சாதத்துக்கு கூட வச்சு சாப்பிட பக்காவான ஒரு முட்டை குடைமிளகாய் ப்ரை இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

- Advertisement -

சாப்பாட்டுக்கு தொட்டுக்க ஏதாவது அசைவ கூட்டு சாப்பிடணும்னு தோணுதா ஆனா அசைவம் எடுக்குறதுக்கு காசு இல்லையா அப்போ லோ பட்ஜெட் அசைவமான இந்த முட்டையை வைத்து கூடவே கொஞ்சம் குடைமிளகாயும் சேர்த்து சூப்பரான அட்டகாசமான ஒரு முட்டை குடைமிளகாய் ப்ரை செய்யலாம். இந்த முட்டை குடைமிளகாய் ப்ரைஸ் என்று தயிர் சாதம் தக்காளி சாதம் குஸ்கா இதுக்கெல்லாம் தொட்டுக்கிட்டு சாப்பிட்டா டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். நல்ல காரசாரமா செஞ்சு இதை ஏன் சாதத்துக்கும் போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும்.

-விளம்பரம்-

நீங்க எத்தனையோ முட்டை ப்ரை செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரே ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு ட்ரை பண்ணி பாருங்க. கண்டிப்பா இதோட டேஸ்ட் உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இது கூடவே நம்ம நிறைய குடைமிளகாயும் சேர்க்கிறதால முட்டையும் குடைமிளகாயும் சேர்ந்து ஒரு சூப்பரான வாசனையோட டேஸ்டும் ரொம்பவே அட்டகாசமா இந்த ஃப்ரை உங்களுக்கு கிடைக்கும். ரசம் சாதத்துக்கு கண்டிப்பா இந்த ஃப்ரை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் உங்க வீட்ல எப்ப ரசம் சாதம் செஞ்சாலும் இந்த ஃப்ரை தான் நீங்க செய்வீங்க அந்த அளவுக்கு ரசம் சாதம் கூட வச்சு சாப்பிட ஒரு சூப்பரான காமினேஷன்.

- Advertisement -

சுட சுட இந்த ப்ரை சாப்பிடும்போது இன்னும் சாப்பிட்டுகிட்டே இருக்கணும் அப்படின்னு தோணும்.உங்க குழந்தைகளுக்கு முக்கியமா இந்த ஃப்ரை ரொம்பவே பிடிக்கும். நம்மளோட குழந்தைகளுக்கு ஏதாவது புதுசு புதுசா செஞ்சு கொடுத்துகிட்டே இருந்தா தான் அவங்களுக்கும் சாப்பிடுவதற்கு கொஞ்சம் இன்ட்ரஸ்டா இருக்கும் அந்த வகையில உங்க குழந்தைகளோட புது இன்ட்ரஸ்டிங்கான ஒரு ரெசிபி இல்ல இந்த முட்டை குடைமிளகாய் ஃப்ரையும் சேர்ந்திடும். அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும். இப்ப வாங்க இந்த அட்டகாசமான முட்டை குடைமிளகாய் ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
5 from 1 vote

முட்டை குடைமிளகாய் ப்ரை | Egg Capsicum Fry In Tamil

முட்டை ப்ரை செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரே ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு ட்ரை பண்ணி பாருங்க. கண்டிப்பா இதோட டேஸ்ட் உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இது கூடவே நம்ம நிறைய குடைமிளகாயும் சேர்க்கிறதால முட்டையும் குடைமிளகாயும் சேர்ந்து ஒரு சூப்பரான வாசனையோட டேஸ்டும் ரொம்பவே அட்டகாசமா இந்த ஃப்ரை உங்களுக்கு கிடைக்கும். ரசம் சாதத்துக்கு கண்டிப்பா இந்த ஃப்ரை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் உங்க வீட்ல எப்ப ரசம் சாதம் செஞ்சாலும் இந்த ஃப்ரை தான் நீங்க செய்வீங்க அந்த அளவுக்கு ரசம் சாதம் கூட வச்சு சாப்பிட ஒரு சூப்பரான காமினேஷன்.  உங்க குழந்தைகளோட புது இன்ட்ரஸ்டிங்கான ஒரு ரெசிபி இல்ல இந்த முட்டை குடைமிளகாய் ஃப்ரையும் சேர்ந்திடும். அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும்.
 
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Egg Capisicum Fry
Yield: 3
Calories: 300kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 முட்டை
  • 1/2 கப் பச்சை குடைமிளகாய்
  • 1/2 கப் சிவப்பு குடைமிளகாய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 4 பல் பூண்டு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முட்டையை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு மிளகு கறிவேப்பிலை அனைத்தையும் தட்டி சேர்த்துக் கொள்ளவும்
  • பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்
  • பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லி தூள் சாம்பார் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  • பிறகு அதில் வெட்டி வைத்துள்ள குடைமிளகாய்களை சேர்த்து நன்றாக வதக்கவும்
  • பிறகு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கிய பிறகு இறுதியாக முட்டையின் மஞ்சள் கருவையும் சேர்த்து மல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான முட்டை குடை மிளகாய் ஃப்ரை தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 300kcal | Carbohydrates: 245g | Protein: 21g | Cholesterol: 1mg | Sodium: 212mg | Potassium: 3.2mg | Vitamin A: 13IU | Calcium: 23.34mg