ஒரு சிலருக்கு காலைல எழுந்த உடனே டீ, காபி பால் அப்படின்னு குடிச்சா தான் அந்த நாள் ஸ்டார்ட் ஆகும். இதுல ஒவ்வொருதருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும். ஒரு சிலருக்கு டீ பிடிக்கும் ஒரு சிலருக்கு காபி பிடிக்கும் ஒரு சிலருக்கு பால் பிடிக்கும். ஒரு சிலர் இந்த டீ குடிக்கிறதையே கலையா நினைப்பாங்க. டீக்கடையில் நின்னு ஃப்ரண்ட்ஸோட டீ காபி பாலின குடிக்கிறப்போ ஜாலியா அரட்டை அடிச்சுக்கிட்டே குடிச்சா அது உன் ஒரு தனி சந்தோஷமாக இருக்கும்.
ஒரு சிலர் சாப்பாடு இல்லாம கூட இருந்திருவாங்க ஆனா இந்த டீ காபி இல்லாம இருக்கவே மாட்டாங்க. ஒரு நாளைக்கு பத்து பதினைந்து டீ காபி குடிக்கிறவங்க கூட இருக்காங்க அவங்களுக்கு டீ காஃபினா அவ்வளவு பிடிக்கும். பெரியவங்க மட்டும் இல்லாம சின்ன குழந்தைகள் இருந்து எல்லாருக்குமே டீ காபி நா ரொம்பவே பிடிக்கும். காபி நீங்க விரும்பி குடிக்கிறீங்களா அப்போ காபி வைத்து செய்யக்கூடிய ஒரு சூப்பரான மில்க் ஷேக் ஒரு தடவ செஞ்சு குடிச்சு பாருங்க காபி லவ்வர்ஸ்க்கு ரொம்பவே பிடிக்கும்.
ஒரு சிலருக்கு அந்த காபி பவுடர் ஓட வாசனையே ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த மாதிரி காபி பவுடர் வாசனை பிடிக்கிறவங்களுக்கு இந்த காபி மில்க் ஷேக் ரொம்ப ரொம்ப பிடிக்கும் இப்போ வெயில் காலம் வேற வர வர போது அப்போ உங்களுக்கு புடிச்ச காபில ஜில்லுனு மில்க் ஷேக் செஞ்சு வீட்டிலேயே குடிச்சு பாருங்க செம சூப்பரா இருக்கும்.
இந்த காபி மில்க் ஷேக் நீங்க காலையிலேயே செஞ்சு ஏதாவது ஒரு டப்பாவில் வைத்து அடித்து ஆபீஸ் ஸ்கூல் காலேஜ் கொண்டு போகலாம் உங்களுக்கு எப்ப எல்லாம் காபி குடிக்கணும் போல தோணுதோ அப்போ இந்த காபி மில்க் ஷேக் எடுத்து குடிச்சுக்கலாம் டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும்.வாங்க இந்த சூப்பரான காபி மில்க் ஷேக் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
காபி மில்க் ஷேக் | Coffee Milk Shake Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் கொட்டை இல்லாத பேரிச்சம்பழம்
- 8 டீஸ்பூன் காபி பவுடர்
- 5 கப் பால்
- 3 ஏலக்காய்
- 3 டீஸ்பூன் சர்க்கரை
- 3/4 கப் பிரஸ் கிரீம்
- ஐஸ் கட்டிகள் தேவையான அளவு
செய்முறை
- பேரிச்சம் பழங்களின்கொட்டைகளை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் காபி பவுடரை போட்டு கலக்கவும்
- பின்பு அதனுடன் சர்க்கரை மற்றும் ஏலக்காயை பொடித்து சேர்த்துக் கொள்ளவும்
- சர்க்கரை நன்றாக கரைந்த உடன் அதனை தனியாக எடுத்து வைத்து நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும்.
- பிறகு பேரிச்சம் பழத்துடன் பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் அதனுடன் கலந்து வைத்துள்ள காபி டிகாஷன் ஐஸ் கட்டிகள் பிரஷ் கிரீம் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்
- அரைத்துப் பின்னர் உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கப்பில் அரைத்து வைத்துள்ளதை ஊற்றி மேலே சிறிதளவு காபி பவுடரை தூவி பரிமாறினால் சுவையான காபி மில்க் ஷேக் தயார்
Nutrition
இதையும் படியுங்கள் : வீட்டிலயே மில்க் செய்யாலம் சுவையான பப்பாளி நட்ஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!