வீட்டிலயே ஸ்வீட்ஸ் சாப்பிட நினைத்தால் சூப்பரான தேங்காய் அல்வா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!

- Advertisement -

அல்வா என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். வாயில் வைத்தால் சட்டென்று கரைந்து விடும் அந்த அளவிற்கு நெய் ஊற்றி பார்க்கவே அழகாக செய்கின்ற இந்த அல்வாவின் சுவை மிகவும் அருமையாக இருக்கும். நாம் பலவிதமான அல்வாக்களும் சாப்பிட்டு இருப்போம் உதாரணமாக கேரட் அல்வா முந்திரி அல்வா காசி அல்வா பீட்ரூட் அல்வா கோதுமை அல்வா பாதாம் அல்வா என பலவிதமான அல்வாக்களை சாப்பிட்டு இருப்போம்.

-விளம்பரம்-

ஆனால் தேங்காயில் அல்வா செய்த சாப்டு இருக்க மாட்டோம். கடைக்கு போய் எதுவும் வாங்காமல் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து சுலபமான முறையில் நாம் இந்த தேங்காய் அல்வாவை செய்து முடித்து விடலாம். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும் நேரத்தில் வீட்டில் எதுவும் ஸ்னாக்ஸ் இல்லை என்றால் குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுக்கலாம்.

- Advertisement -

வீட்டில் ஏதாவது விசேஷங்கள் வந்தாலும் மிகவும் எளிமையான முறையில் நாம் இந்த தேங்காய் அல்வாவை செய்து கொடுக்கலாம். தேங்காயில செய்யப் போகும் அல்வா எப்படி வரும் என்ற கவலை வேண்டாம். உண்மையிலேயே சுவை மிகவும் அருமையாக இருக்கும். இந்த சுவையான இனிப்பான தேங்காய் அல்வாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

Print
5 from 2 votes

தேங்காய் அல்வா | Coconut Halwa Recipe In Tamil

தேங்காயில்அல்வா செய்த சாப்டு இருக்க மாட்டோம். கடைக்கு போய் எதுவும் வாங்காமல் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து சுலபமான முறையில் நாம் இந்த தேங்காய் அல்வாவை செய்து முடித்து விடலாம். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும் நேரத்தில் வீட்டில் எதுவும் ஸ்னாக்ஸ் இல்லை என்றால் குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுக்கலாம். தேங்காயில செய்யப் போகும் அல்வா எப்படி வரும் என்ற கவலை வேண்டாம். உண்மையிலேயே சுவை மிகவும் அருமையாக இருக்கும். இந்த சுவையான இனிப்பான தேங்காய் அல்வாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: Coconut Halwa
Yield: 4
Calories: 60kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் தேங்காய்
  • 1 1/2 கப் வெல்லம்
  • 15 முந்திரி
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • நெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் தேங்காயை துருவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு தேங்காயை குட்டியாக கீரி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு வெல்லம் மற்றும் தேங்காயை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் .
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் ஊற்றி கீறி வைத்துள்ள தேங்காய் மற்றும் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு தேங்காய் மற்றும் முந்திரி பருப்பை வறுத்த அதே கடாயில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் வெல்லம் கலவையை சேர்த்து நன்றாக கிளறி வரவேண்டும்.  இதில்ஏலக்காய் தூள் சேர்த்து கைவிடாமல் கிளறி விட வேண்டும் தேவையான அளவு நெய் விட்டு கிளறிவிட்டுக் கொண்டே  இருக்கவேண்டும்.
  • அல்வா பதத்திற்கு வந்த பிறகு அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி  கீறியதேங்காய் இவற்றை சேர்த்து கலந்து பரிமாறினால் சுவையான தேங்காய் அல்வா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 17g | Protein: 10g | Fat: 0.9g | Saturated Fat: 1g | Sodium: 21mg | Fiber: 7g | Sugar: 0.02g