சுவையான கஸ்டர்டு மில்க்க்ஷேக் இப்படி செய்து பாருங்க! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!

- Advertisement -

மில்க் ஷேக் மிகவும் ஆரோக்கியமான புத்துணர்ச்சியூட்டும் உணவு. குழந்தைகளுக்கு இதனை காலை உணவாகவும் சாப்பிடக் கெடுக்கலாம். அதிக சத்துக்களை உடலில் உண்டாக்கும். பொதுவாகவே மில்க் ஷேக்குகளுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அதுவும் உணவு பிரியர்கள் என்றால் கேட்கவே தேவையில்லை உலகில் கிடைக்கும் அனைத்து விதமான மில்க் ஷேக்குகல் பேரையும் விரல்நுனியில் வைத்திருப்பார்கள். கஸ்டர்டு மில்க் ஷேக் செய்வதற்கு பால் மற்றும் கஸ்டர்டு பவுடர் இருந்தால் போதும் இதை வெகு எளிதாக நாம் வீட்டிலேயே செய்து விடலாம்.

-விளம்பரம்-
Print
No ratings yet

கஸ்டர்டு மில்க்க்ஷேக் | Custard Milk Shake Recipe In Tamil

மில்க் ஷேக் மிகவும் ஆரோக்கியமான புத்துணர்ச்சியூட்டும் உணவு. குழந்தைகளுக்கு இதனை காலை உணவாகவும் சாப்பிடக் கெடுக்கலாம். அதிக சத்துக்களை உடலில் உண்டாக்கும். பொதுவாகவே மில்க் ஷேக்குகளுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அதுவும் உணவு பிரியர்கள் என்றால் கேட்கவே தேவையில்லை உலகில் கிடைக்கும் அனைத்து விதமான மில்க் ஷேக்குகல் பேரையும் விரல்நுனியில் வைத்திருப்பார்கள். தற்போது இருக்கும் கோடை சூடுக்கு இந்த மில்க் ஷேக்கை வீட்டிலேயே செய்து பருகி உடம்பு சூட்டை தனியுங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Drinks, evening
Cuisine: Indian
Keyword: milk shake
Yield: 4 People
Calories: 105kcal

Equipment

  • 1 பால் பாத்திரம்
  • 1 கண்ணாடி டம்ளர்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/2 லிட்டர் பால்
  • 2 டேபிள் ஸ்பூன் கஸ்டர்டு பவுடர்
  • 1 டேபிள் ஸ்பூன் சப்ஜா விதை
  • 1/4 கப் நட்ஸ்
  • சர்க்கரை தேவையானஅளவு

செய்முறை

  • முதலில் சப்ஜா விதைகளை சிறிதளவு நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் அடுப்பில் பால் வைத்து கொதிக்க விடவும். பால் சூடாக ஆரம்பித்ததும் சிறிதளவு பால் எடுத்து கஸ்டர்டு பவுடரை கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
  • பால் கொதித்ததும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கரைந்ததும் கரைத்து வைத்த கஸ்டர்டு பால் கலவையை சேர்க்கவும்.
  • இன்னும் 10 நிமிடங்களுக்கு நன்றாக கிளறி விட்டு கொண்டே இருக்கவும்.
  • கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியாக ஆரம்பித்து கலரும் மாறி பார்க்க அழகாகவும், வாசனையாகவும் இருக்கும்.
  • நமக்கு எந்த அளவுக்கு 'திக்'-க்காக வேண்டுமோ அது வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
  • இறக்கிய பாலை ஆற வைத்து பின் அதில் நறுக்கிய நட்ஸ் மற்றும் ஊறிய சப்ஜா விதைகளை சேர்த்து பருகலாம்.
  • அவ்வளவு தான். சுவையான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கஸ்டர்டு மிலக்க்ஷேக் ரெடி.

Nutrition

Serving: 600g | Calories: 105kcal | Carbohydrates: 15.8g | Protein: 33.1g | Fat: 3.3g | Saturated Fat: 1g | Sodium: 180mg | Sugar: 11.3g | Vitamin A: 102IU | Calcium: 275mg
- Advertisement -