சுவையான டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை அடிக்கடி உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் மிகவும் ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்தது!

- Advertisement -

கொழுக்கட்டை என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது விநாயகர் சதுர்த்தி தான். அன்றுதான் எல்லோர் வீட்டிலும் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு படைத்து அவர்களும் சாப்பிடுவார்கள். கொழுக்கட்டையில் பல வகைகள் உண்டு. பால் கொழுக்கட்டை பிடி கொழுக்கட்டை பூரண கொழுக்கட்டை கார கொழுக்கட்டை மடக்கு கொழுக்கட்டை.

-விளம்பரம்-

பொதுவாக நாம் ஆவிகள் வேகவைத்த சாப்பிடக்கூடிய எல்லா உணவுகளுமே நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமானது. அந்த வகையில் ஆவியில் வேகவைத்த உண்ணக்கூடிய கொழுக்கட்டையும் நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. பெரும்பாலும் இந்த கொழுக்கட்டைகளை ஸ்நாக்ஸ் ஆக அனைவரும் சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு எப்பொழுதும் ஒரே மாதிரியாக செய்து கொடுக்காமல் விநாயக சதுர்த்தி அன்று மட்டுமே செய்யக்கூடிய இந்த கொழுக்கட்டையை அடிக்கடி உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -

என்னதான் பல கொழுக்கட்டைகள் இருந்தாலும் இன்று நாம் செய்யக்கூடிய கொழுக்கட்டை டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை. கொழுக்கட்டை என்றாலே ஆரோக்கியமானது தான் அதிலும் டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை இன்னும் ஆரோக்கியமானதாகும். ஏனென்றால் டிரை ஃப்ரூட்ஸ் உடம்பிற்கு பலவிதமான நன்மைகளை சேர்க்கக் கூடியது.

உதாரணமாக முடி உதிர்தல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் ரத்த சோகையை குணப்படுத்துதல் என டிரை ப்ரூட்ஸ் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் நம் உடம்பிற்கு ஏற்படும். அதிலும் இந்த கொழுக்கட்டை செய்து சாப்பிடும் பொழுது இன்னும் அதிக சுவையாக இருக்கும். இந்த சுவையான இனிப்பான டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டையை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

Print
No ratings yet

டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை | Dry Fruits Kozhukattai

பொதுவாக நாம் ஆவிகள் வேகவைத்த சாப்பிடக்கூடிய எல்லா உணவுகளுமே நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமானது.அந்த வகையில் ஆவியில் வேகவைத்த உண்ணக்கூடிய கொழுக்கட்டையும் நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. பெரும்பாலும் இந்த கொழுக்கட்டைகளை ஸ்நாக்ஸ் ஆக அனைவரும் சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்குஎப்பொழுதும் ஒரே மாதிரியாக செய்து கொடுக்காமல் விநாயக சதுர்த்தி அன்று மட்டுமே செய்யக்கூடிய இந்த கொழுக்கட்டையை அடிக்கடி உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Dry Fruits Kozhukattai
Yield: 4
Calories: 345kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் அரிசி மாவு
  • 10 பேரிச்சம்பழம்
  • 10 முந்திரி
  • 10 பாதாம்
  • 10 கருப்பு திராட்சை
  • 10 பிஸ்தா
  • 1/4 கப் வெல்லம்
  • 4 டீஸ்பூன் பொட்டுக்கடலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உப்பு சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதித்த உடன் அரிசி மாவை போட்டுகலந்து கெட்டியா ஆன பிறகு வைத்துக் கொள்ளவும்.
  • முந்திரி பாதாம், பிஸ்தா பொட்டுக்கடலை அனைத்தையும் முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாகஅரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு பேரிச்சம்பழம் திராட்சை வெல்லம் சேர்த்து மறுபடியும் கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் இதுதான் நாம் கொழுக்கட்டை உள்ளே வைக்க போகின்ற பூரணம்.
  • இப்பொழுது நாம் கலந்து வைத்துள்ள அரிசி மாவில் இருந்து ஒரு சிறிய உருண்டையாக எடுத்து அதை கையிலேயேகிண்ணம் போல் செய்து கொள்ள வேண்டும்.
  • அதில் நாம் செய்து வைத்துள்ள பூரணத்தை போட்டு தேவையான வடிவத்தில் அதனை மடித்துக் கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது அனைத்து அரிசி மாவில் இதே போல் செய்த பிறகு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இந்தகொழுக்கட்டைகளை ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான ட்ரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 345kcal | Carbohydrates: 13.5g | Cholesterol: 5.4mg | Sodium: 231mg | Potassium: 456mg | Calcium: 12mg

இதையும் படியுங்கள்: இந்த 4 பொருள் போதும் ருசியான கம்மங்கொழுக்கட்டை வீட்டிலயே ஈஸியாக செய்து விடலாம் அவசியம் ட்ரை பண்ணி பாருங்க!

-விளம்பரம்-