வாயில வச்ச உடனே கரையக்கூடிய ஒரு சூப்பரான தேங்காய் புட்டிங் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

இப்போ இருக்க எல்லாருக்குமே ஏதாவது நல்ல விருந்து சாப்பிட்ட பின்னாடி ஒரு டெஸர்ட் சாப்பிடணும்னு தோணும். அந்த டெஸர்ட் நமக்கு புடிச்ச மாதிரி ரொம்பவே டேஸ்ட்டா இருந்தா இன்னுமே நல்லா இருக்கும் அப்படின்னு தோணும். அந்த மாதிரியான ஒரு சூப்பரான தேங்காய் புட்டிங் தா இப்ப நம்ம பாக்க போறோம் இந்த தேங்காய் புட்டிங் சாப்பிடுவதற்கு ரொம்பவே சூப்பரான டேஸ்ட்ல இருக்கும். நல்லா ஜெல்லி மாதிரி ஒரு ஸ்பூன் எடுத்து வாயில வச்ச உடனே கரைஞ்சு தித்திக்கிற சுவையில் சூப்பரா இருக்கும்.

-விளம்பரம்-

இந்த தேங்காய் புட்டிங் செய்வதற்கு ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும். இத ஃப்ரிட்ஜில் வைத்து நன்றாக சில்லுனு எடுத்து சாப்பிட்டோம்னா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒரு தடவ மட்டும் நீங்க இந்த தேங்காய் புட்டிங் செஞ்சிட்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம் உங்க வீட்ல அடிக்கடி இதை செய்வீங்க. அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.

- Advertisement -

உங்க குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்தா போதும் நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு உங்க குழந்தைங்க அதை விரும்பி சாப்பிடுவாங்க. ரொம்பவே ஈஸியான ஒரு சூப்பரான டெஸர்ட் தான் இந்த தேங்காய் புட்டிங். இப்ப வாங்க இந்த சூப்பரான அட்டகாசமான சிம்பிளான தேங்காய் புட்டிங் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

தேங்காய் புட்டிங் | Coconut Pudding Recipe In Tamil

தேங்காய்புட்டிங் செய்வதற்கு ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும். இத ஃப்ரிட்ஜில்வைத்து நன்றாக சில்லுனு எடுத்து சாப்பிட்டோம்னா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.ஒரு தடவ மட்டும் நீங்க இந்த தேங்காய் புட்டிங் செஞ்சிட்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம்உங்க வீட்ல அடிக்கடி இதை செய்வீங்க. அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் உங்களுக்கு ரொம்பவேபிடிக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Coconut Pudding
Yield: 4
Calories: 206kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 தேங்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் நெய்

செய்முறை

  • முதலில் தேங்காய் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு அடி கனமான பாத்திரத்தில் தேங்காய் பாலை ஊற்றி அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்
  • பிறகு அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்
  • சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து அதனையும் அதனுடன் சேர்த்து கிளறவும்
  • பத்து நிமிடங்கள் நன்றாக கைவிடாமல் கிளறிய பிறகு இறுதியாக சிறிதளவு நெய் ஊற்றி எடுக்கவும்
  • செய்து வைத்துள்ளதை ஏதாவது ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு மணி நேரம் கழித்து எடுத்தால்சுவையான சூப்பரான தேங்காய் புட்டிங் தயார்

Nutrition

Serving: 250g | Calories: 206kcal | Carbohydrates: 67g | Protein: 26g | Sodium: 71mg | Potassium: 328mg | Iron: 1mg

இதையும் படியுங்கள் : தேங்காய்ப்பால் மட்டன் ஸ்டூவ் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! அப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீங்க!