மாம்பழம் போல முகம் தளதளன்னு மின்ன இந்த 3 வழிகளை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க நல்ல ரிசல்ட் தரும்!

- Advertisement -

பெரும்பலான மக்களுக்கு சருமத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. அந்த சரும பிரச்சனைகளை போக்கி அழகான பொலிவான சருமத்தை பெற வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். இதற்கு நீங்கள் சில இயற்கையான சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும்.இக்காலகட்டத்தில் பெண்கள் கடையில் விற்கும் பல்வேறு அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அது தற்காலிக தீர்வை கொடுத்தாலும், நல்ல தீர்வை கொடுப்பதில்லை. இதனால் நமக்கு பணம் விரயம் ஆவது மட்டுமில்லாமல் சருமத்திற்கு பல பிரச்சனைகளையும் அது அளிக்கும். எனவே ரசாயனங்கள் இல்லாத இயற்கை முறையை பின்பற்றியும் கூட நம் முகத்தை ஜொலிக்க வைக்க முடியும்.

-விளம்பரம்-

பல்வேறு பழங்கள் உங்கள் சருமத்திற்கு அதிசயங்களை செய்கின்றன. அந்த வகையில், மாம்பழ ஃபேஸ் பேக்குகள் சுவையானது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்திற்கும் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. மாம்பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் சி நிரம்பியுள்ளது, அவை ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உதவுகிறது.

- Advertisement -

இந்த வைட்டமின்கள் சரும நிறத்தை பிரகாசமாக்க உதவுகின்றன, நிறமியைக் குறைக்கின்றன, மேலும் முன்கூட்டிய வயதாவதற்கு பங்களிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் மாம்பழ ஃபேஸ் பேக்குகளை இணைப்பதன் மூலம், தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாமல் இயற்கையான சரும பொலிவை அடையலாம்.

பொதுவாக மாம்பழ பேஸ் பேக்குகளை பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் பருக்கள் சரியாகாது என்றும் முகத்தில் வெடிப்புகள் உருவாகும் என்றும் பலரும் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை மாம்பலத்தில் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் அதிகமாக உள்ளன. இதனால் முகத்தில் இருக்கும் வீக்கங்களை குறைக்கும், அது மட்டுமில்லாமல் எரிச்சலையுடைய சருமங்களை கொண்டால் அதனை குறைக்கும். எனவே இதனை பயன்படுத்தினால் பருக்கள் வராது அதற்கு மாறாக பருக்கள் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தும் பொழுது அவர்கள் முகப்பருக்கள் குறைவதை காணலாம். இப்பதிவில் மாம்பழ ஃபேஸ் பேக் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

மாம்பழம் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

ஒரு மாம்பழத்தை மிக்ஸியில் கூலாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் போட வேண்டும். 15 நிமிடங்களுக்கு பின் இந்த கலவையை கழுவ வேண்டும். இதன் மூலம் முகத்தில் இருக்கும் கரைகள் நீங்கும் அது மட்டுமில்லாமல் முகமும் பளபளவென ஆகும்.

-விளம்பரம்-

மாம்பழம் மற்றும் தேன் ஃபேஸ் பேக்

மாம்பழத்தை கூலாக அரைத்து அதனுடன் தேன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முகத்தில் போட்டு 20 நிமிடத்திற்கு பின் கழுவினால் முகம் மிருதுவாக இருக்கும். பொதுவாக தேனிற்கு ஈரப்பத தன்மை உண்டு, எனவே வறண்ட முகம் கொண்டவர்கள் இதனை பயன்படுத்தினால் நல்ல பலனை காணலாம்.

மாம்பழம் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

மாம்பழ கலவையில் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவினால் முகத்தில் பருக்களால் வந்திருக்கும் தழும்புகள் எல்லாம் நீங்கி முகமே புத்துணர்ச்சியாக இருக்கும். மஞ்சளில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இருப்பதினால் முகத்திற்கு பளபளப்பு மற்றும் பொலிவை அளிக்கிறது.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மாம்பழ ஃபேஸ் பேக் நல்லதா?

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மாம்பழ ஃபேஸ் பேக் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் மாம்பழத்தில் உள்ள இயற்கையான துவர்ப்பு தன்மை சருமத்தை இறுக்கமாக்கவும், பெரிய துளைகள் தோன்றுவதை குறைக்கவும் உதவுகிறது.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : https://recipes.behindtalkies.com/multani-mitti-and-tomato-for-glowing-face/