Home ஸ்வீட்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டீ டைம் சாக்லேட் கேக் ஒருமுறை செய்து பாருங்களேன்!!!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டீ டைம் சாக்லேட் கேக் ஒருமுறை செய்து பாருங்களேன்!!!

சாக்லேட் என்று கூறினால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் இந்த சாக்லேட். இந்த சாக்லேட்டை கொண்டு பல விதமான ஸ்வீட் வகைகளும் ஐஸ்கிரீம் வகைகளையும் கேக் வகைகளையும் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது.

-விளம்பரம்-

இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே சாக்லேட் கேக் செய்து அசத்துங்கள். பொதுவாக வீடுகளில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்திற்கு சுவையான டீயுடன் ஸ்நாக்ஸ் வகைகள் எடுத்து கொள்வார்கள். அந்த வகையில் இது போன்ற நேரங்களில் வீட்டிலிருக்கும் அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் வகையில் வீட்டிலுள்ள பொருட்களை வைத்து ஸ்நாக்ஸ் செய்யலாம். இவைகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவர் என்று கூறினாலும் குறிப்பாக குழந்தைகள் சாக்லேட் கேக்கினை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் எவ்வளவு கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். மீண்டும் வேண்டும் என்று கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கேக் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்றவை. இந்த கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள், நிச்சயதார்த்தம், ஆண்டுவிழா போன்ற தினங்களுக்கும், சில வகையான பண்டிகை நாட்கள் அதாவது கிருத்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களுக்கும் வெட்டி மகிழலாம்.

Print
No ratings yet

டீ டைம் சாக்லேட் கேக் | Chocolate Cake Recipe In Tamil

சாக்லேட் என்று கூறினால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் இந்த சாக்லேட். இந்த சாக்லேட்டை கொண்டு பல விதமான ஸ்வீட் வகைகளும் ஐஸ்கிரீம் வகைகளையும் கேக் வகைகளையும் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே சாக்லேட் கேக் செய்து அசத்துங்கள்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: Dessert
Cuisine: Indian
Keyword: Chocolate Cake
Yield: 4 People
Calories: 216kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 ஓவன்

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் மைதா
  • 2 முட்டை
  • 2 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  • 1/2 கப் சர்க்கரை
  • 4 டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர்
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • 1/4 கப் பால்
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

செய்முறை

  • முதலில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கோகோ பவுடர் ஆகியவற்றை நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும்.
  • முட்டையை ஒரு பவுளில் உடைத்து ஊற்றி அதனை நன்றாக பீட் செய்து கொள்ளவும். பின் அதனுடன் சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
  • முட்டை நன்றாக நிறம் மாறி வெள்ளையாக கிரீம் போல் இருக்கும் அதுவரை நன்றாக பீட் செய்து கொள்ளவும். பின் அதனுடன் எண்ணெயும் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளவும்.
  • பின் சலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக முட்டை கலவையில் சேர்த்து மெதுவாக கலந்து விடவும். அதன்பிறகு பால் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் பட்டர் பேப்பர் வைத்து சாக்லேட் கேக் மாவு கலவையை ஊற்றவும். பின்‌ ஓவனை பிரீ ஹீட் செய்த அவனில் 180 டிகிரி செல்சியஸ்ஸில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சாக்லேட் கேக் தயார். இது ஆறியவுடன் வெட்டி துண்டுகள் போட்டு டீ டைம்மில் பரிமாறவும்.

Nutrition

Serving: 400g | Calories: 216kcal | Carbohydrates: 25g | Protein: 8.1g | Fat: 3.6g | Sodium: 32mg | Potassium: 120mg | Fiber: 2.6g | Sugar: 4.3g | Vitamin A: 7IU | Vitamin C: 57mg | Calcium: 15mg | Iron: 6mg

இதனையும் படியுங்கள் : சூப்பரான லாவா கேக் இப்படி ரெம்ப சுலபமாக வீட்டிலயே செஞ்சு பாருங்க அஞ்சு நிமிஷத்துல எல்லாமே காலி ஆகிவிடும்!