இந்த கிறிஸ்துமஸ்க்கு தித்திக்கும் சுவையில் பிளம் கேக் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! வீட்டிலயே ரெம்ப சுலபமாக செய்து விடலாம்!

- Advertisement -

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்டது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பலரின் வீடுகளிலும், வகைவகையான இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் செய்ய தொடங்கியிருப்பார்கள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களைகட்டத் தொடங்கிவிட்டன. கிறிஸ்துமஸ் மரங்கள், ஸ்டார்களுடன் அலுவலகங்கள் தொடங்கி வீதிகள் வரை மிளிரத் தொடங்கி விட்டன. ஆனால் கிறிஸ்துமஸ் என்றதும் நமக்கு உடனடியாக மனதில் தோன்றுவது கிறிஸ்துமஸ் தாத்தாவான சான்டாக்ளாஸ், அவர் தரும் பரிசுகள் மற்றும் கிறிஸ்துமஸ் கேக். கிறிஸ்துமஸ் என்றதுமே நம் நினைவில் முதலில் வருவது, கேக் தான்.

-விளம்பரம்-

கேக் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபி என்றாலும் குறிப்பாக குழந்தைகள் தான் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். கேக்கில் வெண்ணிலா, ஸ்ட்ராபேரி , மார்பில் கேக், பட்டர் ஸ்காட்ச் கேக், பைன் ஆப்பிள் கேக் என்று பல விதமான கேக்குகள் உள்ளன. ஒவ்வொன்றும் அதற்குரிய தனி சுவையை உள்ளடக்கி இருக்கும். அந்த வகையில் இன்று நாம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலான பிளம் கேக், சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைக்கும் வகையில், மிருதுவான கேக்கை சுலபமான முறையில் மைக்ரோ ஓவன் பயன்படுத்தி செய்வது எப்படி? என்பது பற்றி இங்கு காண்போம்.

- Advertisement -

எத்தனை இனிப்புகள் வந்தாலும், கிறிஸ்துமஸ் கேக் என்பது என்றுமே ஸ்பெஷல் தான். இந்த கிறிஸ்துமஸ் கேக்கை ப்ளம் கேக் என்றும் அழைக்கின்றனர். தற்போதெல்லாம் பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் அவ்வளவு எளிதாக கடைகளில் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் அதனை வாங்க யோசிக்கின்றனர். சிலருக்கு வீட்டிலேயே செய்துவிடலாம் என தோன்றினாலும், செய்முறை தெரியாமல் தவிக்கின்றனர். அப்படி எந்த குழப்பம் உங்களுக்கு வேண்டாம். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உங்கள் வீட்டிலேயே நீங்கள் கேக் செய்யலாம்.

Print
5 from 1 vote

கிறிஸ்துமஸ் பிளம் கேக் | Christmas Plum Cake Recipe In Tamil

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்டது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பலரின் வீடுகளிலும், வகைவகையான இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் செய்ய தொடங்கியிருப்பார்கள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களைகட்டத் தொடங்கிவிட்டன. கிறிஸ்துமஸ் மரங்கள், ஸ்டார்களுடன் அலுவலகங்கள் தொடங்கி வீதிகள் வரை மிளிரத் தொடங்கி விட்டன. ஆனால் கிறிஸ்துமஸ் என்றதும் நமக்கு உடனடியாக மனதில் தோன்றுவது கிறிஸ்துமஸ் தாத்தாவான சான்டாக்ளாஸ், அவர் தரும் பரிசுகள் மற்றும் கிறிஸ்துமஸ் கேக். கிறிஸ்துமஸ் என்றதுமே நம் நினைவில் முதலில் வருவது, கேக் தான். கேக் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபி என்றாலும் குறிப்பாக குழந்தைகள் தான் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உங்கள் வீட்டிலேயே நீங்கள் கேக் செய்யலாம்.
Prep Time20 minutes
Active Time25 minutes
Total Time45 minutes
Course: evening
Cuisine: Indian
Keyword: Christmas cake
Yield: 5 People
Calories: 182kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மைக்ரோ ஓவன்
  • 1 பீட்டர்

தேவையான பொருட்கள்

  • 1 1/2 கப் மைதா மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர்
  • 1/2 டீஸ்பூன் பட்டை தூள்
  • 1/4 டீஸ்பூன் கிராம்பு தூள்
  • 1/4 டீஸ்பூன் சுக்கு பொடி
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/2 கப் ட்ரை புரூட்ஸ்
  • 1/2 கப் ட்ரை நட்ஸ்
  • 1 கப் ஆரஞ்சு சாறு
  • 1/4 கப் எண்ணெய்
  • 1/4 கப் தயிர்
  • 1 கப் நாட்டு சர்க்கரை
  • 1/4 கப் பால்
  • 2 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

செய்முறை

  • முதலில் பிளம் கேக் செய்ய தேவையான ட்ரை நட்ஸ் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கோகோ பவுடர், பட்டை, கிராம்பு, சுக்கு பொடி எல்லாம் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பௌலில் ஆரஞ்சு சாறு சேர்த்து அதில் நறுக்கி வைத்துள்ள ட்ரை புரூட்ஸ் மற்றும் நட்ஸ் சேர்த்து கலந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின்னர் ஒரு பவுளில் தயிர், எண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
  • அதன்பிறகு நாம்‌ பீட்‌ செய்து வைத்துள்ள கலவையில் ஊற வைத்துள்ள ட்ரை புரூட்ஸ் மட்டும் எடுத்து சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின்னர் மாவுக்கலவையை கொஞ்சம் பால் கொஞ்சம் மாவு என்று சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் நாம்‌ பீட்‌ செய்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது கேக் கலவை தயார்.
  • பின்னர் வட்டம் அல்லது விருப்படி கேக் மோல்டை எடுத்து பட்டர் பேப்பர் வைத்து தயார் செய்த கேக் கலவையை சேர்க்கவும். பின்பு கொஞ்சம் நட்ஸை கேக்கின் மேல் தூவவும்.
  • பின்பு மைக்ரோவ் வேவ் ஓவனில் 180 டிகிரி செல்சியசில் 15 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்து 25 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் பிளம் கேக் தயார்.
  • அவ்வளவுதான் ‌மிகவும் சுவையான, மிகவும் மிருதுவான பிளம் கேக் தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 182kcal | Carbohydrates: 6.5g | Protein: 9.3g | Fat: 4.9g | Saturated Fat: 1.9g | Sodium: 17mg | Potassium: 32mg | Fiber: 3.8g | Vitamin A: 12IU | Vitamin C: 2mg | Calcium: 7mg | Iron: 3mg

இதனையும் படியுங்கள் : வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!