பார்த்தாலே நாவில் எச்சி ஊறும் திண்டுக்கல் சிக்கன் வறுவல் இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க!

- Advertisement -

விடுமுறை நாட்கள் என்றாலே பெரும்பாலானோரின் வீட்டில் சிக்கன், மட்டன் சமைக்கும் வழக்கம் இருக்கும். அசைவங்களில் நிறைய வகைகள் இருந்தாலும், குழந்தைகள் விரும்பி உண்பது சிக்கன். சிக்கனில் பல வகை உணுவுகளை தயார் செய்யலாம். சிக்கனை பயன்படுத்தி நமக்கு பிடித்த பல விதவிதமான ரெசிபிகளை செய்து அசத்த முடியும். அதிலும் முக்கியமாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் விதவிதமான சுவையிலும் விதவிதமான முறையிலும் சிக்கன் சமைக்கப்படுகிறது.

-விளம்பரம்-

நீங்கள் இன்று மதியம் சிக்கன் செய்ய நினைத்தால், திண்டுக்கல் சிக்கன் வறுவல் செய்யுங்கள். இந்த சிக்கன் வறுவல் சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் சுலபமான செய்முறையைக் கொண்டது.சிக்கன் வறுவல் மசாலா அரைத்து செய்யப்படும் அசைவ உணவு. இது ரசம் சாதம், நெய் சோறு, பிரியாணி, சப்பாத்தி, தோசை, ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். சிக்கன் வறுவல் நாம் பலவிதமாக செய்யலாம், செட்டிநாடு சிக்கன் வறுவல், சிக்கன் ரோஸ்ட், சிக்கன் மசாலா ப்ரை, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக செய்யப்படுகிறது.

- Advertisement -

முக்கியமாக மசாலாக்கள் நிறைந்த காரமான சுவையை அனுபவிக்க விரும்பும் மசாலா பிரியர்களுக்கு இந்த திண்டுக்கல் சிக்கன் வறுவல் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். முக்கியமாக மழைக்காலங்களில் இந்த திண்டுக்கல் சிக்கன் வறுவல் சாப்பிடுவது அற்புதமான ஒரு அனுபவத்தை கொடுக்கும். சிக்கன் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரொம்பவே விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. இந்த பதிவில் திண்டுக்கல் சிக்கன் வறுவல் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Print
5 from 1 vote

திண்டுக்கல் சிக்கன் வறுவல் | Dindigul chicken roast recipe in tamil

விடுமுறை நாட்கள் என்றாலே பெரும்பாலானோரின் வீட்டில் சிக்கன், மட்டன் சமைக்கும் வழக்கம் இருக்கும். அசைவங்களில் நிறைய வகைகள் இருந்தாலும், குழந்தைகள் விரும்பி உண்பது சிக்கன். சிக்கனில் பல வகை உணுவுகளை தயார் செய்யலாம். சிக்கனை பயன்படுத்தி நமக்கு பிடித்த பல விதவிதமான ரெசிபிகளை செய்து அசத்த முடியும். அதிலும் முக்கியமாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் விதவிதமான சுவையிலும் விதவிதமான முறையிலும் சிக்கன் சமைக்கப்படுகிறது. நீங்கள் இன்று மதியம் சிக்கன் செய்ய நினைத்தால், திண்டுக்கல் சிக்கன் வறுவல் செய்யுங்கள். இந்த சிக்கன் வறுவல் சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian, tamil nadu
Keyword: chicken roast
Yield: 4 People

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/2 கி சிக்கன்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 கொத்து கறிவேப்பிலை

அரைக்க

  • 2 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் மிளகு, சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 1 துண்டு இஞ்சி
  • 6 பல் பூண்டு

சிக்கன் ஊற வைக்க

  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • தேவையான அளவு உப்பு                           

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் சிக்கனில் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், பெருஞ்சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  • அதன்பிறகு நாம் ஊற வைத்த சிக்கனை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.
  • சிக்கன் பாதி வெந்ததும் இடையில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். சிக்கன் நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான திண்டுக்கல் சிக்கன் வறுவல் தயார்.

Nutrition

Serving: 600g | Carbohydrates: 131g | Protein: 26g | Fat: 2g | Saturated Fat: 0.7g | Sodium: 48mg | Potassium: 77.5mg | Vitamin A: 295IU | Vitamin C: 606mg | Calcium: 24.71mg | Iron: 0.21mg