- Advertisement -
உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரையில் உணவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதிலும் நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் முதல் உணவானது மிகவும் சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் அன்றைய நாள் முழுவதும் நாம் வேலை செய்ய அது நிச்சயம் உதவியாக இருக்கும். அந்த வகையில் சத்து உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு சத்து மிகுந்த சோள தோசையை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
-விளம்பரம்-
சோள தோசை | Corn Dosai Recipe In Tamil
உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரையில் உணவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதிலும் நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் முதல் உணவானது மிகவும் சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் அன்றைய நாள் முழுவதும் நாம் வேலை செய்ய அது நிச்சயம் உதவியாக இருக்கும். அந்த வகையில் சத்து உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு சத்து மிகுந்த சோளதோசையை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Yield: 4
Calories: 106kcal
Equipment
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1 கப் சோள அவல்
- 1 சிட்டிகை சர்க்கரை
- 1 கப் புளித்த தயிர்
- 2 கப் சோளம்
- உப்பு தேவையானஅளவு
- 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் கடுகு
செய்முறை
- முதலில் அரிசியை கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். அவலை மண் போகக் கழுவி, புளித்த தயிரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- இரண்டையும் கிரைண்டரில் தோசை மாவு பதத்தில் அரைத்து எடுக்கவும். ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்
- தோசை வார்க்கும் முன் உப்புச் சேர்க்கவும். தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாக வார்த்து மூடி வைத்து சுட்டு எடுக்கவும்.
- புளித்த தயிரில் ஊற வைப்பதால் மாவு சீக்கிரம் புளித்து விடும், அத்துடன் உப்பு சேர்த்து வைத்தால் மிகவும் புளிப்பாக இருக்கும். எனவே, தோசை வார்க்கும் போது உப்புச் சேர்த்தால் போதுமானது….
Nutrition
Serving: 3g | Calories: 106kcal | Carbohydrates: 19g | Protein: 5.1g | Fat: 6.1g | Fiber: 3.7g | Calcium: 14.2mg | Iron: 1.1mg
- Advertisement -