நீங்கள் போளி பிரியரா ? சுவையான பேரிச்சம்பழ போளி இப்படி சுலபமாக வீட்டிலயே செய்து சாப்பிடலாம்!

- Advertisement -

போளி இந்தியாவில் செய்யப்படும் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. குறிப்பாக இவை கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் மிகவும் ஃபேமஸ். இது எந்த அளவுக்கு அங்கு ஃபேமஸ் என்றால் இவை இல்லாத திருமண விருந்துகளே அங்கு காண முடியாது எனும் அளவுக்கு. மாலை நேரம் ஆகிவிட்டது என்றால் அனைவருக்குமே ஏதாவது சாப்பிடுவதற்கு தோன்றும் ஆனால் அந்த நேரத்தில் சாப்பாடு போட்டு சாப்பிடு சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்..!

-விளம்பரம்-

ஆனால் நமக்கு வடை, பஜ்ஜி சாப்பிட தோன்றும், சிலருக்கு இனிப்பு சாப்பிட பிடிக்கும். அதற்காக அதிக இனி சாப்பிடால் திகட்டும் அளவிற்கு இருக்க கூடாது. ஓரளவு இனிப்பு இருந்தால் போதுமானத இருக்கும் என்று சொல்வார்கள். போலி ஒரு இனிப்பான, வாயில் போட்டால் கரையும் இனிப்பு வகையாகும். இது சாமிக்கு பிரசாதமாக வைக்கப்படுகிறது. இதை தென்னிந்தியாவில் போளி என்றும் அழைக்கப்படுகிறது.

- Advertisement -

உகாதி பண்டிகையின் போது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் செய்யப்படும் இனிப்பு பருப்பு போளி. இது சுவையானதோடு சத்தானதும் கூட. தென்தமிழ்நாட்டிலும், கொங்கு மண்டலத்திலும் இனிப்பு போளி செய்யப்படுகிறது. இப்பொழுது பல வகையான இனிப்பு போளிகள் செய்யப்படுகின்றன. ஆனாலும் தேங்காய் போளி, பருப்பு போளி இரண்டும் பரவலாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகை. அதனால் நாம் சற்று ‌வித்தியாசமாக பேரிச்சம் பழ போளி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

பேரிச்சம்பழ போளி | Dates Poli Recipe In Tamil

உகாதி பண்டிகையின் போது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் செய்யப்படும் இனிப்பு பருப்பு போளி. இது சுவையானதோடு சத்தானதும் கூட. தென்தமிழ்நாட்டிலும், கொங்கு மண்டலத்திலும் இனிப்பு போளி செய்யப்படுகிறது. இப்பொழுது பல வகையான இனிப்புபோளிகள் செய்யப்படுகின்றன. ஆனாலும் தேங்காய் போளி, பருப்பு போளி இரண்டும் பரவலாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகை. அதனால் நாம் சற்று ‌வித்தியாசமாக பேரிச்சம் பழ போளி எப்படிசெய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Dessert
Cuisine: tamil nadu
Keyword: Dates Poli
Yield: 4
Calories: 634kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கருப்பு பேரிச்சம் பழம்
  • 1 கப் வெல்லம்
  • 1 ஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1 கப் மைதா மாவு
  • 5 ஸ்பூன் நெய்
  • 1/2 கப் எண்ணெய்
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் உப்பு
  • 1 வாழை இலை

செய்முறை

  • முதலில் மைதா மாவை சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு இனக்கமாக பிசைந்து கொள்ளவும்.பிசைந்த உருண்டைகளை எண்ணெய் நன்கு விட்டு ஊற வைக்கவும்க். அதேசமயம் பேரிச்சம் பழத்தை கொட்டை நீக்கி வைக்கவும்.
  • ஒரு மிக்ஸியில் பேரிச்சம்பழதுடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து அரைத்து எடுக்கவும்.பின் அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் விட்டு நாம் அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி விடவும். கைவிடாமல் நெய் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறவும்.
  • நாம் ஊற வைத்த மாவை சிறிய உருண்டையாக உருட்டவும். இலையில் எண்ணெய் நன்கு தடவி பின்னர் மாவை வைத்து தட்டவும். பின்னர் பேரிச்சம் பழம் உருண்டையை மாவின் மேல் வைத்து மூடி நன்கு தட்டவும்.
  • அடுப்பில்தோசை கல்லை வைத்து மிதமான தீயில் போளியை சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பேரிச்சம் பழம் போளி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 634kcal | Carbohydrates: 34.2g | Protein: 1.2g | Fat: 4.5g | Cholesterol: 8.6mg | Sodium: 123mg | Potassium: 243mg | Fiber: 1.2g | Calcium: 32mg