Advertisement
ஆன்மிகம்

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

Advertisement

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று தங்கம் வெள்ளி புது வீடு என்று புதியதாக ஒரு சில விஷயங்களை வாங்கினால் அது மென்மேலும் உயர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.

சூரிய பகவான் அவருடைய உச்ச ராசியான மேஷ ராசியிலும் சந்திரன் அவருடைய உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்திருக்கும் நாளை அட்சய திருதியை என்று அழைக்கிறோம்.

Advertisement

2024 அட்சய திருதியை

2024 வது வருடம் அட்சய திருதியை மே பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இந்த வருட அட்சய திருதியை வெள்ளிக்கிழமை வருவதால் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மே பத்தாம் தேதி காலை 4.17 மணிக்கு அட்சய திருதியை தொடங்கி மே பதினொன்றாம் தேதி 2.50 மணிக்கு முடியும். இந்த அட்சய திருதியை அன்று தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவதோடு மட்டுமில்லாமல் வீட்டில் இன்னும் ஒரு சில விஷயங்களை செய்தால் நமக்கு பல்வேறு நன்மைகள் நடக்கும்.

தங்க நகை வாங்க உகந்த நேரம்

அட்சய திருதியை என்றால் பலருக்கும் தங்கம் வாங்க வேண்டும் என்பது தான் நினைவுக்கு வரும். அட்சய திருதியை மையப் புள்ளியாகத் தங்கம் தான் இருந்து வருகிறது. இந்த நாளில் தங்கம் வாங்குவது செல்வம் மற்றும் செழிப்பைக் குறிக்கிறது. இந்த நாளில் தங்கம் வாங்குவது ஒருவரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. மே 10 மற்றும் 11 ஆகிய இரு தினமும் காலை 5:33 முதல் மதியம் 12:18 வரை தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தரும் நேரமாகும்.

அட்சய திருதியை சிறப்புகள்

அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு எழுத கற்பித்தால் அவர்களது கல்விச் செல்வம் பெருகும்.‌ அட்சய திருதியை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் போகும் என்கிறார்கள். அட்சய திருதியை நன்னாளில்தான் பிரம்ம தேவர் உலகத்தை படைத்தார் என்கின்றன புராண கதைகள். வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள். மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்று தான் சிறப்பு வரம் பெற்றாள். அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன. சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

அட்சய திருதியையில் வாங்க வேண்டிய பொருட்கள்

தங்கம்

தங்கம் நிறைய பாரம்பரிய மதிப்பையும் கொண்டுள்ளது. அட்சய திருதியை அன்று வாங்கும் தங்கத்தின் மதிப்பு மட்டுமே அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

ஆடைகள்

புதிய ஆடைகள் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் அதிகரிக்கும். அட்சய திருதியை அன்று புதிய ஆடைகள் வாங்கினால் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.

Advertisement

மஞ்சள் குங்குமம்

அட்சய திருதியை மங்கலகரமான நாள் என்பதால் இந்த நாளில் மஞ்சள், குங்குமம் போன்ற மங்கல பொருட்களை வாங்குவது மிகவும் சிறப்பானது. இந்த பொருட்களை வாங்கி பூஜை செய்வதன் மூலம் வாழ்க்கையில் உயர்வான நிலையை அடைவதுடன், கணவரின் ஆயுள் பலமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

வெள்ளி பொருட்கள்

அட்சய திருதியை அன்று வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களை வாங்குவது அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும். இந்த நாளில் சேர்க்கும் செல்வம், செய்யும் தானங்கள் ஆகியன பல மடங்கு புண்ணியமாகவும், லாபமாகவும் பெருகும் என்பது நம்பிக்கை.

Advertisement

மண்பானை

அட்சய திருதியை நாளில் வீட்டிற்கு மண்பானை வாங்கினால் லட்சுமி தேவி மகிழ்வாள் என்று நம்பப்படுகின்றது. அன்றைய தினம் மண்பானை வாங்கி வைப்பது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அதிகரிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

தானம்

அட்சய திருதியை அன்று வஸ்திர தானம் செய்வது நல்லது. அன்னதானம் கொடுப்பதும் சிறப்பு. அத்துடன் அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொடுக்க வேண்டும். அதனால் அட்சய திருதியை அள்ள, அள்ள குறையாமல் புண்ணிய செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று நம்பப்படுகிறது. காசாக கொடுக்கக்கூடாது. அவர்களுடைய தேவை என்னவோ அதை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுப்பது நல்லது.

பூஜை செய்யும் முறை

அட்சய திருதியை தினத்தில் அதிகாலையிலேயே நீராடிவிட்டு, பூஜை அறையில் கோல மிட வேண்டும். பின் ஒரு பலகையை வைத்து அதன்மேல் வாழையிலை விரித்து அதன்நடுவில் கொஞ்சம் பச்சரியை பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் கலசம் வைத்து, விளக்கு ஏற்றி லட்சுமி தேவியை நினைத்து வழிபடவும். நெய் விளக்கேற்றி, இனிப்புக்கள் படைத்து வழிபடுவது சிறப்பு. பின் உங்களுக்குத் தெரிந்த விஷ்ணு-லட்சுமி, சிவன்-பார்வதி, குபேரன், துதிகளைச் சொல்லுங்கள். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது.

இதனையும் படியுங்கள் : 2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பணம் அதிகமாக சேர்வதற்கு அதிர்ஷ்டம் உள்ள சில ராசிகள்

Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

14 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

21 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago