Home சைவம் எவ்வளவு செய்தாலும் காலியாகும் மணக்க மணக்க தேங்காய் பால் பட்டாணி பிரியாணி இப்படி ட்ரை பண்ணி...

எவ்வளவு செய்தாலும் காலியாகும் மணக்க மணக்க தேங்காய் பால் பட்டாணி பிரியாணி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ஒரு சில நாட்களில் தேங்காய்கள் அதிகமாக வீட்டில் நிறைந்திருக்கும். இதுபோன்ற நேரங்களில் தேங்காயை அதிக நாட்கள் வைத்திருந்தால் அவை வீணாகி விடும். எனவே தேங்காயை அதிகமாக உபயோகப் படுத்தி செய்யக்கூடிய ஒரு உணவு வகை தான் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி. ஒவ்வொருவரும் கொஞ்சம் வித்தியாசமாக தேங்காய் பால்  புலாவ் செய்வார்கள். ஆனால் தேங்காய் அரைத்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து செய்யும் இந்த உணவை ஒரு முறை செய்து பாருங்கள். வீட்டில் உள்ள குழந்தைகளும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சூப்பரான சுவையில் இருக்கும்.

-விளம்பரம்-

சுவையான தேங்காய் பால் பட்டாணி பிரியாணி இவ்வளவு சூப்பரான முறையில் நீங்களும் ஒரு முறை செஞ்சு பாருங்க, சாதாரணமாக தேங்காய் சாதம், தேங்காய் பால் சாதம் போல் அல்லாமல் இந்த பட்டாணி பிரியாணி வித்தியாசமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கக் கூடிய இந்த பட்டாணி பிரியாணி  ருசியாக ஈசியாக எப்படி வீட்டில் தயாரிக்கப் போகிறோம்? என்பதை இனி இப்பதிவில் தொடர்ந்து பார்ப்போம்.

Print
5 from 2 votes

தேங்காய் பால் பட்டாணி பிரியாணி | Coconut Milk Peas Biryani Recipe In Tamil

சுவையான தேங்காய் பால் பட்டாணி பிரியாணி இவ்வளவுசூப்பரான முறையில் நீங்களும் ஒரு முறை செஞ்சு பாருங்க, சாதாரணமாக தேங்காய் சாதம், தேங்காய்பால் சாதம் போல் அல்லாமல் இந்த பட்டாணி பிரியாணி வித்தியாசமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கக் கூடிய இந்த பட்டாணி பிரியாணி  ருசியாக ஈசியாக எப்படி வீட்டில் தயாரிக்கப் போகிறோம்? என்பதை இனி இப்பதிவில் தொடர்ந்து பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Coconut Millk Peas Biryani
Calories: 643kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாசுமதி அரிசி
  • 1/2 கப் பட்டாணி
  • 1 வெங்காயம் நறுக்கியது
  • 1 கப் கெட்டியான தேங்காய் பால்
  • 1/2 கப் தண்ணீர்
  • உப்பு தேவையான அளவு

அரைப்பதற்கு

  • 1/2 கப் புதினா
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • 3 பச்சை மிளகாய்
  • 2 வரமிளகாய்
  • 3 டீஸ்பூன் துருவிய தேங்காய்
  • 1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி
  • 4 பற்கள் இன்ச் பூண்டு

தாளிப்பதற்கு

  • 1 பிரியாணி இலை
  • 1/4 இன்ச் பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்

செய்முறை

  • முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ளவேண்டும்.
  • பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்குகொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனைபோக நன்கு கிளறி விட வேண்டும்.
  • பின்பு அதில் பட்டாணி, தேவையான அளவு உப்பு மற்றும் பாசுமதி அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால்மற்றும் தண்ணீர் ஊற்றி, மீண்டும் கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, குக்கரைமூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்தால், தேங்காய் பால் பட்டாணிபிரியாணி ரெடி.

Nutrition

Serving: 400g | Calories: 643kcal | Carbohydrates: 43g | Cholesterol: 32mg | Sodium: 342mg | Potassium: 543mg

இதையும் படியுங்கள் : காலை டிபனுக்கு ருசியான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா இப்படி செய்து பாருங்க! பூரியோ தோசையே 2 அதிகமாவே சாப்பிடுவாங்க!