- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
மனிதனுக்கு உணவாக பயன்படும் தாவரங்கள் பல இருக்கின்றன. கொடியாக படர்ந்து காய்களை தரும் பல தாவர வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் “அவரைக்காய்”. அதிகம் மக்கள் விரும்பி உண்ணக்கூடிய ஒரு காய் வகையாக இந்த அவரைக்காய் இருக்கிறது அவரைக்காய் சாப்பிடுவதால்அவரைக்காயில் இருக்கும் அதிகப்படியான புரத சத்துக்கள் தலைமுடி பிரச்சனையை விரைவாக சரி செய்கிறது.
எனவே அடிக்கடி அவரைக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். ஆனால் அவரைக்காய் என்றாலே பலருக்கும் பிடிப்பதில்லை. குறிப்பாக குழந்தைகளுக்கு அவரைக்காய் என்றாலே சாப்பாடு இறங்காது. ஆனால் இந்த முறையில் ஒருமுறை அவரைக்காயை சமைத்துக் கொடுத்து பாருங்கள், தட்டில் ஒரு துண்டு அவரைக்காய் பொரியல் கூட மிஞ்சாது, எல்லாமே காலியாகிவிடும்.
சாதாரணமாக நம்முடைய வீட்டில் செய்யும் அவரைக்காய் பொரியல் போல இந்த ரெசிப்பி இருக்காது. கொஞ்சம் வித்தியாசமான முறையில் வேர்க்கடலை , மசாலா பொருட்களை சேர்த்து, வித்தியாசமான சுவையில் செய்யப்போகும் அவரைக்காய் ரெசிபியை எப்படி செய்வது. தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
Ingredients
Method
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். காயை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
அரிசியையும்,வேர்க்கடலையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து, அரைத்துக் கொள்ளவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாயை போட்டு வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின் அவரைக்காயைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
அவரைக்காய் வெந்ததும், அரைத்து வைத்த வேர்க்கடலை, அரிசி பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி.






