Advertisement
ஆன்மிகம்

தோசை கல்லில் தோசை பிய்யாமல் வர என்ன செய்ய ? புதிய தோசை கல்லை எப்படி பழக்குவது ?

Advertisement

பொதுவாக என்னதான் பிரியாணி, பரோட்டா, தந்தூரி சிக்கன் அசைவ உணவுகளை வெளுத்து வாங்குபவர்களாக இருந்தாலும் அதைவிட நாம் வீட்டில் சாதாரணமாக செய்யும் டிபன் உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய நபர்கள்தான் இங்கு அதிகமாக இருக்கிறார்கள் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தோசையை விட அனைவருக்கும் பிடித்த டிபன் உணவு இருக்காது. அந்த அளவிற்கு தோசையை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள் யாருமே வெறுத்து ஒதுக்க மாட்டார்கள். மேலும் குறிப்பாக நம் தமிழகத்தில் செய்வது போன்று தோசை வேறு எங்கும் கிடைக்காது.

நான்ஸ்டிக் தவா

அதற்கு காரணம் நாம் உபயோகப்படுத்தும் தோசை கல் தான் ஆனால் இன்று பலர் அது வீடுகளில் நான்ஸ்டிக் தோசை தவா தான் உள்ளது. காரணம் அதில் தோசை சுடுவதற்கு எளிதாக உள்ளதாம் ஆனால் அதன் பின்னிருக்கும் ஆபத்தை தெரியாமல் உபயோகப்படுத்துகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் அந்த தோசை கல்லை எப்படி முறையாக பயன்படுத்தி தோசை வார்ப்பது என்று நிறைய நபர்களுக்கு தெரியாது ஆகையினால் இன்றைய பதிவில் புதிய தோசை கல்லை தோசை சுட எப்படி பழக்கப்படுத்துவது, பழைய கல்லில் தோசை பிய்யாமல் எப்படி சுடுவது என்பதைப் பற்றி இன்றைய தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Advertisement

புதிய தோசை கல்

முன்பெல்லாம் புதியதாக ஒரு தோசைக்கல் வாங்கினால் அதில் நன்றாக தோசை சுடுவதற்கு பழக்கவருக்காக சில வழிமுறைகள் இருந்த குறிப்பாக புதியதாக வாங்கும் தோசை கல்லை ஒரு நாள் முழுவதும் கூட சாதம் வடித்த வடிகஞ்சியில் வைத்திருப்பார்கள். இப்படி எல்லாம் கூட சில வழிமுறைகள் உள்ளன. ஆனால் இதை விட எளிமையான சில வழிமுறைகளும் புதிதாக வாங்கிய தோசைக்கல்லில் சிறிது நேரத்திலேயே தோசை சுடுவதற்கு ஏற்றார் போல் நாம் மாற்றலாம்.

ஆம் முதலில் புதியதாக வாங்கிய தோசைக்கல்லை எடுத்த உடனே அடுப்பில் வைக்கக் கூடாது. முதலில் தோசை கல்லில் உள்ள அழுக்குகளை தேங்காய் நார் அல்லது மெல்லியை காட்டண்

Advertisement
துணியை கொண்டு நன்கு தேய்த்து பின் தண்ணீர் வைத்து சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணையை ஊற்றிக் கொள்ளுங்கள்.

நாம் ஊற்றிய எண்ணெய் நன்கு சூடு ஏறியதும் அதில் ஒரு வெற்றிலை சேர்த்துக் கொள்ளுங்கள் எண்ணெயில் வெற்றிலை நன்கு வெந்ததும் மீண்டும் ஒரு

Advertisement
வெற்றிலை எடுத்து எண்ணெயில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் வெற்றிலையில் உள்ள சாறு எண்ணெயில் நன்கு கலந்தவுடன் ஒரு கரண்டியை எடுத்துக் கொண்டு அந்த வெற்றிலையை கல்லின் மூலை முடுக்கு என அனைத்து பக்களிலும் படும்மாறு நன்றாக தடவி விடுங்கள். சிறிது நேரம் கழித்து கல்லில் உள்ள வெற்றிலை மற்றும் எண்ணெயை எடுத்து விட்டு நீங்கள் வழக்கம் போல் தோசை செய்யலாம். தோசை பஞ்சு போன்ற மென்மையாகவும், மொறுகலாவும் கிடைக்கும்.

பழைய தோசை கல்

இப்பொழுது நாம் ஏற்கனவே நாம் பயன்படுத்தும் தோசை கல்லில் தோசை சரியாக வரவில்லை என்றால் அதில் எப்படி சரியாக்குவது என்று பார்க்கலாம் முதலில் தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கி கொள்ளவும். பின் அதில் உப்பு, வினிகர், எலுமிச்சை பழம் இந்த பொருட்களில் ஏதாவது ஒரு பொருளை வைத்து நன்றாக தேய்த்து விடுங்கள் அதன் பின்பு கல்லை தண்ணீர் வைத்து நன்கு கழுவி மீண்டும் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் பாதியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை நன்கு தேய்த்து விடுங்கள். அவ்வளவுதான் தோசை கல் இப்பொழுது தயாராகி விட்டது. இதில் தோசை உங்களுக்கு பஞ்சு போன்றும் மென்மையாக கிடைக்கும் இது போல் செய்து பாருங்கள் புதிதாக தோசைக்கல் வாங்க தேவை இல்லை

Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

6 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

12 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

15 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

16 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

20 மணி நேரங்கள் ago