Home ஆன்மிகம் வீட்டின் முன் நாய் ஊளையிட்டால் அது மரணததின் அறிகுறியா ?

வீட்டின் முன் நாய் ஊளையிட்டால் அது மரணததின் அறிகுறியா ?

நம் தமிழகத்தில் மதம் சார்ந்த பல நம்பிக்கைகள் இன்றளவும் பலரால் நம்பப்பட்டு வருகிறது. அதை ஒருவர் மூடநம்பிக்கை என்பார், ஒருவர் அது கடவுள் சார்ந்த விஷயம் என்பார், ஒரு சிலர் தான் அதன் பின் இருப்பது அறிவியல் என்று கூறுவார்கள். இப்படி நாம் தமிழகத்தில் பரவி கிடக்கும் பல மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று ஆம், இரவு நேரத்தில் பைரவரின் வாகனமான நாய் ஒருவர் வீட்டு முன்பு நின்று ஊளையிட்டால் அந்த வீட்டில் இருப்பவர்களே யாரோ ஒருவர் மரணம் ஆகி விடுவார் என்ற நம்பிக்கையை இன்றளவும் உள்ளது. அதனால் இன்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் இது உண்மையா இல்லையா என்பதை பற்றிதான் காணப் போகிறோம்.

-விளம்பரம்-

வீட்டின் முன்பு நாய் ஊளையிடுவதால் மரணம் நடக்குமா, நடக்காதா, என்பதை தாண்டி நம் தமிழகத்தில் இருக்கும் மக்கள் அதை ஒரு மிகப்பெரிய கெட்ட சகுனமாக இன்றளவும் கருதுகின்றனர். ஆனால் இரவு நேரங்களில் நாய்கள் குரைப்பதும், ஊளையிடுவதும் இயற்கையான ஒரு விஷயம் தான். ஆனால் இரவு நேரங்களில் நாய்கள் ஊளை இடுவது குறித்து அறிவியல் என்ன சொல்கிறது என்றால் மனிதர்களிடம் பாசமாக இருக்கும் நாய்கள் இரவு நேரங்களில் மனிதர்கள் அனைவரும் தூங்க சென்று விட்ட பின் தனிமையை உணரும் பட்சத்தில் தன் அழுகையின் காரணமாக ஊளை விடுகிறது என்று கூறுகிறது அறிவியல்.

அதனால் அந்த தனிமையின் காரணமாக நாய்கள் நம்மளை ஈர்ப்பதற்காகவும், நம் கவனத்தை அதன் பக்கம் திருப்புவதற்காகவும் இரவு நேரங்களில் ஊளை இடுகிறதாம். இது போன்ற நாய்கள் தனிமையில் ஊளையிடும் போது அதன் அருகில் நின்று சிறிது நேரம் பேசிவிட்டு வந்தால் அது ஊளையிடுவதை நிறுத்தி விடும் என்பதையும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதனால் இனி இரவு நேரங்களில் நாய்கள் ஊளையிடும் பொழுது அதை கண்டு பயம் கொள்ளாமல் நிம்மதியாக தூங்குங்கள் வேற யாரும் உங்களிடம் இதைப் பற்றி கேட்கும் பொழுதும் தெளிவான இந்த காரணத்தையும் அவர்களிடம் கூறி புரிய வையுங்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here