Advertisement
ஆன்மிகம்

பார்த்தாலே நாவில் எச்சி ஊறும் திண்டுக்கல் சிக்கன் வறுவல் இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க!

Advertisement

விடுமுறை நாட்கள் என்றாலே பெரும்பாலானோரின் வீட்டில் சிக்கன், மட்டன் சமைக்கும் வழக்கம் இருக்கும். அசைவங்களில் நிறைய வகைகள் இருந்தாலும், குழந்தைகள் விரும்பி உண்பது சிக்கன். சிக்கனில் பல வகை உணுவுகளை தயார் செய்யலாம். சிக்கனை பயன்படுத்தி நமக்கு பிடித்த பல விதவிதமான ரெசிபிகளை செய்து அசத்த முடியும். அதிலும் முக்கியமாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் விதவிதமான சுவையிலும் விதவிதமான முறையிலும் சிக்கன் சமைக்கப்படுகிறது.

நீங்கள் இன்று மதியம் சிக்கன் செய்ய நினைத்தால், திண்டுக்கல் சிக்கன் வறுவல் செய்யுங்கள். இந்த சிக்கன் வறுவல் சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் சுலபமான செய்முறையைக் கொண்டது.சிக்கன் வறுவல் மசாலா அரைத்து செய்யப்படும் அசைவ உணவு. இது ரசம் சாதம், நெய் சோறு, பிரியாணி, சப்பாத்தி, தோசை, ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். சிக்கன் வறுவல் நாம் பலவிதமாக செய்யலாம், செட்டிநாடு சிக்கன் வறுவல், சிக்கன் ரோஸ்ட், சிக்கன் மசாலா ப்ரை, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக செய்யப்படுகிறது.

Advertisement

முக்கியமாக மசாலாக்கள் நிறைந்த காரமான சுவையை அனுபவிக்க விரும்பும் மசாலா பிரியர்களுக்கு இந்த திண்டுக்கல் சிக்கன் வறுவல் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். முக்கியமாக மழைக்காலங்களில் இந்த திண்டுக்கல் சிக்கன் வறுவல் சாப்பிடுவது அற்புதமான ஒரு அனுபவத்தை கொடுக்கும். சிக்கன் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரொம்பவே விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. இந்த பதிவில் திண்டுக்கல் சிக்கன் வறுவல் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

திண்டுக்கல் சிக்கன் வறுவல் | Dindigul chicken roast recipe in tamil

Print Recipe
விடுமுறை நாட்கள் என்றாலே பெரும்பாலானோரின் வீட்டில் சிக்கன், மட்டன் சமைக்கும் வழக்கம் இருக்கும். அசைவங்களில் நிறைய வகைகள் இருந்தாலும், குழந்தைகள் விரும்பி உண்பது சிக்கன். சிக்கனில் பல வகை உணுவுகளை தயார் செய்யலாம். சிக்கனை பயன்படுத்தி நமக்கு பிடித்த பல விதவிதமான ரெசிபிகளை
Advertisement
செய்து அசத்த முடியும். அதிலும் முக்கியமாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் விதவிதமான சுவையிலும் விதவிதமான முறையிலும் சிக்கன் சமைக்கப்படுகிறது. நீங்கள் இன்று மதியம் சிக்கன் செய்ய நினைத்தால், திண்டுக்கல் சிக்கன் வறுவல் செய்யுங்கள். இந்த சிக்கன் வறுவல் சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
Course dinner, LUNCH
Cuisine Indian, tamil nadu
Keyword chicken roast
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time
Advertisement
30 minutes
Servings 4 People

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • 1/2 கி சிக்கன்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 கொத்து கறிவேப்பிலை

அரைக்க

  • 2 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் மிளகு, சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 1 துண்டு இஞ்சி
  • 6 பல் பூண்டு

சிக்கன் ஊற வைக்க

  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • தேவையான அளவு உப்பு                           

Instructions

  • முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் சிக்கனில் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், பெருஞ்சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  • அதன்பிறகு நாம் ஊற வைத்த சிக்கனை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.
  • சிக்கன் பாதி வெந்ததும் இடையில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். சிக்கன் நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான திண்டுக்கல் சிக்கன் வறுவல் தயார்.

Nutrition

Serving: 600g | Carbohydrates: 131g | Protein: 26g | Fat: 2g | Saturated Fat: 0.7g | Sodium: 48mg | Potassium: 77.5mg | Vitamin A: 295IU | Vitamin C: 606mg | Calcium: 24.71mg | Iron: 0.21mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

11 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

17 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 நாள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago