காலை உணவிற்கு எப்பொழுதும் இட்லி, தோசை என்றே செய்து கொடுக்காமல் இது போன்று முட்டை அடை செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கும் மதியம் உணவாக செய்து கொடுக்கலாம். மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.
எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
முட்டை அடை | Egg Adai Recipe In Tamil
காலை உணவிற்கு எப்பொழுதும் இட்லி, தோசை என்றே செய்து கொடுக்காமல் இது போன்று முட்டை அடை செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கும் மதியம் உணவாக செய்து கொடுக்கலாம். மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- தோசை கல்
தேவையான பொருட்கள்
- 2 முட்டை
- 2 பெரிய வெங்காயம்
- ¼ டீஸ்பூன் மிளகாய் தூள்
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- கறிவேப்பிலை ஒரு கொத்து
- எண்ணெய் தேவைக்கு
அரைக்க:
- 1 கப் தேங்காய் துருவல்
- ½ டீஸ்பூன் சோம்பு
- ½ டீஸ்பூன் கசகசா
- 3 பச்சை மிளகாய்
செய்முறை
- வெங்காயம், கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
- முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும்.
- அடித்து வைத்திருக்கும் முட்டையில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, அரைத்த தேங்காய் விழுது, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்.
- அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் விட்டு முட்டை கலவையை அடை போல் ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு சிவந்த்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
- இப்பொழுது முட்டை அடை தயார்.