பிரியாணி சாப்பிடணும் அப்படின்னு ஆசைப்படுற எல்லாருமே கத்திரிக்காய் கிரேவி வச்சு சாப்பிடாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. ஆனால் கத்திரிக்காய் மசாலாவை விட ரொம்பவே சூப்பரான ஒரு சைட் டிஷ் பிரியாணிக்கு இருக்கு அப்படின்னு சொன்னா நீங்க எல்லாம் நம்புவீங்களா? அதுவும் இந்த சைடிஸ் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ரொம்ப பேமஸ் அப்படின்னு சொன்னா நீங்க நம்புவீங்களா? அப்படித்தான் சுவையான ஒரு சூப்பரான சைடிஷ் பண்ண போறோம்.
அந்த சைடு டிஷ் பேரு என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா அதுதான் தாளிச்சா. ரொம்பவே விரும்பி சாப்பிடுற இந்த தாளிச்சா பிரியாணிக்கு தொட்டுக்கறதுக்கு எப்படி வித்தியாசமான முறையில் ரொம்ப சுலபமா செய்யறது அப்படின்னு பார்க்க இருக்கிறோம். இந்த சுவையான தாளிச்சா அசைவ பிரியாணி , வெஜிடபிள் பிரியாணி, குஸ்கா, நெய் சோறு இப்படி எல்லாத்துக்குமே தொட்டு சாப்பிட ரொம்பவே சுவையா இருக்கும்.
இந்த தாளிச்சா ரொம்பவே சுலபமா வீட்ல இருக்குற பொருட்களை வைத்து ஈஸியா செய்து முடித்துவிடலாம் . இவ்வளவு சுலபமா செய்றோமே இதோட சுவை நல்லா இருக்குமா இல்லையா அப்படின்னு யோசிக்கிறவங்களுக்கு இதோட சுவை ரொம்பவே ருசியான ஒரு கிரேவியா இருக்கும் இந்த தாளிச்சா. சுவையான தாளிச்சா வீட்ல இருக்குற எல்லாருக்கும் பிடிக்கும்.
பிரியாணி பிரியர்களுக்கு இந்த தாளிச்சா ரொம்பவே பிடிக்கும். ஏன் நான் பிரியாணியை தாளிச்சா சாப்பிடும் போது தான் பிரியாணி பிரியர்கள் எல்லாம் பிரியாணி சாப்பிட்ட ஒரு திருப்தியே கிடைக்கும். அப்படி சுவையான இந்த தாளிச்சா வீட்டுல நம்ம செய்ய போறோம். சரி வாங்க சுவையான இந்த தாளிச்சா எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.
தாளிச்சா | Dalicha Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் ஆட்டு கொழுப்பு
- 100 கிராம் துவரம் பருப்பு
- 1 வாழைக்காய்
- 2 உருளைக்கிழங்கு
- 1 மாங்காய்
- 1 தக்காளி
- புளி நெல்லிக்காய் அளவு
- 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 ஸ்பூன் மல்லி தூள்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 10 சின்ன வெங்காயம்
- 1/4 மூடி தேங்காய்
- 1 ஸ்பூன் சோம்பு
- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 4 பல் பூண்டு
- 1 துண்டு பட்டை
- 2 கிராம்பு
- 1 ஏலக்காய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் காய்கறிகளை சுத்தம் செய்து பெரிய நீளமான துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். ஆட்டின் கொழுப்பை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். தேங்காய் , சோம்பு, பூண்டு மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
- பின் குக்கரில் பருப்பு, தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் , கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துவதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் காய்கறிகள் மற்றும் ஆட்டின் கொழுப்பு சேர்த்து மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- பின் காய்கறிகள் கொழுப்பு வெந்த பிறகு ஈதில் புளி கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் வேகவைத்த பருப்பில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
- தாளிச்சா கொத்தித்த உடன் அதில் தேங்காய் விழுதை சேர்த்து இறக்கி பிரியாணியோடு சூடாக பரிமாறினால் சுவையான சோழமண்டல தாளிச்சா தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட ருசியான பஞ்சாபி பட்டாணி குருமா இப்படி ஒரு முறை மட்டும் செய்து பாருங்கள்!