Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ஏற்ற பக்காவான அவரைக்காய் பொரியல் கூட்டு இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

மனிதனுக்கு உணவாக பயன்படும் தாவரங்கள் பல இருக்கின்றன. கொடியாக படர்ந்து காய்களை தரும் பல தாவர வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் “அவரைக்காய்”. அதிகம் மக்கள் விரும்பி உண்ணக்கூடிய ஒரு காய் வகையாக இந்த அவரைக்காய் இருக்கிறது அவரைக்காய் சாப்பிடுவதால்அவரைக்காயில் இருக்கும் அதிகப்படியான புரத சத்துக்கள் தலைமுடி பிரச்சனையை விரைவாக சரி செய்கிறது.

எனவே அடிக்கடி அவரைக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். ஆனால் அவரைக்காய் என்றாலே பலருக்கும் பிடிப்பதில்லை. குறிப்பாக குழந்தைகளுக்கு அவரைக்காய் என்றாலே சாப்பாடு இறங்காது. ஆனால் இந்த முறையில் ஒருமுறை அவரைக்காயை சமைத்துக் கொடுத்து பாருங்கள், தட்டில் ஒரு துண்டு அவரைக்காய் பொரியல் கூட மிஞ்சாது, எல்லாமே காலியாகிவிடும்.

Advertisement

சாதாரணமாக நம்முடைய வீட்டில் செய்யும் அவரைக்காய் பொரியல் போல இந்த ரெசிப்பி இருக்காது. கொஞ்சம் வித்தியாசமான முறையில் வேர்க்கடலை , மசாலா பொருட்களை சேர்த்து, வித்தியாசமான சுவையில் செய்யப்போகும் அவரைக்காய் ரெசிபியை எப்படி செய்வது. தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

அவரைக்காய் பொரியல் | Broad Beans Stir Fry In Tamil

Print Recipe
அவரைக்காய் பொரியல், இந்த அவரைக்காய் இருக்கிறது அவரைக்காய் சாப்பிடுவதால்அவரைக்காயில் இருக்கும் அதிகப்படியான புரத சத்துக்கள் தலைமுடி பிரச்சனையை விரைவாக சரிசெய்கிறது. , அடிக்கடி அவரைக்காய்
Advertisement
சாப்பிட்டுவந்தால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். ஆனால் அவரைக்காய் என்றாலே பலருக்கும் பிடிப்பதில்லை.குறிப்பாக குழந்தைகளுக்கு அவரைக்காய் என்றாலே சாப்பாடு இறங்காது. ஆனால் இந்த முறையில்ஒருமுறை அவரைக்காயை சமைத்துக் கொடுத்து பாருங்கள், தட்டில் ஒரு துண்டு அவரைக்காய் பொரியல்கூட மிஞ்சாது, எல்லாமே காலியாகிவிடும்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Broad Beans Stir Fry
Prep Time
Advertisement
5 minutes
Cook Time 10 minutes
Servings 4

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ அவரைக்காய்
  • 1 கைப்பிடி வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள் தேவைக்கு
  • உப்பு தேவைக்கு
  • எண்ணெய் சிறிது

வறுத்துபொடிக்க:

  • 1 தேக்கரண்டி வேர்க்கடலை
  • 1 தேக்கரண்டி அரிசி

தாளிக்க

  • கடுகு சிறிது
  • 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • பெருங்காயம் சிறிது
  • 1/2 தேக்கரண்டி சோம்பு

Instructions

  • தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். காயை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
  • அரிசியையும்,வேர்க்கடலையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து, அரைத்துக் கொள்ளவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும்.
  • பின் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாயை போட்டு வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின் அவரைக்காயைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
  • அவரைக்காய் வெந்ததும், அரைத்து வைத்த வேர்க்கடலை, அரிசி பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
  • சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி.
     

Notes

பருப்பு சாதத்திற்கு ஏற்றது. வெறும் சாதத்தில் பிரட்டி சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 100g | Carbohydrates: 8.2g | Protein: 6.1g | Saturated Fat: 0.4g | Fiber: 6g
Advertisement
Prem Kumar

Recent Posts

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

2 மணி நேரங்கள் ago

ரொம்பவே சிம்பிளான ஒரு வர மிளகாய் துவையல் எப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

வீட்டில் வேலை பார்த்து பார்த்து ரொம்ப சலிச்சு போனவங்க இட்லி தோசைக்கு பேச எந்த சட்னியும் அரைக்காமல் இந்த மாதிரி…

2 மணி நேரங்கள் ago

ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவையான மற்றும் மொறு மொறுவென்ற இந்த நெத்திலி மீன் ஃப்ரை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் மீன் வறுவல் செய்வீர்கள்!!

ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை…

4 மணி நேரங்கள் ago

கருங்காலி மாலை அணிய வேண்டிய ராசிக்காரர்கள்

பொதுவாக ஆன்மீகத்தில் பலரால் நம்பப்பட்ட ஒரு சில விஷயங்கள் ஒரு சில காலகட்டத்தில் மிகவும் சுவாரசியமாக பேசப்படும். அதேபோல் ஆன்மிகத்தை…

4 மணி நேரங்கள் ago

முலாம்பழ சர்பத் இந்த வெயிலுக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!

முலாம்பழம் வச்சு சர்பத்தா அப்படின்னு யோசிக்கிறீங்களா! ஆமாங்க முலாம் பழம் வச்சு சூப்பரான இதுவரைக்கும் நீங்க சாப்பிடாத ஒரு சுவைல…

5 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் காளான் கொத்துக்கறி இப்படி செய்து கொடுத்து பாருங்க கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

வீட்ல விரதம் இருந்தாலோ புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடல அப்படின்னாலும் அந்த நேரங்கள்ல நம்ம காளான் சோயா காலிஃப்ளவர் இத…

6 மணி நேரங்கள் ago