மாலை நேரம் சூடாக குடிக்க ருசியான முருங்கைக்காய் சூப் இனி இப்படி வீட்டில் செய்து பாருங்க!

- Advertisement -

காய்கறிகள் சூப் செய்து உண்பதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. சிலருக்கு சில காய்கள் உண்ண பிடிக்காது. அப்படி உள்ள காய்களை சூப் செய்து உண்பதன்‌ மூலம் அதில் உள்ள‌ சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கும். முருங்கைக்காயை குழந்தைகள் அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இப்படி சூப் செய்து குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இலை, பூ, காய், விதை என முருங்கையின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் நிரம்பியவை. வருடம் முழுக்க எல்லா நாள்களிலும் கிடைக்கக்கூடிய முருங்கையை வாரத்தில் ஒருநாள் சேர்த்து கொள்வதே அபூர்வமாக இருக்கிறது பல குடும்பங்களில். முருங்கைக்காய் சாம்பார், அதைவிட்டா முருங்கைக்கீரை பொரியல், முருங்கையில் வேற என்ன செய்துட முடியும் என அலுத்துக்கொள்பவர்களுக்கு தான்‌ இந்த முருங்கைக்காய் சூப் ரெசிபி.

-விளம்பரம்-

முருங்கைக் கீரையை போல, முருங்கைக்காயிலும் கால்சியம் மற்றும் இரும்பு சத்துகளும், வைட்டமின்கள் உள்ளிட்ட பிற சத்துகளும் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுவடையும். இதனால் நோயெதிர்ப்பு ஆற்றலும் அதிகரிக்கும். இந்த நன்மைகளை பெற, முருங்கைக்காயை சூப் வடிவில் அருந்துவது சிறப்பாக இருக்கும். இந்த முருங்கைக்காய் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது, சீரண சக்தியை மேம்படுத்துகிறது, கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது, இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் சீக்கிரம் வயதாவதை தடுத்து இளமையை தக்க வைக்கிறது. எனவே, நீங்கள் ரொம்ப காலம் இளமையாக இருக்க நினைத்தால் இந்த முருங்கைக்காய் சூப் பருகுவது நல்லது. இதில் விட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது. வயதாகுவதால் ஏற்படும் கண் குறைபாட்டை தடுக்கிறது. இன்றைய பதிவில் குழந்தைகளுக்கு பிடித்தமான முருங்கைக்காய் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
5 from 1 vote

முருங்கைக்காய் சூப் | Drumstick Soup Recipe In Tamil

காய்கறிகள் சூப் செய்து உண்பதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. சிலருக்கு சில காய்கள் உண்ண பிடிக்காது. அப்படி உள்ள காய்களை சூப் செய்து உண்பதன்‌ மூலம் அதில் உள்ள‌ சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கும். முருங்கைக்காயை குழந்தைகள் அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இப்படி சூப் செய்து குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இலை, பூ, காய், விதை என முருங்கையின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் நிரம்பியவை. வருடம் முழுக்க எல்லா நாள்களிலும் கிடைக்கக்கூடிய முருங்கையை வாரத்தில் ஒருநாள் சேர்த்து கொள்வதே அபூர்வமாக இருக்கிறது பல குடும்பங்களில். முருங்கைக்காய் சாம்பார், அதைவிட்டா முருங்கைக்கீரை பொரியல், முருங்கையில் வேற என்ன செய்துட முடியும் என அலுத்துக்கொள்பவர்களுக்கு தான்‌ இந்த முருங்கைக்காய் சூப் ரெசிபி.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Soup
Cuisine: Indian
Keyword: Drumstick Soup
Yield: 3 People
Calories: 92kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 4 முருங்கைக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 6 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • 2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 கப் பாசிப்பருப்பு
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் முருங்கைக்காய், தக்காளி மற்றும் வெங்காயத்தை கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வைத்து வெண்ணை சேர்த்து அதில் நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து முருங்கைக்காய், பாசி பருப்பு மற்றும் வதக்கி வைத்திருக்கும் பூண்டு, வெங்காயம் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் வேக வைத்த முருங்கைக்காயின் விழுதை ஒரு ஸ்பூன் வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன்பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வேக வைத்த வெங்காயம், பாசி பருப்பு மற்றும் முருங்கைக்காய் விழுது சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் சேர்த்து நாம் அரைத்து வைத்துள்ள விழுதை வடிகட்டி சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் ஆரோக்கியமான, அருமையான சுவையில் முருங்கைக்காய் சூப் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 92kcal | Carbohydrates: 3.7g | Protein: 6.7g | Fat: 1.7g | Sodium: 42mg | Potassium: 70mg | Fiber: 4.8g | Vitamin A: 4IU | Vitamin C: 141mg | Calcium: 30mg | Iron: 5.3mg

இதனையும் படியுங்கள் : ருசியான முருங்கை பராத்தா அதுவும் பிரதமர் மோடிக்கு பிடிச்ச பராத்தா, இம்முறையில் செய்து அசத்துங்கள்!