உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்!

- Advertisement -

நமது சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தேங்காய், நமது சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. தலை முதல் பாதம் வரை மென்மை, பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் தேங்காய், நம்மை தன்னம்பிக்கையுடன் நடைபோட வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

-விளம்பரம்-

வழுக்கை தேங்காயை நன்றாக அரைத்து, சிறிது தண்ணீர் கலந்து முகத்தில் கீழிருந்து மேல் வரை தடவி, காய்ந்ததும் தண்ணீரில் கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால், உங்கள் முகம் எந்த வித கறையும் இல்லாமல் பொலிவுறும். கரும்புள்ளிகள் இருந்தால் அவை விரைவில் மறைந்துவிடும்.

- Advertisement -

வெயில் காலத்தில் சூரிய ஒளியால் முகம் கருமையாக மாறுவது சகஜம். வெளிநாடு சென்றாலும் பலருக்கு இந்த நிலை உள்ளது. கரும்புள்ளிகளைத் தடுக்கவும் தேங்காய் உதவுகிறது.

2 ஸ்பூன் தேங்காய் பால் மற்றும் ஒரு ஸ்பூன் கடலை மாவு எடுத்து ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, காய்ந்ததும் தண்ணீரில் கழுவவும். இப்படி வாரம் இருமுறை செய்து வந்தால் முகம் பொலிவு பெறும்.