சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட ருசியான தாபா ஸ்டைல் சென்னா மசாலா இப்படி செய்து பாருங்கள்!

- Advertisement -

உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? என்னதான் வீட்டில் பூரிக்கு மசாலவும், குருமாவும் செய்தாலும் குடும்பத்துடன் சைவ உணவகங்களுக்கு சென்றால் வாங்கி சாப்பிடுவது இந்த சென்னா மசாலா தான். அப்படியானால் ஹோட்டலில் கொடுக்கப்படும் சன்னா மசாலாவை வீட்டிலேயே செய்து கொடுங்கள்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மசாலா பணியாரம் இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி பணியாரமும் காலியாகும்!

- Advertisement -

இதனால் 2 சப்பாத்தி சாப்பிடுபவர்கள் 4 சப்பாத்தி சாப்பிடுவார்கள். இது பஞ்சாபில் இருந்து பெறப்பட்ட சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவு வகைகளில் பூரி, சப்பாத்தி என்றாலே பிடித்தமான ஒன்றாகும். அந்த பூரி சப்பாத்திக்கு கொண்டைக்கடலையை வைத்து தாபா ஸ்டைல் சென்னா மசாலா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.

Print
5 from 2 votes

தாபா ஸ்டைல் சென்னா மசாலா | Dhaba Style Channa Masala Recipe in Tamil

உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? என்னதான் வீட்டில் பூரிக்கு மசாலவும், குருமாவும் செய்தாலும் குடும்பத்துடன் சைவ உணவகங்களுக்கு சென்றால் வாங்கி சாப்பிடுவது இந்த சென்னா மசாலா தான். அப்படியானால் ஹோட்டலில் கொடுக்கப்படும் சன்னா மசாலாவை வீட்டிலேயே செய்து கொடுங்கள். இதனால் 2 சப்பாத்தி சாப்பிடுபவர்கள் 4 சப்பாத்தி சாப்பிடுவார்கள். இது பஞ்சாபில் இருந்து பெறப்பட்ட சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Chana Masala
Yield: 4 People
Calories: 105kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கருப்பு சுண்டல்
  • 1 பெரிய
  • 2 தக்காளி
  • 2 டீஸ்பூன் இஞ்சி
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி
  • 1/2 டீஸ்பூன் கரம்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் மஆம்சூர் பவுடர்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • 1/2 கப் நறுக்கிய கொத்தமல்லி இலை
  • 2 மிளகாய்
  • 1 ஸ்பூன் நெய்
  • 1/2 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி

தாளிக்க

  • 1 பட்டை
  • 3 டீஸ்பூன் எண்ணெய்
  • 2 கருப்பு ஏலக்காய்
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 அண்ணாச்சி
  • 3 கிராம்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்

செய்முறை

  • முதலில் தக்காளி அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
  • சுண்டலை 8மணி நேரம் ஊற வைத்து பின் குக்கரில் சுண்டல் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 5 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, அண்ணாச்சி பூ, ஏலக்காய், சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • பின் கொடுத்துள்ள மசாலா பொருட்கள், பெருங்காயத்தூள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும் பின் தக்காளி அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்.
  • பின்னர் வேக வைத்த சுண்டல் 1/4கப் எடுத்து மிக்ஸியில் அரைத்து கடாயில் சேர்த்து கலந்து விடவும்.
  • இதனுடன் மீதி உள்ள சுண்டல் வேக வைத்து தண்ணீரோடு சேர்த்து கலந்து விடவும்.
  • இந்த மசாலா கறி நன்றாக தேவையான பதம் வந்ததும், மல்லித்தழை, மிளகாய், கஸ்தூரி மேத்தி சேர்த்து கலந்து, கடைசியாக நெய் விட்டு மேலும் ஒரு கொதி விட்டு இறக்கவும்.
  • அவ்வளவுதான். சுவையான தாபா ஸ்டைல் கடலை கறி ரெடி. இது சப்பாத்தி, நாண், பூரி எல்லாவற்றிற்கும் மிகப் பொருத்தமாக இருக்கும்.

Nutrition

Serving: 700g | Calories: 105kcal | Carbohydrates: 5.2g | Protein: 2.9g | Fat: 8.4g | Saturated Fat: 3.9g | Sodium: 107mg | Potassium: 40mg | Fiber: 2g | Calcium: 10mg | Iron: 2mg