சிம்பிளான ருசியான முட்டை தொக்கு இப்படி செஞ்சு பாருங்க, வேறு குழம்பை தேட மாட்டீங்க!

- Advertisement -

முட்டை வைத்து நாம் செய்யக்கூடிய ரெசிபிஸ் அனைத்துமே மிகவும் சுவையாக இருக்கும். ஆம்லெட், ப்ரெட் ஆம்லெட் முட்டை பணியாரம்,முட்டை பொடிமாஸ், முட்டை பிரியாணி, முட்டை கிரேவி முட்டை குழம்பு என முட்டை வைத்து செய்யக்கூடிய அனைத்துமே மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் முட்டை வைத்து செய்யக்கூடிய ஒரு சிம்பிளான முட்டை தொக்கு எப்படி செய்வது என்று தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

இந்த சிம்பிளான முட்டை தொகை நாம் இட்லி, தோசை சப்பாத்தி பிரியாணி வெறும் சாதம் என அனைத்திற்குமே வைத்து சாப்பிடலாம் சுவை மிக அருமையாக இருக்கும். மிக மிக ருசியாகவும் இருக்கும். இந்த சிம்பிளான முட்டை தொக்கு நாம் சீக்கிரமாகவே செய்து முடித்து விடலாம்.

- Advertisement -

நாம் பிரியாணி செய்யும் பொழுது சைட் டிஷ் ஆக தொட்டு சாப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்றால் இந்த முட்டை தொக்கு செய்து சாப்பிடலாம் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு இந்த முட்டை தொக்கு மிகவும் அருமையாக இருக்கும். மிகவும் குறைவான பொருட்களை வைத்தேன் நம்மால் இந்த முட்டை தொக்கு செய்து முடித்து விட முடியும். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க இந்த சிம்பிளான முட்டை தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 2 votes

முட்டை தொக்கு | Egg Curry Recipe In Tamil

முட்டை வைத்து நாம் செய்யக்கூடிய ரெசிபிஸ் அனைத்துமேமிகவும் சுவையாக இருக்கும். ஆம்லெட், ப்ரெட் ஆம்லெட் முட்டை பணியாரம்,முட்டை பொடிமாஸ்,முட்டை பிரியாணி, முட்டை கிரேவி முட்டை குழம்பு என முட்டை வைத்து செய்யக்கூடிய அனைத்துமேமிகவும் ருசியாக இருக்கும். ஆனால் முட்டை வைத்து செய்யக்கூடிய ஒரு சிம்பிளான முட்டைதொக்கு எப்படி செய்வது என்று தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். மிகவும் குறைவான பொருட்களை வைத்தேன் நம்மால் இந்த முட்டைதொக்கு செய்து முடித்து விட முடியும். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் இதனைவிரும்பி சாப்பிடுவார்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Egg Thokku
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 முட்டை
  • 3 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1/2 கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • 1 பச்சை மிளகாய்
  • 4 பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முட்டையை வேக வைத்து உரித்து அதனை இரண்டு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு, சோம்பு கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • பிறகு வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் பச்சை மிளகாய்மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்க்கவும். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • இப்பொழுது அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதித்த பிறகு வெட்டி வைத்துள்ள முட்டையை அதில் சேர்த்துவிடவும்.
  • முட்டையை சேர்த்த பிறகு அதிகமாக கிளறக் கூடாது ஐந்து நிமிடங்கள் நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லிஇலைகளை சேர்த்து இறக்கினால் சிம்பிளான முட்டை தொக்கு சுவையான முறையில் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 245kcal | Carbohydrates: 132g | Cholesterol: 1mg | Sodium: 233mg | Potassium: 13.2mg | Vitamin A: 13IU | Calcium: 23.34mg

இதையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான முட்டை பணியார குழம்பு இப்படி ஒரு தடவை மட்டும் செய்து பாருங்க! நீங்களே அடிக்கடி செய்வீங்க!