- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH
முட்டை குழம்பு என்றாலே அனைவர்க்கும் மிகவும் பிடித்த குழம்பாகும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையில் உடலுக்கு தேவையான நன்மைகள் அடைங்கியுள்ளது. முட்டையில் அத்தியாவசிய தாதுக்கள் வைட்டமின்கள் உள்ளன. இதனால் தான் முட்டையை சூப்பர் ஃபுட் என்று சொல்வார்கள். முட்டை குழம்பு அல்லது முட்டை பணியார குழம்பு ஒரு சுவையான மற்றும் மிகவும் சுலபமான குழம்பு வகை. இது இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, சாதம், சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, சீரக சாதம், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். முட்டை குழம்பு சுவையுடன் கூடிய ஆரோக்கியம் மிகுந்த உணவு வகை. முட்டை குழம்பு பல விதங்களில் செய்யப்படுகிறது. வெங்காயம், தக்காளி கொண்டு மசாலா போல் செய்து அதனுடன் முட்டை சேர்த்துக் கலக்கலாம்.
இந்த குழம்பை முட்டை தவிர வேகவைத்த காய்கறிகள், உருளைக்கிழங்கு, போன்றவற்றை கொண்டும் செய்யலாம். ஒவ்வொருவரும் முட்டை குழம்பினை பல ஸ்டைலில் செய்வார்கள். பெரும்பாலும் முட்டை குழம்பை நாம் மசாலா அரைத்து ஊற்றி கொதித்தவுடன், அதில் வேக வைத்த முட்டையை போட்டு கொதிக்க வைத்து சுவைப்போம். ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் குழம்பு கொஞ்சம் வித்தியாசமான ஒன்றாகும். வேக வைத்த முட்டையில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் அடங்கியுள்ளது. நாம் டேஸ்டியான முறையில் முட்டை பணியார குழம்பு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். இந்த முட்டை குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி சப்பாத்திக்கும் அற்புதமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த குழம்பு இருக்கும்.
இதனையும் படியுங்கள் : ருசியான முட்டையை சுக்கா செய்து பாருங்க பார்க்கும்போதே நாக்கு ஊறும்! ஒரு சட்டி சாதம் இருந்தாலும் பத்தாது!
Ingredients
Method
முதலில் வெங்காயம் மற்றும் தேங்காய் துருவலை ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
ஒரு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதுப் எண்ணெய் சேர்த்து நாம் கலந்து வைத்த முட்டையை ஊற்றி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அதனுடன் நறுக்கி வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வத்கவும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்ததும் முட்டை பணியாரத்தை குழம்பில் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான முட்டை பணியார குழம்பு தயார்.






