இந்த 3 பொருட்களை அடுத்தவரிடம் இருந்து நாம் வாங்கினால் பண வரவில் தடை ஏற்படும்!

- Advertisement -

கடன் வாங்குவது என்பது எந்த காலத்திலும் தவறானதாக கூறப்படுவதில்லை. ஆனால் எந்த பொருளை கடன் வாங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். சில பொருட்களை கடன் வாங்குவதின் மூலம், அவை நமது வாழ்வில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அவசர தேவை என்றால் நாம் முதலில் நாடுவது அக்கம் பக்கத்து வீட்டு காரர்களை தான். ஏனென்றால், அவர்கள் நமக்கு உதவுவதும். நாம் அவர்களுக்கு உதவுவதும் வழக்கமான விஷயம். அது பணமாக இருந்தாலும் சரி, பொருட்களாக இருந்தாலும் சரி, மாதம் கடைசியானால் நம்மிடம் இல்லாத பொருட்களை நாம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கேட்பதுண்டு அல்லது அவர்கள் நம்மிடம் கேட்பதுண்டு. அப்படி கேக்கும் போது நாமும் யோசிக்காமல் அவர்கள் கேட்கும் பொருளை நாம் கொடுத்து விடுவோம்.

- Advertisement -

கடன் வாங்குதல்

பணப்பிரச்சனை, மனக்கஷ்டம், நிம்மதியின்மை போன்றவைக்கு முக்கிய காரணம் சில பொருட்களை நாம் கடனாக வாங்குவதால் தானாம். இதனால் தான் வீட்டில் தரித்திரியம் ஏற்படுகிறதாம். நாம் அவசரத்திற்கு ஒருவரிடம் கடனாக எதாவது ஒரு பொருளை வாங்கி விடுகிறோம். இதனால் ஏற்படும் நன்மை தீமைகளை நாம் அறிவதில்லை. இதனை அசால்ட்டாக எடுத்துக்கொள்ளும்போது தான் இது பெரிய பிரச்சனை ஆகிறது. வாங்க எந்த பொருட்களை கடனாக வாங்க கூடாது என இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

எண்ணெய்

கடுகு மற்றும் எள் சனி பகவானுடன் தொடர்புடையது. அத்தகைய சூழ்நிலையில், அண்டை வீட்டாருக்கு ஒருபோதும் கடுகு எண்ணெயை கடனாக கொடுக்க முயற்சிக்காதீர்கள். சனிக்கிழமைகளில் கடுகு எண்ணெயை கோயிலில் வழங்குவது நல்லது. ஆனால், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொடுப்பது, அவர்களிடமிருந்து வாங்குவது அசுப பலனை ஏற்படுத்தும். கடுகு அல்லது எள் எண்ணெய்யை தானம் செய்வது அவர்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை நாம் விலைக்கு வாங்குவது போன்றது.

சர்க்கரை

சர்க்கரையை நாம் யாரிடம் இருந்தும் தானமாகவோ அல்லது இலவசமாகவோ வாங்க கூடாது. இந்த சர்க்கரையை நாம் தானமாக வாங்குவதால் நம் வீட்டில் பணவரவு குறைய தொடங்கும். சர்க்கரை சுக்கிர பகவானின் அம்சமாக இருக்கிறது. அதனால் சர்க்கரையை காசு கொடுத்து வாங்க வேண்டும். அப்போது தான் பணவரவு அதிகரிக்கும். இதை நாம் தானமாக வாங்கினால் பணவரவு தடைபடும். வீட்டில் கடன் சுமை அதிகரிக்கும். அதனால் சர்க்கரையை தனமாக வாங்காதீர்கள்.

-விளம்பரம்-

இரும்பு சம்பந்தமான பொருட்கள்

நாம் மற்றவர்களிடம் இருந்து இரும்பு பொருட்களை தானமாக வாங்க கூடாது. இரும்பு சம்மந்தப்பட்ட பொருட்களான கத்தி, கத்தரிக்கோல், தோசை கல், கடப்பாரை, அரிவாள் போன்ற பொருட்களை யாரிடம் இருந்தும் தானமாக வாங்க கூடாது. இரும்பு பொருட்களும் சனிபகவானின் அம்சம் என்பதால் இதை தானமாக வாங்க கூடாது. இதை தானமாக வாங்குவதால் வீட்டில் கடன் தொல்லை அதிகரிக்கும்.