இன்றைய காலக்கட்டத்தில் பலரும் அதிகமான முடியை வளர்த்துக் கொள்ள விரும்புவதில்லை. இதற்கு அவர்களுடைய வாழும் சூழ்நிலை ஒரு காரணமாக இருந்தாலும் அவ்வளவு பெரியதாக வளர்ப்பது ஒன்றும் சாதாரணமான விஷயமும் கிடையாது. அதையும் மீறி வளர்த்தால் அதை பராமரிப்பது அதை விட பெரிய பிரச்சனை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் பலரும் முடியை சிறியதாகவே வளர்த்து பராமரித்துக் கொள்கிறார்கள்.
முடியை போஷாக்காக வளர்ப்பதற்கு ஒரு புது ஐடியாவை தான் இந்த அழகு குறிப்பில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ரொம்ப ரொம்ப சுலபமான முறையில் செலவு இல்லாத ஐடியா இது. இதை செய்வதற்கு நமக்கு இரண்டு பொருட்கள் தான் தேவை இன்று செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலை இது இரண்டையும் பயன்படுத்தி டிப்ஸ் இந்த செய்தாலே நமது முடி கருமையாக வளரும்.
முடியை ஷைனிங்காக மாற்ற எளிமையான அழகு குறிப்பு
முதலில் 20 செம்பருத்தி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் 7 செம்பருத்தி பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள். செம்பருத்திப்பூவின் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும். இரண்டு லிட்டர் தண்ணீரில் செம்பருத்தி பூ மற்றும் இலையை நன்கு கசக்கி போடுங்கள். தண்ணீரிலேயே அதை நன்கு கசக்கி அதில் இருக்கும் வழுவழுப்பு தன்மை தண்ணீரில் இறங்குமாறு நன்கு கசக்கவும். இதனை செய்வதற்கு நமக்கு ஆறு முதல் ஏழு நிமிடங்கள் எடுக்கலாம்.
சில பேர் யோசிக்கலாம் இதற்கு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி இதை தண்ணீரில் கலக்கலாமே என்று. அப்படி செய்தால் அந்த இலையில் பூவில் இருக்கும் முழுமையான சத்து நமக்கு கிடைக்காமல் போய்விடும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் உங்கள் கையாலேயே அதை நன்றாக பிசைந்து கொடுங்கள். தண்ணீர் கொழ கொழப்பு தன்மை வந்து நிறம் மாறி வந்ததும் இதை ஒரு காட்டன் துணியில் ஊற்றி வடிகட்டி உங்கள் கையை கொண்டு பிழிந்து எடுத்தால் கொழ கொழப்பாக ஒரு தண்ணீர் கிடைத்திருக்கும் அல்லவா. இந்த தண்ணீரில் தான் தலையை அலச வேண்டும்.
5 நிமிடம் தண்ணீர்ல் வைத்தால் போதும்
இதை செய்வதற்கு தலையில் நீங்கள் எண்ணெய் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நன்றாக ஷாம்பு போட்டு அழுக்கு தேய்த்து குளித்த பின்னர், இந்த தண்ணீரில் உங்கள் தலையை ஐந்து நிமிடம் விட்டு, பின்னர் நல்ல தண்ணீரில் அலசி குளித்து விடுங்கள். அவ்வளவுதான் உங்கள் தலைமுடியை நன்கு ஈரம் போக காய வைத்து விடுங்கள்.
ஒரு வாஷிலேயே தலைமுடி அவ்வளவு சில்க்கியாக மாறி இருக்கும். டிரையாக இருக்கும் உங்கள் முடி சைனிங்காக மாறி இருக்கும். அதே சமயம் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து, உங்கள் முடி திக்காக வளர தொடங்கும். வாரம் ஒரு முறை தொடர்ந்து இந்த தண்ணீரில் தலையை முடியை அலசி வந்தால் நம்ப முடியாத மாற்றத்தை தலைமுடியில் பார்க்கலாம். அழகு குறிப்பு பிடிச்சவங்க முயற்சி செய்து பார்க்கவும்.