பிரபலமான குஜராத்தி ரெசிபி டோக்ளா இப்படி செய்து பாருங்க! இதன் ருசி அபாரமாக இருக்கும்!

- Advertisement -

டோக்ளா என்பது மிகவும் பிரபலமான சிற்றுண்டி மற்றும் காலை உணவு ரெசிபி ஆகும், இது இந்தியா முழுவதும் உள்ள மக்களால்  விரும்பி சாப்பிடுகிறது. குழந்தைகளால் விரும்பப்படும், ஒரு உன்னதமான குஜராத்தி செய்முறை, இந்த உணவை எந்த சந்தர்ப்பத்திலும் தயாரிக்கலாம். டோக்ளா என்பது உங்கள் வீட்டில் கிடைக்கும் கடலைமாவு ,எலுமிச்சை சாறு, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றைக் கொண்டு சமைக்கக்கூடிய எளிதான செய்முறையாகும். . இனிப்பு மற்றும் புளிப்பு சுவையில் இருக்கும் இந்த டோக்ளா ரெசிபி அனைவருக்கும் பிடிக்கும்!  வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்

-விளம்பரம்-
Print
No ratings yet

டோக்ளா | Dhokla Recipe In Tamil

குழந்தைகளால் விரும்பப்படும், ஒரு உன்னதமான குஜராத்தி செய்முறை, இந்த உணவை எந்த சந்தர்ப்பத்திலும் தயாரிக்கலாம். டோக்ளா என்பது உங்கள் வீட்டில் கிடைக்கும் கடலைமாவு ,எலுமிச்சை சாறு, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றைக் கொண்டு சமைக்கக்கூடிய எளிதான செய்முறையாகும். . இனிப்பு மற்றும் புளிப்பு சுவையில் இருக்கும் இந்த டோக்ளா ரெசிபி அனைவருக்கும் பிடிக்கும்!  வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, snacks
Cuisine: gujarat
Keyword: dhokla
Yield: 4
Calories: 310kcal

Equipment

  • 1 இட்லி பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கடலைமாவு
  • 1 கப் தண்ணீர்
  • அரை டீஸ்பூன் ஆப்ப சோடா
  • அரை டீஸ்பூன் லெமன் சால்ட் (சிட்ரிக் ஆசிட்)
  • 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்
  • அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள்

தாளிக்க

  • அரை டீஸ்பூன் கடுகு
  • 2 பச்சை மிளகாய்
  • அரை டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம்
  • 1 டீஸ்பூன் எண்ணெய்

செய்முறை

  • கடலை மாவுடன் உப்பு, லெமன் சால்ட், தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரையுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தில் கால் பாகம் தண்ணீர் வைத்து சூடாக்குங்கள். சற்று உயரமான விளிம்புள்ள தட்டில் எண்ணெய் தடவுங்கள்.
  •  1 டீஸ்பூன் சூடான தண்ணீரில் ஆப்ப சோடாவை கரைத்து கடலை மாவு கலவையில் சேர்த்து கலக்குங்கள். இது நுரை போல் பொங்கும். இக்கலவையை எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றுங்கள்.
  • சூடான தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் ஒரு சிறிய கிண்ணத்தை "ஸ்டாண்ட்" மாதிரி கவிழ்த்துப் போட்டு அதன் மேல் கலவை ஊற்றிய தட்டை வைத்து மூடுங்கள். நடுத்தர தீயில் நன்கு வேகவிடுங்கள். (வெந்துவிட்டதா என்பதை அறிய, ஒரு கத்தியை மாவுக்குள் குத்தி எடுத்தால் ஒட்டாமல் வரும்). இதை வெளியே எடுத்து ஆறவிட்டு, துண்டுகளாக்குங்கள்.
  • எண்ணெயைக் காய வைத்து கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய மிளகாய்,பெருங்காயம் தாளித்து, அரை கப் தண்ணீரில் சர்க்கரையை கரைத்து அத்துடன் சேருங்கள். கொதித்ததும் டோக்ளா மேல் பரவினாற் போல் ஊற்றுங்கள். தேங்காய் துருவல், மல்லி, காரப்பொடி தூவி அலங்கரியுங்கள்.

Nutrition

Serving: 100g | Calories: 310kcal | Carbohydrates: 48g | Protein: 3.6g | Fat: 2g | Fiber: 2.6g | Sugar: 8g | Calcium: 11.2mg | Iron: 0.9mg
- Advertisement -