பல வகையான ரசத்தில் இதுவும் ஒரு வகையான ரசம் ஆகும். இந்த ரசம் செய்வதற்கு முருங்கைக்காய் வேக வைத்து சதை எடுக்க வேண்டும், அதன் சுவை வித்தியாசமாகவும், ருசியாகவும் இருக்கும். ஒரு குண்டான் சாதம் இருந்தாலும் உங்களுக்கு பத்தவே பத்தாது. நீங்கள் ஊற்றி ஊற்றி சாப்பிட்டு கொண்டே இருக்கக்கூடிய அளவிற்கு அருமையான சுவையில் உள்ள இந்த முருங்கைக்காய் ரசம் ரெசிபி செய்யலாம்.
எந்த உணவு வகைகளை எடுத்துக் கொண்டாலும் நாம் செய்யும் முறையை காட்டிலும் நம்முடைய பாரம்பரயா முறைகள் சற்று வித்தியாசமானதாகவே இருக்கும். அதிலும் அதே உணவை கிராமத்தில் செய்வது ருசியாக இருப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இன்றைய சூழலில் நாம் அது போன்ற ஆரோக்கியமான பெரும்பாலான உணவு வகைகளை மறந்தே விட்டோம்.நம் எல்லோர் வீட்டிலும் தினமும் ரசம் வைக்க கூடிய பழக்கம் இருக்கும். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் மணக்க மணக்க முருங்கைக்காய் ரசத்தை ஒரு முறை இப்படி வைத்து பாருங்கள். வீடே மணக்கும். பசிக்காதவர்களுக்கு கூட இந்த வாசம் பசியை தூண்டும்.
முருங்கைக்காய் ரசம் | Drumstick Rasam Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 தப் துவரம் பருப்பு
- 1 முருங்கைக் காய் நறுக்கியது
- 1 டீஸ்பூன் தேங்காய் துருவல்
- 1 தக்காளி நறுக்கியது
- கொத்தமல்லிதழை சிறிது
- உப்பு தேவையானஅளவு
- கருவேப்பிலை சிறிது
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் மல்லி
- 2 வரமிளகாய்
- புளி சிறியளவு
- 1/2 டீஸ்பூன் மிளகு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு, மஞ்சள்பொடி 2 கப், தண்ணீர், நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து வேகவிடவும். மிளகு, சீரகம், மல்லி, பூண்டு தட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
- முருங்கைக்காய் துண்டுகளில் உள்ள சதையை மட்டும் எடுத்து வேக வைக்கவும், தக்காளியை, புளியுடன் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- அடுப்பில் வானொலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய், தேங்காய்த் துருவல்ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
- அதனுடன் கரைத்த புளி, தக்காளியை சேர்த்தது 5 நிமிடம் கொதித்ததும் தட்டி வைத்திருக்கும் ரசப்பொடி, வேகவைத்த பருப்பு, தண்ணீர், முருங்கைக்காய் துண்டுகளையும் சேர்த்து நன்றாக 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- இறுதியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான முருங்கைக்காய் ரசம் தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் :கல்யாண வீட்டு சுவையில் முருங்கக்காய் கார குழம்பு செய்வது எப்படி ?