Home ஸ்வீட்ஸ் தேங்காய் ரப்டி இப்படி செய்து பாருங்க! அஹா வாயில் வைத்தவுடன் கரையும் அற்புதமான ரெசிபி!

தேங்காய் ரப்டி இப்படி செய்து பாருங்க! அஹா வாயில் வைத்தவுடன் கரையும் அற்புதமான ரெசிபி!

இந்தியாவின் பிரசித்தி வாய்ந்த இனிப்பு வகைகளில் ரப்டியும் ஒன்று. ரப்ரி என்றும் அழைக்கப்படும் ரப்டி ஒரு உன்னதமான வட இந்திய விருந்தாகும், இது மிகவும் இனிமையானது. இந்த சுவையான ரெசிபி பண்டிகை காலங்களில் மட்டும் செய்யப்படுவதில்லை. சாதாரண நாட்களில் கூட இந்த இனிப்பு பலகாரம் செய்யப்படுகிறது. இந்த சுவையான தேங்காய் ரப்டி தேங்காய், பால், சர்க்கரை, ஏலக்காய் பொடி, முந்திரி மற்றும் பாதாம் போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதை டின்னருக்கு முன்னால் சாப்பிடும் ஸ்வீட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

-விளம்பரம்-

இவை தீபாவளி, கிறிஸ்துமஸ், ஈத் போன்ற பண்டிகை காலங்களின் போதும் மற்றும் திருமண விழாக்களின் போதும், பிறந்தநாள் பார்ட்டிகளிலும் பரிமாறப்படும் ஒரு சிறப்பு இனிப்பு வகை. இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு இனிப்பு வகை. நாவில் வைத்தவுடன் கரைந்து அதீத சுவை தரும் இதன் தன்மையே இதற்குக் காரணம். இவை பெரும்பாலும் இந்திய துணைக் கண்டத்திலேயே செய்யப்படுகின்றது. ஆனால் இவை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு செய்முறை யோடு மற்றும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதனை சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த, மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு இந்த சுவையான தேங்காய் ரப்டி செய்து கொடுக்கலாம். ஒரே விதமாக நம்முடைய கைமுறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்றெல்லாம் தின்று அலுத்துப் போன பெரியவர்களுக்கும் கூட இது கொஞ்சம் மாற்றமாக இருக்கும்.

Print
4 from 1 vote

தேங்காய் ரப்டி | Coconut Rabdi Recipe In Tamil

இந்தியாவின் பிரசித்தி வாய்ந்த இனிப்பு வகைகளில் ரப்டியும் ஒன்று. ரப்ரி என்றும் அழைக்கப்படும் ரப்டி ஒரு உன்னதமான வட இந்திய விருந்தாகும், இது மிகவும் இனிமையானது. இந்த சுவையான ரெசிபி பண்டிகை காலங்களில் மட்டும் செய்யப்படுவதில்லை. சாதாரண நாட்களில் கூட இந்த இனிப்பு பலகாரம் செய்யப்படுகிறது. இந்த சுவையான தேங்காய் ரப்டி தேங்காய், பால், சர்க்கரை, ஏலக்காய் பொடி, முந்திரி மற்றும் பாதாம் போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதை டின்னருக்கு முன்னால் சாப்பிடும் ஸ்வீட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம். மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த, மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு இந்த சுவையான தேங்காய் ரப்டி செய்து கொடுக்கலாம்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Dessert
Cuisine: Indian
Keyword: Coconut Rabdi
Yield: 4 People
Calories: 160kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 பால் பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 லி பால்
  • 1/4 கப் டெசிகேடட் கோகோனட்
  • 1/4 கப் சர்க்கரை
  • 1/4 கப் கண்டென்ஸ்ட்டு மில்க்
  • 1 டீஸ்பூன் குங்குமப் பூ
  • 1/4 கப் நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி
  • 2 இளநீர் வழுக்கை  தேங்காயோடு

செய்முறை

  • முதலில் ஒரு பால்‌ பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி பாலை காய்ச்சவும். பால் பொங்கி வரும் பொழுது குங்குமப்பூ சேர்த்து நன்கு காய்ச்சவும்.
  • பால் நன்கு சுண்டி பாதி அளவு வந்ததும் இதில் நறுக்கிய பாதாம், முந்திரி, கண்டென்ஸ்ட்டு மில்க், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
  • பின் பால் நன்றாக கொதித்து வரும் போது டெசிகேடட் கோக்கனட் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் நன்கு கலந்து விடவும். பின் பால் கிரீம் போல் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் இளநீர் தேங்காயை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு நன்கு அறிய ரப்டியுடன் அரைத்து வைத்துள்ள இளநீர் தேங்காயை சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் இரண்டு மணிநேரம் வைத்து பரிமாறவும்.
  • பரிமாறும் போது நறுக்கிய பாதாம், முந்திரி குங்குமப் பூ தூவி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான தேங்காய் ரப்டி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 160kcal | Carbohydrates: 3.8g | Protein: 5.1g | Fat: 1.5g | Sodium: 105mg | Potassium: 356mg | Fiber: 4g | Sugar: 1.6g | Vitamin A: 18IU | Vitamin C: 24mg | Calcium: 23mg | Iron: 4.3mg

இதனையும் படியுங்கள் : ரப்டி மால்புவா இப்படி செய்து பாருங்க! அஹா வாயில் வைத்தவுடன் கரையும் அற்புதமான ரெசிபி!