சுவையான முட்டை போண்டா சுலபமாக வீட்டிலேயே இப்படி தயாரித்துப் பாருங்கள்! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!!!

- Advertisement -
Print
No ratings yet

முட்டை போண்டா | Egg Bonda Recipe In Tamil

கடைகளில் வாங்கி சாப்பிடும் போண்டாவை விட நாம் வீட்டிலேயே செய்யும் இந்த முட்டை போண்டா ரொம்பவே சுவையாக இருக்கும். நல்ல ஆரோக்கியமுள்ளஇந்த முட்டை போண்டா செய்வதற்கு ரொம்பவே சுலபம் தான். முட்டையை வேக வைத்து, பஜ்ஜி மாவுதயாரித்து செய்யும் இந்த முட்டை போண்டா வித்தியாசமான நல்ல சுவையுடன் இருக்க போகிறது.முட்டை போண்டா எளிதாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக்கொள்ள இருக்கிறோம்.உடம்ற்க்கு ஆரோக்கியம் கொடுக்கும்புரதச் சத்து நிறைந்த இந்த முட்டை போண்டாவை இப்படி ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள்.இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு சமைக்க வேண்டும் என்பதைஇந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: egg bonda
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 5 முட்டை
  • 1/2 கப் கடலை மாவு
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

  • முதலில் முட்டை வேக வைத்து, முட்டையின் ஓட்டை நீக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அதனை இரண்டாகவோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தலாம்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முட்டையை கடலை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான முட்டை போண்டா ரெடி

Nutrition

Serving: 300g | Calories: 245kcal | Carbohydrates: 199g | Cholesterol: 1mg | Sodium: 233mg | Potassium: 3.2mg | Vitamin A: 13IU | Calcium: 23.34mg