குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாக்லேட் வைத்து ருசியான சாக்லேட் கேக் ஒருமுறை செய்து பாருங்களேன்!!!

- Advertisement -

பொதுவாக அனைவருக்கும் பேக்கரியில் இருக்கின்ற அனைத்து உணவுகளுமே மிகவும் பிடித்தமானதாக இருக்கும். காரணம் மிகவும் அருமையான ருசியில் அங்கு அனைத்து பொருட்களுமே நமக்கு கிடைக்கும். அதிலும் இனிப்பு பொருட்கள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இப்பொழுதெல்லாம் குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் இனிப்பு பொருட்களை விரும்பி உண்ணுகிறார்கள்.

-விளம்பரம்-

அதிலும் பேக்கரியில் கிடைக்கின்ற கேக் வகைகள் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். கேக்குகளில் பலவகையான கேக்குகள் உண்டு. ஸ்பான்ஜ் கேக் மில்க் கேக் ,பட்டர் கேக், புட்டிங் கேக், ரவா கேக் என கேக் வகைகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு நிறைய வெரைட்டீஸ் கேக் வகைகளில் உண்டு. கேட்டவிர குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றால் அது சாக்லேட் தான். சாக்லேட் களை வைத்து செய்யக்கூடிய ஒரு அருமையான சாக்லேட் கேக் எப்படி செய்வது என்று நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

அதிலும் வீட்டிலேயே எப்படி பேக்கரி சுவையில் செய்வது என்று பார்க்கப் போகிறோம். வீட்டில் கேக் செய்வது கடினமான வேலை என்று நினைத்துக் கொண்டிருப்போம் ஆனால் மிகவும் சுலபமாக வீட்டிலேயே இந்த சாக்லேட் கேக் நம்மால் செய்ய முடியும். அதிலும் மிக குறைவான பொருட்களை வைத்தே நம்மால் இந்த சாக்லேட் கேக்குகளை சுலபமாக சுவையாக செய்ய முடியும். வாங்க இந்த சாக்லேட் கேக் எப்படி ருசியா செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

சாக்லேட் கேக் | Chocolate Cake Recipe In Tamil

பேக்கரியில் கிடைக்கின்ற கேக் வகைகள் என்றால்அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். கேக்குகளில் பலவகையான கேக்குகள் உண்டு. ஸ்பான்ஜ்கேக் மில்க் கேக் ,பட்டர் கேக், புட்டிங் கேக், ரவா கேக் என கேக் வகைகளை நாம் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு நிறைய வெரைட்டீஸ் கேக் வகைகளில் உண்டு. கேட்டவிர குழந்தைகளுக்குமிகவும் பிடித்தமான ஒன்று என்றால் அது சாக்லேட் தான். சாக்லேட் களை வைத்து செய்யக்கூடியஒரு அருமையான சாக்லேட் கேக் எப்படி செய்வது என்று நாம் பார்க்க போகிறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: Chocolate Cake
Yield: 4
Calories: 94kcal

Equipment

  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 150 கிராம் வெண்ணெய்
  • 200 கிராம் சர்க்கரை
  • 250 கிராம் மைதா
  • 3 முட்டை
  • டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • டேபிள் ஸ்பூன் கொக்கோ பவுடர்

செய்முறை

  • வெந்நீரில் முதலில் கொக்கோ பவுடரை போட்டு நன்றாககலக்க வேண்டும்.ஒரு பாத்திரத்தில் வெண்ணையையும் சர்க்கரையையும் சேர்த்து நன்றாக கரையும்வரை கலந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு முட்டைகளை ஒவ்வொன்றாக அதில் சேர்த்து நுரை பொங்கும் அளவிற்கு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.
  •  
    கலந்து வைத்துள்ள கொக்கோ கலவையை அதில் சேர்த்து விட்டு பிறகு மைதாவையும் பேக்கிங் பவுடரையும் சலித்து அதில் சேர்க்க வேண்டும்.
  • பிறகு அதனை மிகவும் அழுத்தம் கொடுத்து கலக்காமல் லேசான அழுத்தத்தில் கிளற வேண்டும்.
  • பிறகு ஒரு குக்கரில் உப்பு சேர்த்து அதன் மேல்ஒரு ஸ்டாண்ட் வைத்து விசில் கேஸ் கட் எதுவும் சேர்க்காமல் 10 நிமிடங்கள் சூடு செய்துகொள்ள வேண்டும்.கேக் செய்யப் போகும் பாத்திரத்தில் சிறிதளவு வெண்ணையை தடவி விட்டு கேக் கலவையை அதில் ஊற்ற வேண்டும்.
  • குக்கர் நன்றாக சூடான பிறகு 10 நிமிடங்கள்கழித்து இந்த கேக் கலவை உள்ள பாத்திரத்தை அதில் வைத்து 45 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால்சுவையான சாக்லேட் கேக் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 94kcal | Carbohydrates: 29g | Protein: 7.6g | Sodium: 84mg | Potassium: 198mg | Fiber: 4g | Iron: 1mg