கருவேப்பிலை நிறைய இருந்தா ஒரு தடவை இந்த கருவேப்பிலை குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

- Advertisement -

கருவேப்பிலை குழம்பு எப்படி செய்வது என்று நிறைய பேருக்கு டவுட் வந்திருக்கும். பொதுவா நம்ம வீட்ல சமைக்கிற எல்லா சமையல்லயும் கருவேப்பிலை போட்டு தாளிப்போம். கருவேப்பிலை போட்டு தாளிக்கும் போது அந்த சமையலோட வாசனையே கொஞ்சம் சூப்பரா இருக்கும். சமையல் ரொம்ப மணமாயிருக்கும். ஆனா என்னதான் கருவேப்பிலை நமக்கு நல்லது ஆரோக்கியமானது என்று சொன்னாலும் நம்ம சாப்பிடும்போது அந்த கருவேப்பிலை மட்டும் எடுத்து தனியா ஒதுக்கி வைத்துவிட்டு தான் சாப்பிடுவோம்.

-விளம்பரம்-

அது எல்லாம் சேர்த்து வைத்த சாப்பிட சொன்னால் ஒரு சில பேர் அதனை குப்பை என்று சொல்வார்கள். ஆனால் அதனுடைய ஆரோக்கியம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். அப்படி கருவேப்பிலையை ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பிடுபவர்களுக்காகவே இந்த கருவேப்பிலை குழம்பு செய்து கொடுங்கள். இதில் நாம் கறிவேப்பிலை சேர்த்து இருக்கிறோம் என்பது தெரியவே தெரியாது அந்த அளவிற்கு மிகவும் சூப்பராக கார குழம்பு மாதிரியே இருக்கும். காரசாரமாக இருக்கும் இந்த கருவேப்பிலை குழம்பை நாம் மூன்று நாட்களுக்கு கூட வைத்து கெட்டுப் போகவே போகாது நாளுக்கு நாள் அதனுடைய சுவை  அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

- Advertisement -

சுடு சாதத்தில் இந்த குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டாலும் சுவை அருமையாக இருக்கும். பழைய சாதத்திற்கு இந்த குழந்தை சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டாலும் சுவை சூப்பராக இருக்கும். இந்த குழம்பு செய்வதற்கு குறைவான நேரம் மட்டுமே தேவைப்படும். ஒருமுறை இதனை வீட்டில் செய்து பார்த்தால் அதற்கு பிறகு இந்த கருவேப்பிலை குழம்பை நீங்கள் அடிக்கடி செய்வீர்கள். இப்ப வாங்க இந்த சுவையான கறிவேப்பிலை குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
2 from 1 vote

கருவேப்பிலை குழம்பு | Curry Leaves Kulambu Recipe In Tamil

கருவேப்பிலை குழம்பு எப்படி செய்வது என்று நிறைய பேருக்கு டவுட் வந்திருக்கும். பொதுவா நம்ம வீட்லசமைக்கிற எல்லா சமையல்லயும் கருவேப்பிலை போட்டு தாளிப்போம். கருவேப்பிலை போட்டு தாளிக்கும்போது அந்த சமையலோட வாசனையே கொஞ்சம் சூப்பரா இருக்கும். சமையல் ரொம்ப மணமாயிருக்கும்.ஆனா என்னதான் கருவேப்பிலை நமக்கு நல்லது ஆரோக்கியமானது என்று சொன்னாலும் நம்ம சாப்பிடும்போதுஅந்த கருவேப்பிலை மட்டும் எடுத்து தனியா ஒதுக்கி வைத்துவிட்டு தான் சாப்பிடுவோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Curry Leaves Kulambu
Yield: 4
Calories: 162kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கைப்பிடி அளவு கருவேப்பிலை
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 10 சின்ன வெங்காயம்
  • 15 பூண்டு
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய்தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • உப்பு தேவையான அளவு
  • சிறிய நெல்லிக்காய் அளவு புளி

செய்முறை

  •  
    முதலில் ஒரு கடாயில் சீரகம் மற்றும் மிளகை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு அதே கடாயில் கருவேப்பிலை சேர்த்து மொறுமொறுப்பாக ஆகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • வறுத்த அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு வெந்தயம் போட்டு தாளித்துக் கொள்ளவும்
  •  
    பிறகு வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதங்க விடவும்
  • தக்காளி சேர்த்து நன்றாக குறைவாக வரும் வரை வதக்கிய பிறகு அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாகவதக்கவும்.
  • இப்பொழுது குழம்பு மிளகாய் தூள் கரைத்து வைத்துள்ள புளி அனைத்தும் சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும் வரை நன்றாக வேக வைக்கவும்.
  • குழம்பு நன்றாக வேண்டும் கெட்டியான பிறகு அடுப்பை அணைத்தால் சுவையான கருவேப்பிலை குழம்பு தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 162kcal | Carbohydrates: 17g | Protein: 4.9g | Sodium: 187mg | Potassium: 24mg

இதையும் படியுங்கள் : ருசியான கறிவேப்பிலை தொக்கு இப்படி செய்து பாருங்க சாதத்திற்கு மட்டுமல்லாமல் சப்பாத்தி இட்லி தோசைக்கும் வைத்து சாப்பிட, அருமையாக இருக்கும்!