Home ஸ்நாக்ஸ் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை சில்லி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை சில்லி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

சிக்கன் சில்லி உலகம் முழுவதும் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது வித்தியாசமான முட்டை சில்லி. சிக்கன் சில்லியை போன்றே இவையும் மிகவும் சுவையாக மற்றும் நன்கு மொறு மொறுப்பாகவும் இருக்கும். பொதுவாக வீட்டில் முட்டை இருந்தால் அதை அவித்து, ஆம்லெட் போட்டு அல்லது குழம்புகளில் சேர்த்து சாப்பிடுவோம். ஆனால் எப்போதாவது முட்டை சில்லி செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா.? இல்லையென்றால் வீட்டிலேயே முட்டை வைத்து ஒரு முறை இந்த முட்டை சில்லி செய்து பாருங்கள். இது வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். மீண்டும் இதனை அடிக்கடி சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் அளவிற்கு இந்த ரெசிபி இருக்கும். தட்டு நிறைய வைத்து கொடுத்தாலும் ஒன்று கூட மிச்சம் இல்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள்.

-விளம்பரம்-

இதை நீங்கள் மாலை நேர ஸ்நாக்ஸாக சூடாக பரிமாறலாம். முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6, எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது மற்றும் எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது. பொதுவாக முட்டையை உண்ண அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு முட்டையை இவ்வாறு சில்லி செய்து கொடுத்தால் அதை அவர்கள் விரும்பி உண்பார்கள். அது மட்டுமின்றி இன்னும் வேண்டும் என்று தானாக கேட்டு உண்பார்கள்.

Print
No ratings yet

முட்டை சில்லி | Egg Chilli Recipe In Tamil

சிக்கன் சில்லி உலகம் முழுவதும் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது வித்தியாசமான முட்டை சில்லி. சிக்கன் சில்லியை போன்றே இவையும் மிகவும் சுவையாக மற்றும் நன்கு மொறு மொறுப்பாகவும் இருக்கும். பொதுவாக வீட்டில் முட்டை இருந்தால் அதை அவித்து, ஆம்லெட் போட்டு அல்லது குழம்புகளில் சேர்த்து சாப்பிடுவோம். ஆனால் எப்போதாவது முட்டை சில்லி செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா.? இல்லையென்றால் வீட்டிலேயே முட்டை வைத்து ஒரு முறை இந்த முட்டை சில்லி செய்து பாருங்கள். இது வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். மீண்டும் இதனை அடிக்கடி சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் அளவிற்கு இந்த ரெசிபி இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: snacks
Cuisine: Indian
Keyword: Egg Chilli
Yield: 4 People
Calories: 67kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி
  • 1 இட்லி பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 7 முட்டை
  • 1/2 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டீஸ்பூன் சிக்கன் 65 மசாலா
  • 1/2 டீஸ்பூன் கலர் பவுடர்
  • 3 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் பட்டர்

செய்முறை

  • முதலில் ஒரு பவுளில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மஞ்சள் தூள், மிளகு தூள், சீரகத்தூள், உப்பு, சில்லி பிளக்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின் ஒரு பவுளில் பட்டர் தடவி அதில் கலக்கிய முட்டையை ஊற்றி இட்லி பானையில் வைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வேகவைத்த முட்டையை வெளியே எடுத்து ஆற வைத்து சதுரமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் சோள மாவு, அரிசி மாவு, காஷ்மீர் மிளகாய்த்தூள், சிக்கன் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, கலர் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • அதன்பிறகு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள முட்டையை மசாலாவில் சேர்த்து பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான முட்டை சில்லி தயார்.

Nutrition

Serving: 350g | Calories: 67kcal | Carbohydrates: 0.6g | Protein: 6.64g | Fat: 4.7g | Sodium: 168mg | Potassium: 171mg | Vitamin A: 79IU | Calcium: 24mg | Iron: 9.1mg

இதனையும் படியுங்கள் : முட்டை மிளகு வறுவல் ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! காரசாரமான ருசியில் அட்டகாசமாக இருக்கும்!